கமல்ஹாசன் நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்' படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
இந்நிலையில் படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்க இருக்கும் நடிகர்கள் யார், யார் என்று விசாரித்தோம். கமல்ஹாசனுடன் மிக முக்கியமானக் கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடிக்கயிருக்கிறார். 1998-ல் இருவரும் சேர்ந்து நடித்த 'காதலா காதலா' படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்குப்பிறகு கமல்ஹாசனுடன், பிரபுதேவா இணைந்து பணியாற்றவில்லை. கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்குப்பிறகு 'விக்ரம்' படத்தின் மூலம் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்கயிருக்கிறார் பிரபுதேவா.

அனிருத் படத்துக்குத் தேவையான முக்கியமானப் பாடல்களை இசையமைத்துக் கொடுத்துவிட்டார். 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி முதல் சென்னையில் தொடங்குகிறது. படப்பிடிப்பு நிறைவடையவே மே - ஜூன் ஆகிவிடும் என்பதால் 'விக்ரம்' படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் திட்டமிடப்படும் எனத் தெரிகிறது.