Published:Updated:

"ஒரு முறை படப்பிடிப்பு தளத்திற்குள் வந்தால்..." விஜய் குறித்து மனம்திறந்த பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா மற்றும் விஜய்

நடிகை பிரியங்கா சோப்ரா அண்மையில் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் நடிகர் விஜய் குறித்து அவர் பேசுகையில் நடிகர் விஜயிடமிருந்து நான் சில விசயங்களைக் கற்றுக்கொண்டேன்…’ என பிரியங்கா சோப்ரா அந்த நேர்காணலில் கூறியிருந்தார்.

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என்று உலகளவில் நடித்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா. அண்மையில் நேர்காணல் ஒன்றில் 2002-ல் தான் பெற்ற உலகழகி பட்டம் குறித்தான தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அந்த நேர்காணலில் அவர் பேசுகையில் நடிகர் விஜய் குறித்தும் பேசியிருந்தார். ’நான் நடிகர் விஜய்யிடமிருந்து சில விஷயங்களை கற்றுக்கொண்டேன்…’ என பிரியங்கா சோப்ரா நேர்காணலில் கூறியிருந்தார்.

பிரியங்கா சோப்ரா நேர்காணலில்
பிரியங்கா சோப்ரா நேர்காணலில்

2000-ம் ஆண்டில் உலகழகி பட்டம் பெற்ற பிரியங்கா சோப்ரா, தனது முதல் படமாகத் தமிழில் 2002-ல் தமிழன் படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து நடித்திருந்தார்.அதன் பின் தளபதி விஜய் குறித்துப் பல இடங்களில் விஜய் உடனான தன் அனுபவங்களைத் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2000-ம் ஆண்டில்  உலகழகி பட்டம் பெற்ற பிரியங்கா சோப்ரா
2000-ம் ஆண்டில் உலகழகி பட்டம் பெற்ற பிரியங்கா சோப்ரா

ஏற்கனவே “அன் பினிஷ்டு“(Unfinished) என்று தான் எழுதிய புத்தகத்தில் நடிகர் விஜய் குறித்தும் அவர் தன் ரசிகர்களிடன் அன்பாக நடந்து கொள்ளும் விதங்கள் குறித்தும் தன் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நேர்காணலில் அவர் பேசுகையில் “சக நடிகராகப் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜயைக் கவனிப்பது எனக்குப் பிடிக்கும்” என்றும் 'ஒரு சூப்பர் ஸ்டராக முதன் முதலில் என் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் அவர் ' என்றார்.

பிரியங்கா சோப்ரா எழுதிய Unfinished எனும்  புத்தகம்
பிரியங்கா சோப்ரா எழுதிய Unfinished எனும் புத்தகம்

மேலும் அவர் கூறுகையில் ‘படப்பிடிப்பு தளங்களை நடிகர் விஜய் அணுகும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்றும் ‘ஒரு முறை படப்பிடிப்பு தளத்திற்குள் வந்துவிட்டார் என்றால் பின் வெளியே எங்கும் செல்ல மாட்டார்’ என்றும் இதுபோல சிலவற்றை தான் விஜயிடமிருந்து கற்றுக்கொண்டதாக பிரியங்கா சோப்ரா கூறியிருந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism