Published:Updated:

தமிழ்ல வொர்க் பண்றது டபுள் சந்தோஷம்!

ப்ரீத்திஷீல் சிங்
பிரீமியம் ஸ்டோரி
ப்ரீத்திஷீல் சிங்

"பிகில்' படத்துல முதல் முறையா விஜய்கூட வொர்க் பண்ணியிருக்கேன்.

தமிழ்ல வொர்க் பண்றது டபுள் சந்தோஷம்!

"பிகில்' படத்துல முதல் முறையா விஜய்கூட வொர்க் பண்ணியிருக்கேன்.

Published:Updated:
ப்ரீத்திஷீல் சிங்
பிரீமியம் ஸ்டோரி
ப்ரீத்திஷீல் சிங்

`விஜய் 64’-லேயும் நான் இருக்கேன். இரண்டு படத்துலயும் நிறைய விஷயங்கள் பண்ணிருக்கேன்... ஒரே ஒரு வருத்தம்தான். விஜய் `மேன் ஆஃப் ஃபியூ வேர்ட்ஸா' இருக்கார். இன்னும் கொஞ்சம் கூடப் பேசலாம்...’’

தமிழ்ல வொர்க் பண்றது டபுள் சந்தோஷம்!

பீக்ஹவர் ஆர்ஜே போல கேப் விடாமல் பேசுகிறார் ப்ரீத்திஷீல் சிங். ‘பிகில்’ படத்தின் புராஸ்தெட்டிக் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் இவர்தான். பாலிவுட் பிரபலம். ‘பத்மாவத்’, ‘102 நாட் அவுட்’, ‘தாக்கரே’ என ஹிட் படங்களின் பட்டியல் ரொம்ப பெரிசு!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பதான்கோட்டில் பிறந்து எலக்ட்ரிகல் இன்ஜினீயராகப் பட்டம் பெற்றவருக்கு பாலிவுட் நிரந்தர முகவரியானது கலர்ஃபுல் கதை.

‘`சின்ன வயசுல நிறைய படங்கள் பார்ப்பேன். ‘பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’, ‘மிஸஸ் டவுட்ஃபயர்’ மாதிரியான படங்கள் பிடிக்கும். மனுஷனைக் குரங்காகவும், ஆணைப் பெண்ணாகவும் மாத்துற வித்தைகள் என்னை வியக்கவைக்கும். அந்த மாதிரி நானும் ஏதாவது செய்யணும்னு அந்த வயசுலேயே ஆசைப்பட்டிருக்கேன்.

தமிழ்ல வொர்க் பண்றது டபுள் சந்தோஷம்!

டி.சி.எஸ்-ல சாஃப்ட்வேர் இன்ஜினீயரா ரொம்ப நாள் குப்பைகொட்ட முடியலை. ‘நீ இன்ஜினீயர் இல்லை.... உனக்கான ஏரியா வேற எங்கேயோ வெயிட்டிங்’னு மனசு சொல்லிட்டே இருந்தது. சின்ன வயசுல அம்மா, பாட்டின்னு யார் கிடைச்சாலும் பிடிச்சு உட்காரவெச்சு அவங்களுக்கு மேக்கப் பண்ண ஆரம்பிச்சிடுவேன். யோசிச்சுப் பார்த்தபோது அதுதான் எனக்கான எதிர்காலம்னு தோணுச்சு. இதுதான் சரியான டைம்னு உள்ளே வந்துட்டேன்...’’ ஒரு இன்ஜினீயர் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆன பின்னணியுடன் தொடர்கிறார் ப்ரீத்திஷீல்.

டி.சி.எஸ்-ல வொர்க் பண்ணிட்டிருந்தபோது எனக்கு அமெரிக்காவில் போஸ்ட்டிங் போட்டாங்க. அங்கேதான் சினிமா மேக்கப் பத்தி நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். அங்கே உள்ள சினிமா மேக்கப் ஸ்கூல்ல இது தொடர்பா ஒரு கோர்ஸ் முடிச்சேன். அங்கே ஸ்டூடன்ட்டா இருந்தபோது முதல் வாய்ப்பு வந்தது, ஒரு தியேட்டர் பர்ஃபாமென்ஸுக்காக நடிகர்களின் முகங்களில் 3டி பெயின்ட்டிங் பண்ணச் சொன்னாங்க. சூப்பரா பண்ணிக்கொடுத்தேன். கோர்ஸ் முடிச்சிட்டு இந்தியா வந்தபோது ‘நானா ஷா ஃபகிர்’ படத்துல கேரக்டர் டிசைனரா வொர்க் பண்ற வாய்ப்பு வந்தது. முதல் வாய்ப்பு... அதிலும் பாலிவுட் வாய்ப்பு.

தமிழ்ல வொர்க் பண்றது டபுள் சந்தோஷம்!

படத்துல அத்தனை கேரக்டர்களுக்கும் நான்தான் லுக் கிரியேட் பண்ணணும். புரொடக்‌ஷன்ல பெரிய தொகையை முதலீடு பண்ணியிருந்தாங்க. புராஸ்தெட்டிக் மேக்கப் வேற... யாரையும் ஏமாத்திடக்கூடாதேன்னு பதற்றத்தோடு வொர்க் பண்ணினேன்’’ பயந்தவருக்கு முதல் படமே தேசிய விருதை வாங்கித் தந்திருக்கிறது.

‘பத்மாவத்’ படம் வாழ்க்கையில மறக்க முடியாத புராஜெக்ட்.

‘`முதல் படத்துல வொர்க் பண்ணினபோது நான் தேறுவேனா, என் வேலை கவனிக்கப்படுமாங்கிறதே கேள்விகளா இருந்த நிலைமையில, அந்தப் படம் எனக்கு நேஷனல் அவார்டை வாங்கித் தந்ததை இன்னிவரைக்கும் என்னால நம்ப முடியலை.’’ எமோஷனல் மொமென்ட் பகிர்பவருக்கு வாழ்க்கையில் அடிக்கடி அத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. ‘பத்மாவத்’ பட வாய்ப்பும் அப்படியான ஒன்றுதான்.

தமிழ்ல வொர்க் பண்றது டபுள் சந்தோஷம்!

‘பத்மாவத்’ படம் வாழ்க்கையில மறக்க முடியாத புராஜெக்ட். பீரியட் பிலிம். நினைச்சதைச் செய்யற சுதந்திரம் இந்தப் படத்துல இல்லை, நிறைய ரிசர்ச் பண்ணினேன். படம் பார்த்த எல்லாரும் மேக்கப்பைப் பாராட்டினாங்க. ஐம் ஹேப்பி...’’ மகிழ்பவருக்கு, தமிழ்ப்படங்களில் பணிபுரிவதில் டபுள் சந்தோஷமாம். தமிழில் சூர்யா நடித்த `24' தொடங்கி நிறைய படங்களில் வேலை செய்திருக்கிறார்.

தமிழ்ல வொர்க் பண்றது டபுள் சந்தோஷம்!

‘`ஒவ்வொரு படத்துக்கும் புராஸ்தெட்டிக் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டைத் தேடி நாம வெளிநாடுகளுக்குப் போக வேண்டியதே இல்லை. வெளிநாட்டு ஆர்ட்டிஸ்ட்டுக்கு அஞ்சு மடங்கு அதிக சம்பளம் கொடுக்கத் தயாரா இருக்கிறவங்க, நம்ம ஆட்களுக்கு சம்பளம் கொடுக்கும்போது ரொம்ப யோசிக்கிறாங்க. இந்தக் குறைகளை எல்லாம் போக்கும் ஒரு முயற்சியாதான் மும்பையில் ‘ப்ரீத்திஷீல் ஸ்கூல் ஆஃப் கேரக்டர் டிசைன்’ என்ற பெயர்ல என் புராஸ்தெட்டிக் மேக்கப் ஸ்கூலை ஆரம்பிக்கிறேன்.’’ அடுத்த தலைமுறைக்கு நம்பிக்கை அளிப்பவர், சீக்கிரமே சென்னையில் செட்டிலானாலும் ஆச்சர்யமில்லை. கைவசம் அத்தனை தமிழ்ப்படங்கள்...விஜய் 64, சூர்யாவின் அடுத்த படம், விக்ரமின் அடுத்த படம்னு தமிழிலும் செம பிஸி.

ஒவ்வொரு படத்திலேயும் ஏதோ ஒரு விஷயத்தைப் புதுசாக் கத்துக்கிட்டே இருக்கேன். அதுதான் என்னை தொடர்ந்து உற்சாகமாக இயங்கவைக்குது.’’

அரிதாரமற்ற வார்த்தைகளிலும் அதே அளவு இன்ட்ரெஸ்ட்டிங்.