Published:Updated:

பவர் ஸ்டார் - `பிக்பாஸ்' மதுமிதா நடிப்பில் வனிதா - பீட்டர் பால் பயோபிக்... க்ளைமேக்ஸ் என்ன தெரியுமா?!

'பவர் ஸ்டார்' சீனிவாசன்

''லாக்டௌனல் எல்லா வீடும் உத்துப் பார்த்த ஒரு வீடு வனிதா-பீட்டர் பால் வீடுதான். வீட்டுக்குள் நடக்க வேண்டியதை வெளியில் நடத்தினா எல்லாரும் பார்க்கத்தான் செய்வாங்க.''

பவர் ஸ்டார் - `பிக்பாஸ்' மதுமிதா நடிப்பில் வனிதா - பீட்டர் பால் பயோபிக்... க்ளைமேக்ஸ் என்ன தெரியுமா?!

''லாக்டௌனல் எல்லா வீடும் உத்துப் பார்த்த ஒரு வீடு வனிதா-பீட்டர் பால் வீடுதான். வீட்டுக்குள் நடக்க வேண்டியதை வெளியில் நடத்தினா எல்லாரும் பார்க்கத்தான் செய்வாங்க.''

Published:Updated:
'பவர் ஸ்டார்' சீனிவாசன்
கடந்த சில மாதங்களாக கொரோனாவையே ஓரங்கட்டி பத்திரிகைகளின் பரபரப்புச் செய்தியாக இருந்தது வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் கல்யாண விவகாரம். பீட்டர் பாலின் மனைவி ஹெலன் ’இந்தத் திருமணம் சட்டவிரோதமானது’ என போலீஸில் புகார் தர தொடர்ந்து வனிதா- ஹெலன் இருவரும் மாறி மாறித் திட்டித் தீர்க்க, சோஷியல் மீடியா முழுக்க இந்தப் பேச்சுதான்!

அடுத்து நடிகைகள் குட்டி பத்மினி, கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ஆகியோர் இந்த விவகாரத்திற்குள் வந்தார்கள். இவர்களையும் ஒரு பிடி பிடித்தார் வனிதா. அதேநேரம் இன்னொருபுறம் சூர்யாதேவி என்கிற பெண் வனிதாவை வீடியோ போட்டு விளாச, அவர் மீதும் புகார் தந்தார் வனிதா. சூர்யாதேவி கைது செய்யப்பட்ட பின் என்ன நடந்ததோ, அவர் தற்போது ஒதுங்கி விட்டார். லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மட்டும் ’பொதுவெளியில் அசிங்கமாகத் திட்டினார்’ என 1.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப, ‘நீங்க எனக்கு ரெண்டரை கோடி தரணும்’ என பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் வனிதா.

'பவர் ஸ்டார்' சீனிவாசன்
'பவர் ஸ்டார்' சீனிவாசன்

'அப்பாடா, ஒருவழியா விவகாரம் முடிஞ்சதா’ எனக் கொஞ்சம் பெருமூச்சுதான் விட்டிருப்போம். அதற்குள் இப்போது ’அமுக்கு டுமுக்கு அமால் டுமால்’ என்கிற டைட்டிலில் வெளியாகப் போகும் ஒரு குறும்படம் குறித்த அறிவிப்பு. இது பீட்டர் பாலின் பயோபிக்காம். பீட்டர் பாலாக நடிப்பவர் பவர் ஸ்டார் சீனிவாசன். ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஹெலனாக மதுமிதா நடிக்கிறார்.

’பவர் ஸ்டார்’ சீனிவாசனையே தொடர்பு கொண்டு கேட்டேன்.

‘’சினிமாக்குத் தியேட்டர் இல்லை. ஊரெல்லாம் கொரோனா ஸ்ட்ரெஸ்ல இருக்கு. ஒரு சேன்ஜா இருக்கும்ணே. அதுவும் போக 'இந்த கேரக்டரை நீங்க பண்ணாத்தான் பொருத்தமாவும் இருக்கும்’னு காமெடி நடிகை ஆர்த்தி கேட்டாங்க. காமெடியான ஸ்கிரிப்ட்தானே நமக்கும் சரிப்பட்டு வரும்? அதனால சரினு சொன்னேன்.

ஷூட் ஒரே நாள்ல முடிஞ்சது. நல்லா வந்திருக்குன்னு சொன்னாங்க. ஆகஸ்ட் 15-ம் தேதி ரிலீஸ் ஆகும்னு நினைக்கேன்’’ என்றவரிடம், "வனிதா மேட்டரை ஆரம்பத்தில் இருந்து ஃபாலோ பண்ணீங்களா?" எனக் கேட்டேன்.

பவர் ஸ்டார் சீனிவாசன்
பவர் ஸ்டார் சீனிவாசன்

"நான் என்ன அவங்க வக்கீலா தம்பி?" எனச் சிரித்தவர், "அது அவங்க பர்சனல் மேட்டர். நான் அதுல கருத்து சொல்லக் கூடாது. ஆனா நடந்ததையெல்லாம் நான் மட்டுமில்ல எல்லாரும்தானே பார்த்தோம். காலையில எந்திரிச்சதும் டிவியைப் போட்டா, அவங்க நியூஸ்தானே வந்திச்சு? கொரோனாவுல செத்தவங்க எண்ணிக்கையைக் கேட்டு பீதியடையறதுக்கு இது பரவால்லனு நினைச்சு வாட்ச் பண்ணேன்.

நடக்கிற சம்பவங்களை படங்களாவோ ஷார்ட் ஃபிலிமாவோ எடுக்கிறது வழக்கமானதுதானே? அந்த மாதிரிதான் ஆர்த்தியின் இந்த முயற்சியும். ஸ்கிரிப்ட் முழுக்க முழுக்க காமெடியா போறதால எனக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு. பீட்டர் பால், வனிதா ரெண்டு பேருமே கூட படம் பார்க்கிறப்ப விழுந்து விழுந்து சிரிப்பாங்கன்னுதான் நான் நினைக்கேன்’’ என்கிறார் பவர்.

ஆர்த்தி
ஆர்த்தி

''படத்தில் அந்த ’லிப் – லாக் சீன்லாம் உண்டா'' என்றால், ''அடப் போங்க தம்பி'’ என வெட்கப்பட்டவர் மூணு மணி நேரப் படத்துலயாச்சும் சில சீன்களைச் சொல்லலாம். முக்கால் மணி நேர டாகுமென்ட்டரியில என்னத்த சொல்றது? இருந்தாலும் ஒரு விஷயத்தை வேணும்னா சொல்றேன். க்ளைமேக்ஸ்ல ஹீரோ கொரோனா வார்டுல இருப்பார்’’ என்கிறார் பவர் ஸ்டார்.

நடிகை ஆர்த்தியிடம் பேசினேன்.

‘’இந்த லாக்டௌனல் எல்லா வீடும் உத்துப் பார்த்த ஒரு வீடுன்னா அது வனிதா - பீட்டர் பால் வீடுதான். வீட்டுக்குள் நடக்க வேண்டியதை வெளியில நடத்தினா எல்லாரும் பார்க்கத்தான் செய்வாங்க. நாம செய்யறப்ப எதிர்வினை இருக்கத்தான் செய்யும். வர்ற எதிர்வினை சீரியஸா எடுத்துக்காமச் சிரிச்சுட்டுக் கடந்து போக வேண்டியதுதான்னு சொல்லியிருக்கேன். நடந்த சம்பவங்களைக் கோவையாக்கினப்ப நல்ல காமெடி ஸ்கிரிப்ட் கிடைச்சது. இறங்கிட்டேன், அவ்ளோதான், மத்தபடி எனக்கு வேற எந்த நோக்கமும் இல்லை’’ என்றார் ஆர்த்தி.

மதுமிதா
மதுமிதா

இந்த ஷார்ட் ஃபிலிம் குறித்து இதுவரை வனிதா தரப்பிலிருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லையாம். இன்று (12/8/20) படத்தின் ப்ரோமோ வெளியாக உள்ளது. அதைப் பார்த்து விட்டு வனிதா ரியாக்ட் செய்யலாம். ஏனெனில், ஹியூமர் சப்ஜெக்ட் என்றாலும், படத்தில் மதுமிதா, பீட்டர் பாலையும் வனிதாவையும் கலாய்க்கும் பல காட்சிகள் இருக்கிறதாம்!