Published:Updated:

"உள்ளாடைகளோடு நிற்க வேண்டும் என்று சொன்னார் அந்த இயக்குநர்" பிரியங்கா சோப்ரா!

பிரியங்கா சோப்ரா

ஓப்ரா வின்ஃப்ரே உடனான பேட்டியில் பிரியங்கா சோப்ரா தன் சுயசரிதை 'Unfinished - A Memoir', கணவர் நிக் ஜோனஸ், பாலிவுட் திரையுலகில் ஆரம்ப காலங்களில் சந்தித்த பிரச்னைகள் எனப் பல விஷயங்களைப் பற்றி மனம் திறந்திருக்கிறார்.

"உள்ளாடைகளோடு நிற்க வேண்டும் என்று சொன்னார் அந்த இயக்குநர்" பிரியங்கா சோப்ரா!

ஓப்ரா வின்ஃப்ரே உடனான பேட்டியில் பிரியங்கா சோப்ரா தன் சுயசரிதை 'Unfinished - A Memoir', கணவர் நிக் ஜோனஸ், பாலிவுட் திரையுலகில் ஆரம்ப காலங்களில் சந்தித்த பிரச்னைகள் எனப் பல விஷயங்களைப் பற்றி மனம் திறந்திருக்கிறார்.

Published:Updated:
பிரியங்கா சோப்ரா

சர்வதேச பிரபலங்கள் பரபரப்பாகப் பேட்டி கொடுத்தால் அது உலகம் முழுக்க கவனிக்கப்படும். ஆனால் ஒரு பிரபலம் பேட்டி எடுத்தாலே அது உலகம் முழுக்க பேசுபொருளாகும். மைக்கல் ஜாக்சன், எலிசபெத் டெய்லர் எனத் தொடங்கி அமெரிக்கா அதிபர் ஒபாமா, பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி வரை கடந்த 35 ஆண்டுகளாக உலகின் முக்கிய பிரபலங்களைப் பேட்டி எடுப்பதில் கோலோச்சுகிறார் ஓப்ரா வின்ஃப்ரே.

பிரியங்கா-  ஓப்ரா
பிரியங்கா- ஓப்ரா
Discovery +

'குயின் ஆஃப் மீடியா' எனக் கொண்டாடப்படும் ஓப்ரா தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சி 'சூப்பர் சோல்'( super soul). இந்நிகழ்ச்சியில் முதல் விருந்தினராகக் கலந்து கொண்டார் பிரியங்கா சோப்ரா ஜோனஸ். தமிழில் திரைப்பயணத்தை தொடங்கி இன்று உலகளவில் கலக்கும் உலக அழகி. இந்திய மகள், அமெரிக்க மருமகள். அமெரிக்காவின் பிரபல பாடகர் நிக் ஜோனஸ் என்பவரைக் காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஓப்ரா உடனான பேட்டியில் ப்ரியங்கா தன் சுயசரிதை 'Unfinished - A Memoir', நிக் ஜோனஸ், பாலிவுட் திரையுலகில் ஆரம்பக் காலங்களில் அவர் சந்தித்த பிரச்னைகள் எனப் பல விஷயங்களைப் பற்றி மனம் திறந்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குறிப்பாக, பிரியங்கா படங்களில் நடிக்கத் தொடங்கியபோது நடந்த ஒரு நிகழ்வைப் பற்றி அவருடைய சுயசரிதையில் எழுதியிருக்கிறார். அதில், ஒரு இயக்குநர் தன்னை தவறாக நடத்தியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் பிரியங்கா. இதுகுறித்து நேர்காணலின் போது ஓப்ரா கேட்க அதற்கு, " அந்த சம்பவத்தைக் குறித்து என் வருத்தம் ஒன்றுதான். நான் அந்த இயக்குநரை எதிர்த்து பேசவில்லை. எனக்கு அப்போது மிகவும் பயமாக இருந்தது. திரையுலகிற்கு நான் புதிதாக வந்தவள். உன்னோடு வேலை செய்வது கடினம் என பிம்பத்தை உருவாக்கிவிடாதே என்று தான் உடனிருந்த பெண்கள் அறிவுரை வழங்கினார்கள். எனவே நான் அந்த சிஸ்டத்திற்குள் வேலை பார்த்தேன்" என்று பதிலளித்திருக்கிறார். பின்னர் அந்த படத்திலிருந்து தான் விலகியதாகவும் கூறியிருக்கிறார்.

ப்ரியங்கா
ப்ரியங்கா
http://archive.indianexpress.com/

பிரியங்கா அவரது சுயசரிதையில் அந்த சம்பவத்தை பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். " அந்தப் படத்தில் ஒரு பாடல் இருந்தது. அது மிகவும் கவர்ச்சியான ஒரு பாடல். எனக்கு அதில் பிரச்னையில்லை. பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடனங்கள் வழக்கமானதுதான். அந்த பாடலில் கொஞ்சம் கொஞ்சமாக என் ஆடையை கழற்றி ஆடுவது போல நடனம் அமைக்கப்பட்டிருந்தது. நான் டைரக்டரிடம் சென்று நான் நிறைய லேயர் ஆடைகளை உடுத்திக் கொள்கிறேன் என அனுமதி கேட்டேன். அதற்கு அவர் ஆடை வடிவமைப்பாளரிடம், 'என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் எனக்கு பிரியங்கா இறுதியில் உள்ளாடைகளோடு நிற்கவேண்டும். அது இல்லாவிட்டால் மக்கள் எதற்கு படம் பார்க்க வரப்போகிறார்கள்' என்றார். என் முகத்திற்கு நேராக அவர் அப்படிச் சொன்னது என்னை பாதித்தது. எதிர்த்து பேச அப்போது எனக்கு தைரியம் இல்லை. படத்தில் கவர்ச்சி நடனம் இருப்பது வழக்கம். ஆனால், படமே அதற்காகத்தான் என என்னை உடைமைப்படுத்துவது எனக்கு விருப்பமில்லை. என் வீட்டில் சொன்னேன். உன் மனதிற்கு சரியென பட்டதை செய் என்றார்கள். அடுத்த நாள் அந்த படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தேன். தயாரிப்பாளர் மிகவும் கோபப்பட்டார். அப்போது என் சகா நடிகர் சல்மான் கான் தான் தயாரிப்பாளரை சமாதானம் செய்தார். என் சம்பளத்தை திருப்பி கொடுத்தது மட்டுமல்லாமல், என்னை வைத்து எடுத்த ஒரு வாரத்தின் ஷூட்டிங் செலவுகளையும் திருப்பிக் கொடுத்தேன். ஏனெனில் நான் இப்படி செய்யாவிட்டால் என் அடுத்த தலைமுறைக்கும் இதே நிலை தொடரும். நான் அதை மாற்றியமைக்க எண்ணினேன்.

தந்தையுடன் பிரியங்கா
தந்தையுடன் பிரியங்கா

எனக்குக் கடவுள் நம்பிக்கை மிகவும் அதிகம். நம்மை மீறிய ஒரு பெரும் சக்தி உண்டென நம்புவேன். நான் படித்தது கான்வென்ட் பள்ளி. அம்மா கோயிலுக்குப் போவார், அப்பா அருகிலிருக்கும் மசூதியில் பாடியிருக்கிறார். இப்படி எல்லா மத நம்பிக்கைகளையும் கண்டுதான் நான் வளர்ந்தேன். ஆனால், என் தந்தை மரணத்திற்குப் பிறகு என் கடவுள் நம்பிக்கை குறைந்தது. ஏனெனில் அவர் வாழ்நாளை நீட்டிக்கச் சிங்கப்பூர், இந்தியா, அமெரிக்கா என எல்லா நாடுகளுக்கும் அவரை அழைத்துச் சென்றேன். இருக்கும் அனைத்து கடவுள்களையும் வணங்கினேன், அனைத்து பூஜைகளையும் மேற்கொண்டேன். ஆனால், என் அப்பாவை இழந்துவிட்டேன். அப்போது என் நம்பிக்கை மீது எனக்கே சந்தேகம் வந்தது. ஆனால், அப்போதும் இதிலிருந்து என்னை மீட்டெடுத்து என் இறை நம்பிக்கை தான்" என்று பேட்டியில் கூறியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கணவர் நிக் ஜோனஸ் பற்றிக் கூறுகையில், " எனக்குக் கணவராகப் போகிறவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என சில எண்ணங்கள் கொண்டிருந்தேன். நிக் அந்த எண்ணங்களுக்கு ஏற்றவராக அப்படியே இருந்தார். என் அம்மா கனவு கண்டதை போலவே ஒரு மருமகன் அவர். முதலில் அவரை சந்தித்து அவர் எனக்கு மெசேஜ் அனுப்பியபோது அவர் எனக்கானவர் இல்லை என்றே நினைத்தேன். எனக்கு 35 வயது, அடுத்து திருமணம் , குழந்தைகள் வேண்டும் என்பது என் எண்ணம். நிக் இருபதுகளில் இருப்பவர். அவருக்கு இதிலெல்லாம் விருப்பம் இருக்காது எனவே நான் நினைத்திருந்தேன். ஆனால் எனக்கு ஆச்சரியமளித்தவர் நிக். எனக்கு எல்லா வகைகளிலும் அவர் துணையாக நிற்கிறார். எனக்கான ஊக்கமாக இருக்கிறார். என் கனவுகள் லட்சியம் ஆகியவை அவருக்கு என்னிடம் ரொம்ப பிடித்தமான விஷயம்" என்று தன் காதல் பக்கங்களையும் பகிர்ந்திருக்கிறார்.

Priyanka Chopra with Nick
Priyanka Chopra with Nick

பிரியங்கா தன் பள்ளி காலங்களில் நிறம் குறித்தான கிண்டல்களுக்கு உள்ளானது, அவருடைய விருப்பு, வெறுப்புகள், தாய் தந்தையர் அவருக்கு அளித்த சுதந்திரம் எனப் பல விஷயங்களைப் பற்றியும் பேட்டியில் பேசியிருக்கிறார். பிரபலங்களின் வாழ்க்கை எப்போதும் கவனம் பெரும். அதிலிருக்கும் சுவாரஸ்யங்கள் மட்டுமின்றி, அது கற்பிக்கும் பாடங்களையும் சேர்த்துப் புரிந்துகொள்வது நலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism