Published:Updated:

“பேத்திக்கு சேர்த்து வெச்சுட்டுப் போகணும்!”

`பூ'ராமு
பிரீமியம் ஸ்டோரி
`பூ'ராமு

படத்தில், இரவு முழுக்க ஆட்டைத் தேடுவதுதான் க்ளைமாக்ஸ் காட்சி. விடிய விடிய தேடின களைப்பு இருந்தாதான் உணர்வுபூர்வமா வரும்.

“பேத்திக்கு சேர்த்து வெச்சுட்டுப் போகணும்!”

படத்தில், இரவு முழுக்க ஆட்டைத் தேடுவதுதான் க்ளைமாக்ஸ் காட்சி. விடிய விடிய தேடின களைப்பு இருந்தாதான் உணர்வுபூர்வமா வரும்.

Published:Updated:
`பூ'ராமு
பிரீமியம் ஸ்டோரி
`பூ'ராமு

`பூ'ராமு கதையின் நாயகனாக நடித்த ‘கிடா’ படம் அவரது மறைவுக்குப் பிறகு ரிலீஸாகிறது. முக்கிய கதாபாத்திரங்களில் ஏகப்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்தவரின் திடீர் மறைவு, திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்திவிட்டது. ‘கிடா' பட இயக்குநர் ரா.வெங்கட்டிடம் பேசியபோது, ‘பூ’ ராமுவின் மீதான மரியாதை இன்னும் கூடி, இதயம் கனத்துப்போனது.

‘‘பேரன் தீபாவளிக்குப் புதுத்துணி போடணும்னு ஆசைப்படுறான். ‘கண்டிப்பா வாங்கித்தர்றேன்’னு தாத்தா பிராமிஸ் பண்றாரு. கீத்து முடையுற வேலை பார்க்கும் தாத்தாகிட்ட காசு இல்ல. ஆசை ஆசையாய் வளர்த்துவரும் ஆட்டை வித்தாவது பேரனுக்குப் புதுத்துணி வாங்கிக் கொடுக்க நினைக்கிறாரு. ஆனா, அந்த ஆடு தீபாவளிக்கு முந்தைய நாள் திருடு போயிடுது. அப்பா- அம்மா இல்லாத தன் பேரனோட ஆசையை நிறைவேற்ற, எப்படியாவது காணாமப்போன ஆட்டைக் கண்டுபிடிக்கணும்னு நைட் முழுக்க தாத்தா தேடிக்கிட்டே இருக்காரு. ஆடு கிடைத்ததா, பேரன் ஆசைப்பட்ட மாதிரி புதுத்துணி வாங்கிக் கொடுத்தாரா என்பதுதான் ‘கிடா’ படத்தின் கதை. ‘பூ' ராமு சார் இதுல தாத்தாவாகவும், இயக்குநர் விருமாண்டியோட மகன் பேரனாகவும் நடிச்சிருக்காங்க’’ என்கிறார் வெங்கட். ‘பூ' ராமுவை இந்தக் கதாபாத்திரத்திற்குத் தேர்ந்தெடுத்ததற்கு அவரது எதார்த்தமான நடிப்பு காரணமாக இருந்தாலும், வெங்கட் கூறும் இன்னொரு காரணம் ஆச்சர்யமானது.

பேத்தியுடன் பூ ராமு
பேத்தியுடன் பூ ராமு

``என் தாத்தா பேரு செல்லையா. தாத்தா சாயல் அப்படியே ராமு சாருக்கு உண்டு. அதனாலதான் அவரைத் தேர்ந்தெடுத்தேன். தாத்தாவோட பேரைத்தான் ராமு சாருக்கு இந்தப் படத்துல வெச்சிருக்கேன். இந்தக் கதை நடக்குறது எல்லாமே மதுரைதான். ராமு சார் பார்க்க தென் மாவட்டத்துக்காரர் மாதிரியே இருப்பார். ஆனா, அவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை. லோ பட்ஜெட் ராஜ்கிரண்ணு இவரைச் சொல்லலாம். அற்புதமாக நடிச்சிருக்கார் ராமு சார். ‘கிடா’ படத்தில் பேரன்மீது வைத்திருந்த பேரன்பைப் போலவே, ரியல் வாழ்க்கையில் தன் பேத்தியின் மீது பேரன்பு கொண்டிருந்தார் அவர்” என்கிறார் வெங்கட்.

“இந்தப் படத்தோட சம்பளம் பற்றி எங்ககிட்ட பேசும்போது, ‘முன்னாடியெல்லாம் கொடுக்கிறதை வாங்கிட்டு நடிச்சிக்கிட்டிருந்தேன். இப்போ, எனக்கு ஒரு பேத்தி இருக்கு. என் மகளுக்கும் பேத்திக்கும் எதுவும் செஞ்சதில்ல. இனிமேலாவது ஏதாவது சேர்த்து வெச்சுட்டுப் போகணும்’னு சொல்லிக் கேட்டாரு. அப்போகூட, இவ்ளோ வேணும்னு கண்டிஷன் எல்லாம் போடல. அடிக்கடி பேத்தியைப் பற்றிதான் சொல்லிக்கிட்டே இருப்பாரு. அவருடைய ‘நெடுநல்வாடை’ படத்தைப் பார்த்துட்டுதான் இந்தக் கதைக்கும் தேர்ந்தெடுத்தோம். படத்தை முடிச்சாச்சு. அவருடைய போர்ஷன் ஒர்க் எல்லாத்தையும் முடிச்சுக் கொடுத்துட்டாரு. ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. ஆனா, படத்தைப் பார்க்கத்தான் அவர் உயிரோட இல்ல.

“பேத்திக்கு சேர்த்து வெச்சுட்டுப் போகணும்!”

படத்தில், இரவு முழுக்க ஆட்டைத் தேடுவதுதான் க்ளைமாக்ஸ் காட்சி. விடிய விடிய தேடின களைப்பு இருந்தாதான் உணர்வுபூர்வமா வரும். அதனால, ஈவ்னிங் 6 மணியிலிருந்து மறுநாள் மதியம்வரை ஷூட்டிங் போகும். ‘இரவு முழுக்கத் தூங்கக்கூடாது. அப்போதான், அந்தக் களைப்பு முகத்துல தெரியும்’னு சொன்னோம். அதுக்கு விளையாட்டா கோபப்பட்டாரு. ஆனாலும், இரவு முழுக்க தூங்காம நடிச்சிக் கொடுத்தாரு. டப்பிங் பேசும்போது அந்தக் காட்சியைப் பார்த்துட்டு, ‘நான்கூட கோபப்பட்டுட்டேன். ஆனா, அந்தக் காட்சி தத்ரூபமா வந்திருக்கு’ன்னு பாராட்டினாரு.

மகள் மகாலட்சுமி
மகள் மகாலட்சுமி

ஒரு மலை அடிவாரத்துல உச்சி வெயிலில் நடக்கற சீன். ஒரே ஷாட்டுல ரொம்ப தூரம் நடந்து வரணும். ஏற்கெனவே அவருக்குக் கால் வலி இருக்குன்னு சொல்லிக்கிட்டே இருந்தாரு. ஆனாலும் வலியைப் பொருட்படுத்தாம நடிச்சிக் கொடுத்தாரு. 22 நாள் ஷூட்டிங். அவருக்கு கேரவன், தனி ரூம் எதுவுமே கொடுக்கல. அவரும் கேட்கல. எங்க சூழலைப் புரிஞ்சுக்கிட்டாரு. மலையடிவார மரத்தடியில எங்கயாவது உட்கார்ந்திருப்பாரு. ஷூட்டிங் ஆரம்பிச்சதும் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு ஷாட்டுக்கு ரெடியாகிடுவாரு.

ரா.வெங்கட்
ரா.வெங்கட்

படம் பார்த்த சென்சார் அதிகாரிங்க, அவருக்கு போன் செய்து பாராட்டினதா எங்ககிட்ட சொல்லிக்கிட்டிருந்தாரு. ஏகாதசியோட வரிகளில் மூன்று பாடல்கள் வந்திருக்கு. அந்த மூன்று பாடல்களுமே ராமு சாருக்குத்தான். ‘நெடுநல்வாடை' படத்துக்குப்பிறகு இந்தப் படத்துல நாயகனா நடிச்சிருக்கிறதால படத்தை ரொம்பவே எதிர்பார்த்தார். வாய்ப்புகள் அதிகம் வரும்னு நம்பினார். நல்ல மனிதர். எளிமையானவர். எப்பவும் சமூகப் பார்வையோட இருப்பார். ஷூட்டிங்கில் எப்பவும் அன்றைய அரசியல் நிகழ்வுகள் பத்திப் பேசுவார். நம்மை விட்டுப் போயிருந்தாலும் அவர் பேசப்பட்டுக்கிட்டே இருப்பாரு” என்று சொல்லும்போதே வெங்கட் குரலில் தழுதழுப்பு.