Published:Updated:

பிரபாஸின் சாஹோ படத்தின் டீசர்

அலாவுதின் ஹுசைன்

பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் நடித்த சாஹோ படத்தின் டீசர்

சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் திரைப்படம் 'சாஹோ'.ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் இப்படத்தின் டீசர் இன்று வெளியானது.

சாஹோ
சாஹோ

ராஜமௌலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழியில் உருவாகிய 'பாகுபலி 2' திரைப்படம் பிரபாஸுக்கு சர்வதேச அளவில் ஒரு அடையாளத்தை தந்துள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் சாஹோ' படத்தில் நடித்து வந்தார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் மேக்கிங் காட்சிகள் வெளியாகி பெறும் எதிரிபார்ப்பை ஏற்படுத்தியது.

இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில் தயாராகவுள்ள இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரும் வில்லனாக நீல் நிதின் முகேஷும் நடித்துள்ளனர்.

முன்னதாக, `ஷங்கர் எசான் லாய்' குழுவினர் இசையமைக்க மறுத்த பின்பு ஜிப்ரான் படத்தின் பின்னணி இசையை இயற்றி வருகிறார். `ஆர்மெகடான்', 'மிஷன் இம்பாஸிபிள்', 'டிரான்ஸ்ஃபார்மர்ஸ்' உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்களுக்கு ஸ்டன்ட் காட்சிகள் அமைத்த கென்னி பேட்ஸ் இப்படத்தின் சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளார்.