Published:Updated:

கமல், விக்ரம், ராஜ்கிரண், வேல.ராமமூர்த்தி... இராமநாதபுரம்னா தண்ணியில்லா காடு மட்டுமில்ல!

திரைப்படத்துறையில் சாதனை படைத்த, படைத்துக்கொண்டிருக்கிற பல கலைஞர்கள், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

கமல், விக்ரம், ராஜ்கிரண், வேல.ராமமூர்த்தி... இராமநாதபுரம்னா தண்ணியில்லா காடு மட்டுமில்ல!

திரைப்படத்துறையில் சாதனை படைத்த, படைத்துக்கொண்டிருக்கிற பல கலைஞர்கள், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

Published:Updated:

தமிழகத்தில், தண்ணியில்லாக் காடு என்று ராமநாதபுரம் மாவட்டத்தைக் குறிப்பிடுவார்கள். (இன்று சென்னை உட்பட பல மாவட்டங்கள் அப்படித்தான் உள்ளன என்பது வேறு கதை!) ஆனால், அதன் உண்மையான முகம் என்பது வேறு. பல நூற்றாண்டுகளாகப் பெருமைமிக்க மனிதர்கள் வாழ்ந்த பூமி. அரசியல், ஆன்மிகம், கலை இலக்கியம் உட்பட பல்வேறு தளங்களில் சாதனைகளைப் படைக்க சிறந்த ஆளுமைகளைக் கொடுத்த மண் இது.

இது மட்டுமில்லாமல், மக்களுக்கு மிகவும் பிடித்த நவீனக் கலை வடிவமான திரைப்படத்துறையில் சாதனை படைத்த, படைத்துக் கொண்டிருக்கிற பல கலைஞர்கள், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அம்மாவட்ட மக்களுக்கு இன்னும் பெருமையானதாக உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கமல்

kamal
kamal

பரமக்குடி வட்டாரத்தில் முக்கிய வழக்கறிஞராகத் திகழ்ந்த காங்கிரஸ்காரரான சீனிவாசனின் குடும்பத்தை அனைவருக்கும் தெரியும். அக்குடும்பத்தில் பிறந்த கடைசிப் பிள்ளையான கமல்ஹாசன்தான், தமிழ் சினிமாவை சர்வதேசத் தரத்தில் கொண்டுசெல்ல பல பரீட்சாத்த முயற்சிகளைத் தொடர்ந்து செய்துவருகிறார். தற்போது அரசியல்வாதியாகவும் ஒரு ரவுண்டு வந்துகொண்டிருக்கிறார்.

ராஜ்கிரண்

ராஜ்கிரண்!
ராஜ்கிரண்!

கிராமத்துப் பெரியவர், ஹீரோவின் தந்தை போன்ற கேரக்டர்களில் நடித்து, சினிமா ரசிகர்களுக்கு நெருக்கமானவராக அறியப்படும் திரைக்கலைஞரான ராஜ்கிரண் பிறந்த ஊர், கீழக்கரை. இவ்வூர் முழுவதும், இவரது உறவினர்கள் பரவி இருக்கிறார்கள். தொழில் செய்ய சென்னைக்குச் சென்று, பட விநியோகத்தில் இறங்கி, தயாரிப்பாளராக வளர்ந்து, பின்பு ஹீரோவாக நடித்து ஹிட் படங்களைக் கொடுத்தவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செந்தில்

நடிகர் செந்தில்
நடிகர் செந்தில்

தமிழ் சினிமா வரலாற்றில் கவுண்டமணி - செந்தில் ஜோடிக்கு தனி அத்தியாயம் உண்டு. அதில், தன் அப்பாவித்தனமான காமெடியின் மூலம் மக்களைக் கவர்ந்துள்ள செந்தில் பிறந்தது, முதுகுளத்தூர் அருகிலுள்ள இளஞ்செம்பூர் கிராமம். இப்போதும் அந்தக் கிராமத்துக்கும் தனக்கும் உள்ள தொடர்பைத் துண்டித்துவிடாமல் நல்லது, கெட்டதுகளுக்கு வந்து சென்று கொண்டிருக்கிறார், செந்தில்.

விக்ரம்

விக்ரம்
விக்ரம்

விக்ரம் சிறுவயதாக இருந்தபோதே, அரசு ஊழியர்களான அவரது பெற்றோர்கள், ஊரைவிட்டு இடம்பெயர்ந்து சென்னைக்கு வந்துவிட்டாலும், பரமக்குடி மக்கள் நடிகர் விக்ரமை தங்கள் மண்ணின் மைந்தன் என்று கொண்டாடிவருகிறார்கள்.

எஸ்.ஏ.சந்திரசேகர்

ரஜினி, விஜயகாந்த்தை வைத்து அரசியல், சமூகப் புரட்சி பேசும் திரைப்படங்களை எடுத்தும், நடித்தும் பிரபலமானவரும், நடிகர் விஜய்யின் தந்தை என்ற கூடுதல் பெருமையுடன் திரைப்படங்களில் நடித்தும், இயக்கவும் செய்துகொண்டிருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் பிறந்த மண், ராமநாதபுரம் அருகேயுள்ள தங்கச்சிமடம். அருகிலுள்ள முத்துப்பேட்டை, காமன்கோட்டை பள்ளிகளில் பயின்றதாகவும் அப்பகுதி மக்கள் சொல்கிறார்கள். இதன்மூலம், விஜய் தங்கள் மண்ணைச் சேர்ந்தவர் என்று தங்கச்சிமடம் மக்கள் பெருமையுடன் கூறிவருகிறார்கள்.

எஸ்.ஏ. சந்திரசேகர்
எஸ்.ஏ. சந்திரசேகர்

ஆர்.சி.சக்தி

ஆர்.சி.சக்தி
ஆர்.சி.சக்தி

மசாலா சினிமாக்கள் அதிகம் வெளிவந்த 80-களில், யதார்த்த வகை சினிமாக்களை, மக்களை ஈர்க்கும் வகையில் எடுத்த இயக்குநர்களில் ஆர்.சி.சக்தி தனித்துத் தெரிபவர். இவரின் 'சிறை' திரைப்படம் மிகச்சிறந்த படைப்பாக இன்றும் பேசப்படுகிறது. இவர் பிறந்த புழுதிக்குளம், பரமக்குடி அருகில் உள்ளது.

நட்டி நட்ராஜ்

நட்டி
நட்டி

இந்திய அளவில் மதிப்பு மிகுந்த ஒளிப்பதிவாளராக அறியப்படும் 'நட்டி' என்றழைக்கப்படும் நட்ராஜ், சிறந்த நடிகராகவும் வலம் வருகிறார். இவர் பிறந்ததும் வளர்ந்ததும் பரமக்குடிதான்.

வேல.ராமமூர்த்தி

வேல ராம மூர்த்தி
வேல ராம மூர்த்தி

கரிசக்காட்டுப் பகுதியான கமுதி அருகிலுள்ள பெருநாழியைச் சேர்ந்த வேல.ராமமூர்த்தி, ராணுவத்தில் பணியாற்றி, அதன் பின்பு அஞ்சல் துறையில் பணியாற்றியவர். இடதுசாரி சிந்தனையை உள்வாங்கி மக்கள் எழுத்தாளராகவும் புகழ்பெற்றவர். தென்மாவட்ட கதைக்களத்தில் சிறு பாத்திரங்களில் தோன்றி, தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் இன்று பிஸியான நடிகராக வலம் வந்து, பிறந்த மாவட்டத்துக்குப் பெருமை சேர்த்துவருகிறார்.

ஆர்.கே.சுரேஷ்

திரைப்படத் தயாரிப்பாளராக நுழைந்து, பாலாவின் 'தாரை தப்பட்டை' மூலம் மிரட்டும் வில்லனாக அறிமுகமாகி, அப்படியே வளர்ந்து, 'பில்லா பாண்டி'யில் ஹீரோ அவதாரமெடுத்து திரைத்துறையில் முன்னேறி வரும் ஆர்.கே.சுரேஷின் பூர்விகம், ராமநாதபுரம் அருகே உள்ள மண்டபம் ஆகும்.

ஆர்.கே.சுரேஷ்
ஆர்.கே.சுரேஷ்

சமீபத்தில் மறைந்த நடிகர் ரித்தீஷ் பிறந்த மணக்குடி கிராமம் ராமநாதபுரம் அருகே உள்ளது. இதுபோன்ற பல கலைஞர்களைத் தமிழ் சினிமாவுக்கு வழங்கியுள்ளது, வறட்சி மாவட்டமான ராமநாதபுரம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism