Published:Updated:

``எங்க போனாலும் கண்ணடிக்கச் சொல்லியே கடுப்பேத்துறாங்க... இனி அப்படிக் கேட்டா?'' - பிரியா வாரியர்

பிரியா வாரியர்

சோஷியல் மீடியா டார்லிங் பிரியா வாரியர். ஒரே கண்ணடித்தலில் அகில இந்திய வைரலாகிய பிரியா வாரியர் மீண்டும் டிரெண்ட் ஆகியிருக்கிறார்.

``எங்க போனாலும் கண்ணடிக்கச் சொல்லியே கடுப்பேத்துறாங்க... இனி அப்படிக் கேட்டா?'' - பிரியா வாரியர்

சோஷியல் மீடியா டார்லிங் பிரியா வாரியர். ஒரே கண்ணடித்தலில் அகில இந்திய வைரலாகிய பிரியா வாரியர் மீண்டும் டிரெண்ட் ஆகியிருக்கிறார்.

Published:Updated:
பிரியா வாரியர்

பிரியா வாரியர்... சோஷியல் மீடியா மூலம் ஆல் இந்திய வைரலாகி பிரபலமானவர். திடீரென சோஷியல் மீடியாவே ரொம்ப மோசம் எனப் புகார்கள் சொல்லி இன்ஸ்டாவை அன்இன்ஸ்டால் செய்தவர், இப்போது மீண்டும் இன்ஸ்டாவில் நடனங்கள் புரிகிறார். என்னதான் நடக்கிறது எனப் பிரியாவுக்கு போன் அடித்தேன்.

``விமர்சனங்களைத் தாங்குற சக்தி எனக்கு எப்பவும் உண்டு. ஆனா, இப்ப ரொம்ப ஓவராப் போறாங்க. பாசிட்டிவ் விமர்சனம் தேவையான ஒண்ணுதான். அது ஹெல்த்தியான விஷயமும்கூட. நம்மளை டெவலப் பண்ணிக்க அது ரொம்ப உதவியா இருக்கும். ஆனா, நெகட்டிவ் விமர்சனம் மட்டுமே பண்றதுக்கு ஒரு குரூப் இருக்காங்க. அவங்க என்னை ரொம்ப பர்சனலா ஹர்ட் பண்றாங்க. அதனாலதான் இன்ஸ்டாகிராமைவிட்டே வெளிய வந்தேன். அப்பவும் நான் பப்ளிசிட்டிக்காக இதைப் பண்ணியிருக்கேன்னு சில மீம்ஸ் பார்த்தேன். ரொம்ப கஷ்டமா இருக்கு. இந்த லாக்டெளன்ல எல்லோரும் வீட்ல இருக்காங்க. நிறைய கஷ்டப்படுறாங்க. வேலைக்குத் திரும்ப போகணும், ஷூட்டிங் எப்போன்னு யோசிச்சுக்கிட்டு இருக்குறப்போ பப்ளிசிட்டிக்காக இப்படிப் பண்றேன்னு பேசுறாங்க. எப்படி இப்படி யோசிக்கிறாங்கன்னே தெரியல. என்னைப் பொறுத்தவரைக்கும் நெகட்டிவ் மீம்ஸ் போடுறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிங்க. ஏன்னா, எல்லாருமே மனிதர்கள்தாம். விரக்தியில நான் எடுத்தது ஒரு சின்ன பிரேக்தான். மீண்டும் என் ரசிகர்களுக்காக இன்ஸ்டாவை இன்ஸ்டால் பண்ணிட்டேன்.''

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``சினிமால தொடர்ந்து நடிக்க ஆரம்பிச்சிட்டீங்க... நடிகையா எப்படி ஃபீல் பண்றீங்க?''

``சினிமால இப்போதான் என்னோட கரியர் ஆரம்பிச்சிருக்கு. இப்போ, முழுக்க சினிமாலதான் ஃபோகஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன். ஏன்னா, சின்ன வயசுல இருந்து நடிகையாகணும்னு ஆசைப்பட்டவ நான். மலையாளம் தவிர, தமிழ் ஆடியன்ஸுக்கும் என்னைப் பிடிச்சிருக்குன்றதுல சந்தோஷம். இதுவரைக்கும் தமிழ்ல எந்தப் படமும் பண்ணல. சீக்கிரமே பண்ணுவேன். தமிழ்ல விஜய் சேதுபதி படங்கள் ரொம்பப் பிடிக்கும். ஆல் டைம் ஃபேவரிட் நடிகர்கூட அவர்தான். `96' நிறைய தடவைப் பார்த்துட்டேன்.''

Priya Varrier
Priya Varrier

``நீங்க இந்தில நடிச்சிருக்க `sridevi bungalow' படம் ஶ்ரீதேவியின் பயோபிக்னு சொல்றாங்களே?''

``இது பயோபிக் படம் இல்ல. பேர் மட்டும்தான் `sridevi bungalow'. இது க்ரைம் த்ரில்லர் ஸ்டோரி. கதை கேட்டேன், பிடிச்சிருந்தது பண்ணுனேன். ஆனா, இந்தப் படம் பற்றி நிறைய தேவையில்லாத வதந்திகள் வருகின்றன. லீகலான பிரச்னையை டைரக்டர், புரொடியூசர்ஸ் ஹேண்டில் பண்ணிக்கிட்டு இருக்காங்க. எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் போயிட்டு இருக்கு. லாக்டெளன் முடிஞ்சதுக்குப் பிறகு, படம் ரிலீஸாகும்னு நம்புறேன். தவிர, தெலுங்கு மற்றும் கன்னடத்துல ஒரு படம் பண்ணிட்டேன். இதுல கன்னடப் படத்துல ஒரு பாட்டும் பாடியிருக்கேன்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``கண்ணடிச்சு வைரல் ஆனவர் நீங்க... இப்பவும் உங்களை கண் அடிக்கச் சொல்லி ஃபேன்ஸ் கேட்குறாங்களா?''

Priya Varrier
Priya Varrier

``நான் முழு நேர நடிகையாகிட்டேன். ஆனா, இப்பவும் எங்க போனாலும் கண் அடிச்சுக் காட்டச்சொல்லி கேட்டுக்கிட்டே இருக்காங்க. எனக்கு இது ரொம்ப போர் அடிச்சிருச்சு. அதனால யார் கேட்டாலும் இதைச் செய்றதை ஸ்டாப் பண்ணிட்டேன். ஏன்னா, நானொரு ஆர்டிஸ்ட். என்கிட்ட நடிப்பை எதிர்பார்த்தா சரியா இருக்கும்னு நினைக்குறேன். நான் தொடர்ந்து நிறைய படங்கள்ல நடிச்சு நல்ல நடிகைன்னு பேர் வாங்க ஆசைப்படுகிறேன். என்னை நடிக்க விடுங்க ப்ளீஸ்..!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism