Published:Updated:

`கன்டென்ட் கரெக்டா இருந்தாலும், விஷுவல் டிஸ்டர்பிங்கா இருக்கணும்!' - பிரபாஸின் பரபர 'சாஹோ' டிரெய்லர்

பிரபாஸின் 'சாஹோ' டிரெய்லர் வெளியாகியுள்ளது.

`பாகுபலி-2' படத்தைத் தொடர்ந்து, நடிகர் பிரபாஸ் நடிக்கும் அடுத்த படமான `சாஹோ', பிரமாண்ட பொருள்செலவில் தயாரிக்கப்பட்டுவருகிறது. இதில், ஷ்ரத்தா கபூர், நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், ஈவ்லின் ஷர்மா, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கு முன்பு, 'ரன் ராஜா ரன்' எனும் தெலுங்குப் படத்தை இயக்கிய சுஜீத் ரெட்டி, இப்படத்தை இயக்குகிறார். 300 கோடி ரூபாய் பொருள்செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுவந்த படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்த நிலையில், தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. பரபர காட்சிகள்... பின்னணி இசை... காட்சித் தொகுப்பு... பிரமாண்டம் என டிரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.