Published:Updated:

PS1 Audio launch Live Updates: தளபதி பாடல் ஒலிக்க மேடையில் கமல் - ரஜினி

'பொன்னியின் செல்வன்' ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா
Live Update
'பொன்னியின் செல்வன்' ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா

மணிரத்னம் இயக்கத்தில் இந்த மாதம் வெளியாக இருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவின் லைவ் அப்டேட்ஸ்!

07 Sep 2022 2 AM

"மணிரத்னம் தானாக வளர்ந்து வந்தார். மணி சாரை பார்த்தா பெரிய பெரிய ஜாம்பவான்களே எழுந்து நிற்பாங்க!" - ரஜினி

06 Sep 2022 10 PM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேடையேறிய த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய்!

PS1 Audio launch Live Updates:  தளபதி பாடல் ஒலிக்க மேடையில் கமல் - ரஜினி

இந்த அரங்கத்தைப் பார்க்கும்போது என் கண்ணே பட்டுவிடும் போல் இருக்கிறது. கமல் சார் ரஜினி சார் போன்றோரை பார்த்துக்கொண்டே இருக்கலாம். என் கனவை நினைவாக்கிய மணி சாருக்கு மிக்க நன்றி." என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் த்ரிஷா

`நமஸ்தே நமஸ்காரம் எல்லாருக்கும் வணக்கம்!' என்று பேசத் தொடங்கிய ஐஸ்வர்யா ராய். எனக்கு இங்க வந்தது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. எப்போதும் என்னோட குரு மணி சார் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

07 Sep 2022 2 AM

வெளியானது 'பொன்னியின் செல்வன்' டிரெய்லர்!

06 Sep 2022 10 PM

விழா மேடையில் ஷங்கர்

``Pan India - ங்கிற வார்த்தைய இன்னைக்கு எல்லாரும் யூஸ் பண்றாங்க. ஆனா,உண்மையான பான் இந்தியா இயக்குனர் மணிசார் தான். மணிரத்னத்தின் கீதாஞ்சலி படத்தின் `ஓ ப்ரியா ப்ரியா' பாடல் மற்றும் தளபதி பாடல்கள் பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும். அவைதான் எனக்கான இன்ஸ்பிரேஷனாக இருந்தன. நேத்துதான் இந்தியன் -2 முதல் ஷெடியூல் முடிச்சோம்." - என நெகிழ்ந்து பேசினார் இயக்குநர் ஷங்கர்

06 Sep 2022 9 PM

வெளியானது பாடல்கள்:

`பொன்னி நதி' பாடல் பாடி முடித்து பம்பா பாக்யாவை நினைவு கூர்ந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

06 Sep 2022 9 PM

சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த யுவன்

ஆடியோ வெளியீட்டு விழாவில் சர்ப்ரைஸ் என்ட்ரியாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் கலந்துகொண்டனர்

06 Sep 2022 9 PM

நான் கேமராமேன் இல்ல, மணி ரத்னம் ரசிகர் -ரவிவர்மன் நெகிழ்ச்சி 

06 Sep 2022 9 PM

மணிரத்னம் போல் நடித்துக் காட்டி அரங்கத்தையே சிரிப்பு வெள்ளத்தில் ஆழ்த்தினார், நடிகர் ஜெயராம்.

PS1 Audio launch Live Updates:  தளபதி பாடல் ஒலிக்க மேடையில் கமல் - ரஜினி
06 Sep 2022 9 PM

"தொழில்நுட்ப கலைஞர்களான மணிரத்ன சோழன், ரகுமான் தேவன் இருவருக்கும் பாராட்டுக்கள்!"- பார்த்திபன்.

06 Sep 2022 9 PM

5 மொழிகளில் வணக்கத்தைக் கூறி உரையைத்  தொடங்கிய பார்த்திபன், "ரத்ன சுருக்கமா யார் வேணாலும் பேசலாம், ஆனா மணிரத்னம் மாதிரி சுருக்கமா யாராலயும் பேசமுடியாது!"

06 Sep 2022 8 PM

 ரஜினி - கமல் இருவரும் வருகை தந்து கட்டியனைத்து விசாரித்து கொண்டார்கள்.

PS1 Audio launch Live Updates:  தளபதி பாடல் ஒலிக்க மேடையில் கமல் - ரஜினி
06 Sep 2022 8 PM

ஏ.ஆர்.ரஹ்மான் - மணிரத்னத்தின் 30 ஆண்டுகால பயணத்தை கொண்டாடும் வகையில் இசை நிகழ்ச்சி.

PS1 Trailer and Audio Launch
PS1 Trailer and Audio Launch

'பொன்னியின் செல்வன்-1' ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் மணி ரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் 30 ஆண்டுகால பயணத்தை கொண்டாடும் விதமாக இதுவரை அவர்கள் கூட்டணியில் வந்த பாடல்களைப் பாடி வருகின்றனர்.

06 Sep 2022 8 PM
06 Sep 2022 8 PM

'பொன்னியின் செல்வன்' டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா!

Link- https://bit.ly/VikatanDiscord

லைவ் அப்டேட்ஸுக்கு விகடனின் Discord சர்வரில் இணைந்திடுங்கள்!

Vikatan Discord
Vikatan Discord