Published:Updated:

வடிவேலு ரீ-என்ட்ரி படம், நாகசைதன்யா படம் - விஜய் சேதுபதி மாதிரி ப்ரியா பவானி சங்கரும் பிஸி!

தெலுங்கில் விக்ரம் குமார் இயக்கும் 'தேங்க்யூ'வில் நாகசைதன்யாவின் ஜோடியாக நடிக்கிறார். இது தவிர வடிவேலுவின் ரீ என்ட்ரீ படத்தில் நடிக்கக் கேட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ் சினிமா ஹீரோக்களில் அதிக படங்கள் கைவசம் வைத்திருப்பவர் யாரென கேட்டால், 'விஜய் சேதுபதி' என டக்கென கோரஸ் குரல்கள் ஒலிக்கும். தற்போது, ஹீரோயின்களில் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் ப்ரியா பவானி சங்கர்.

'மேயாத மான்' படத்தில் அறிமுகமான ப்ரியா பவானி சங்கர், இப்போது கோலிவுட் தாண்டி தெலுங்கு பட உலகிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அங்கே நாக சைதன்யா ஜோடியாகிறார். தவிர, கமல், ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு ஆகிய டாப் ஹீரோக்களின் சாய்ஸும் ப்ரியாதான்.

ப்ரியா பவானி சங்கர்
ப்ரியா பவானி சங்கர்
Kiransa

சமீபத்தில் ஒடிடியில் வெளியான 'கசட தபற'வில் நடித்திருந்தார். இதனையடுத்து ரிலீஸ் ஆக வேண்டிய லிஸ்ட்டில் 'ஹாஸ்டல்', 'ஓ மணப்பெண்ணே' இருக்கின்றன. எஸ்.ஜே.சூர்யாவுடன் 'மான்ஸட'ருக்கு பிறகு கமிட்டான 'பொம்மை', 'ருத்ரன்' ஆகிய படங்களில் நடித்து முடித்துக் கொடுத்துவிட்டார்.

இப்போது நடித்துவரும் படங்கள் அனைத்தும் பெரிய புராஜெக்ட்ஸ். ஷங்கரின் 'இந்தியன்2'வில் முக்கியமான ரோலில் நடித்து முடித்துள்ளார். அடுத்து தனுஷின் 'திருச்சிற்றம்பலம்', சிம்புவின் 'பத்து தல' ஜெயம் ரவியின் பெயரிடப்படாத படம், ஹரி இயக்கி வரும் 'யானை', தவிர 'ஐரா' சர்ஜூன் கே.எம். இயக்கும் படத்திலும் கமிட் ஆகியுள்ளார். இதுபோக முதல் முறையாக தெலுங்கிற்குச் செல்கிறார். அங்கே விக்ரம் குமார் இயக்கும் 'தேங்க்யூ'வில் நாகசைதன்யாவின் ஜோடியாக நடிக்கிறார்.

ப்ரியா பவானி சங்கர்
ப்ரியா பவானி சங்கர்
Kiransa

இது தவிர வடிவேலுவின் ரீ-என்ட்ரி படத்தில் நடிக்கக் கேட்டுள்ளனர். அதில் வடிவேலுவுக்கு ஜோடி இல்லை. ஆனால், முக்கியமான ரோல். ஆனாலும் ப்ரியா, தொடர்ந்து பிசியாக நடித்து வருவதால் கால்ஷீட் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. க்ளாமரை நம்பாமல், கதையையும், கேரக்டரையும் நம்பி பயணித்த நடிகைகள் ரேவதி, சினேகாவின் வழியில் ப்ரியாவும் பயணிப்பதால்தான் இவருக்கு படங்கள் குவிகின்றன என கோலிவுட் தரப்பு செய்தி வாசிக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு