Published:Updated:

``பாலாவோட `வர்மா' வேற லெவல்... நோ கெட்டவார்த்தை! ஆனா, துருவ்!''- ஆர்.கே.சுரேஷ்

ஆர்.கே.சுரேஷ்

``டாக்டர் ஐயாவும் அன்புமணி சாரும் 'தர்மதுரை' பார்த்துட்டு நல்லாயிருக்குனு சொன்னாங்க. அப்போ படத்துக்கு பெருசா சப்போர்ட் பண்ணாங்க. இப்போ 'காடுவெட்டி' படம் பற்றிக் கேட்டுட்டு, 'சுரேஷூக்கு ஏத்த கேரக்டரா இருக்கும்'னு சொல்லியிருக்காங்க.''

``பாலாவோட `வர்மா' வேற லெவல்... நோ கெட்டவார்த்தை! ஆனா, துருவ்!''- ஆர்.கே.சுரேஷ்

``டாக்டர் ஐயாவும் அன்புமணி சாரும் 'தர்மதுரை' பார்த்துட்டு நல்லாயிருக்குனு சொன்னாங்க. அப்போ படத்துக்கு பெருசா சப்போர்ட் பண்ணாங்க. இப்போ 'காடுவெட்டி' படம் பற்றிக் கேட்டுட்டு, 'சுரேஷூக்கு ஏத்த கேரக்டரா இருக்கும்'னு சொல்லியிருக்காங்க.''

Published:Updated:
ஆர்.கே.சுரேஷ்

தயாரிப்பாளர், நடிகர் எனத் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ஆர்.கே.சுரேஷ். தற்போது 'காடுவெட்டி', 'ஜோசப்' தமிழ் ரீ-மேக், அடுத்து பாலா இயக்கும் படம் எனப் பரபர ஃபார்மில் இருக்கிறார். அவரிடம் பேசினேன்.

''பல வருஷமா சினிமால இருக்கேன். நடிக்க வந்து நாலு வருஷம் ஆகுது. இந்த நாலு வருஷத்துல நம்மள மக்கள் ஏத்துக்குவாங்களானு கேள்வி இருந்தது. இப்போ அந்தக் கேள்வி கொஞ்சம் கொஞ்சமா மறைய ஆரம்பிச்சிருக்கு. இப்போ 'காடுவெட்டி' படத்துல கமிட்டாகி இருக்கேன். இயக்குநர் சோலை இந்த ஸ்க்ரிப்ட் சொன்னார். சமூக விஷயங்கள் நிறைய ஸ்க்ரிப்ட்ல இருக்கு. யாரோட மனசையும் புண்படுத்தாத வகையில எழுதியிருக்காங்க. ஹீரோயிஸப் படம். எல்லாம் சரியா இருந்ததால உடனே ஓகே சொல்லிட்டேன். இதைக் காடுவெட்டி குருவோட பயோபிக் படம்னு சொல்ல முடியாது. 'சீவலப்பேரி பாண்டி' மாதிரியான கதைக்களம்.''

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காடுவெட்டி குருவை நேர்ல பார்த்து இருக்கீங்களா?

ஆர்.கே.சுரேஷ்
ஆர்.கே.சுரேஷ்

''அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கேன். டாக்டர் ஐயாவும் அன்புமணி சாரும் 'தர்மதுரை' பார்த்துட்டு நல்லாயிருக்குனு சொன்னாங்க. அப்போ படத்துக்கு பெருசா சப்போர்ட் பண்ணாங்க. இப்போ இந்தப் படம் பற்றி கேட்டுட்டு, 'சுரேஷூக்கு ஏத்த கேரக்டரா இருக்கும்'னு சொல்லியிருக்காங்க. 'காடுவெட்டி' கேரக்டருக்கு ஏத்த மாதிரியே ஸ்லாங், உடல்வாகு எல்லாத்தையும் மாத்தியிருக்கேன். படத்தை படமா பார்த்தா எந்தப் பிரச்னையும் இல்லை. என் தோற்றத்துக்கு, குரலுக்கு ஏத்த மாதிரியான ஸ்க்ரிப்ட் என்னைத் தேடி வர்றப்போ எடுத்து நடிக்கிறேன். சொல்லப்போனா, 'சீவலப்பேரி பாண்டி 2' படத்துக்கு நான் சரியா இருப்பேன்னு என்கிட்ட கால்ஷீட் கேட்டிருக்காங்க. கையிலே இருக்குற படங்கள் முடிச்சிட்டு நடிக்குறேன்னு சொல்லியிருக்கேன். இது இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படம்.''

மலையாள ஹிட் படமான 'ஜோசப்' தமிழ்ல ரீ-மேக் பண்றீங்களா ?

ஜோஜூ ஜார்ஜ்
ஜோஜூ ஜார்ஜ்

"ஆமாம்... தமிழ் ரீ-மேக் ரொம்ப நல்ல வந்திருக்கு. நானே, இந்தப் படத்தை ரொம்ப எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன். இன்னும் அஞ்சுநாள் ஷூட்டிங்தான் இருக்கு. ஒரு ஆணின் முழு வாழ்க்கை, அவனுடைய மன அழுத்தம்னு எல்லாத்தையும் இந்தப் படம் பேசும். மலையாளத்துல விட்டுப்போன நிறைய விஷயங்கள் தமிழ்ல இருக்கும். மலையாளத்தைவிட ஒருபடி மேல இருக்கும். மலையாளத்துல இயக்கின அதே பத்மகுமார்தான் தமிழ்லயும் பண்றார். ஜி.வி.பிரகாஷ் மியூசிக் படத்துக்கு பெரிய ப்ளஸ்ஸா இருக்கும். இளவரசன், பக்ஸ், ஜார்ஜ் , பூர்ணானு ஒரு பட்டாளமே இந்தப் படத்துல நடிச்சிருக்காங்க.

மலையாளத்துல மூணு படங்கள் வரைக்கும் பண்ணிட்டேன். நடிகை அனுசித்தாராதான் 'ஜோசப்' படத்தை பற்றியும், 'நீங்க நடிச்சா நல்லாயிருக்கும்'னும் என்கிட்ட சொன்னாங்க. படம் பார்த்துட்டு சீமான் அண்ணன்கிட்ட சொன்னேன் 'உனக்கு சரியா இருக்கும்டா'னு சொன்னார். அடுத்து பாலா அண்ணாகிட்ட சொன்னப்போ, 'பார்க்குறேன் டா'னு சொன்னார். அப்புறம் ரெண்டு நாள்ல அவரோட மொத்த டீம்கூட உட்கார்ந்து பார்த்திருக்கார். படம் ஆரம்பிச்ச 5 நிமிஷம் கடக்குறப்போ, 'சுரேஷை மனசுல வெச்சிக்கிட்டு இந்தப் படத்தை பாருங்க'னு சொல்லியிருக்கார். எல்லாருக்குமே நான் தமிழ் ரீமேக்ல நடிச்சா நல்லாயிருக்கும்னு தோணியிருக்கு. 'டேய், இது நார்மல் படம் மாதிரியில்ல. உன்னோட நடை, உடை, பாவனை எல்லாத்தையும் மாத்தணும். முடியுமா'னு கேட்டார். 'மாத்துறேன்'னு சொன்னேன். கிட்டதட்ட 28 கிலோ எடை போட்டு உடலமைப்பை மொத்தமா மாத்துனேன். படத்துல என் முகமே மாறியிருக்கும். ஆறு மாசம் வரைக்கும் இதுக்கே மெனக்கெட்டேன். இது எல்லாம் நடந்ததுக்கு பிறகுதான் ஷூட்டிங் போக ஆரம்பிச்சேன். எங்கேயும் சுரேஷ் வெளியே தெரிஞ்சிரக் கூடாதுனு கவனமா இருந்தேன். இதைவிட முக்கியமா தமிழ் வெர்ஷனின் ஃப்ளாஷ்பேக் காட்சிக்கு உடல் எடையை குறைச்சும் நடிச்சிருக்கேன்."

உங்களுக்காகத்தான் பாலா இந்தப் படத்தை தயாரிக்குறாரா?

''இன்னைக்கு சினிமால நானொரு ஹீரோவா இருக்குறதுக்கே அண்ணன்தான் காரணம். அண்ணன் அவரோட டைரக்‌ஷன்ல ஒரு படத்தை எடுக்க ரெடியாகிட்டு இருந்தார். அப்போதான் இந்தப்படத்தைப் பார்த்துட்டு நானே தயாரிக்கிறேன்னு அடுத்தடுத்த வேலைகள்ல இறங்கிட்டார். மலையாளத்துல படத்தை எடுத்திருந்த பத்மா சாரே தமிழ்லயும் டைரக்‌ஷன் பண்ணட்டும்னு அண்ணன்தான் சொன்னார். அவரை சென்னைக்கு வரவழைச்சு பேசினார். பத்மா சாரும் தமிழ்நாட்டுல இருந்தவர். அதனால தமிழ் ஆடியன்ஸுக்கு ஏத்த மாதிரி இந்தப் படத்தை எடுத்திருக்கார்.''

பாலா, எப்போதாவது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தாரா?

பாலாவுடன் ஆர்.கே.சுரேஷ்
பாலாவுடன் ஆர்.கே.சுரேஷ்

''கொடைக்கானல் ஏரியாவுல ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருந்தப்போ வந்தார். எங்கேயோ தூரமா நின்னு என்னை பார்த்துக்கிட்டே வந்தார். ஷாட் முடிச்சிட்டு அண்ணன் பக்கத்துல வந்து நின்னேன். 'இவன் என்னடா கேரக்டரா மாறி கிடக்கான்'னு ஆச்சர்யப்பட்டார். வெயிட் போட்டிருந்தப்போ அண்ணன் என்னை பார்த்திருக்கார். ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்ல பார்த்தப்போ மொத்தமா உருமாறி இருந்தேன். தொப்பை மட்டுமே எட்டு கிலோ வரைக்கும் இருந்தது. 'டேய், அப்படியே கேரக்டரா இருக்கடா... நானே ஆச்சர்யமா பார்த்தேன்'னு சொன்னார்.''

பாலா அடுத்து இயக்கப்போற படத்துல நீங்கதான் ஹீரோனு சொல்றாங்களே?

''நடந்தா நல்லாயிருக்கும். அண்ணன் ஒரு ஹீரோவை உருவாக்குற விதம் ரொம்பப் பிடிக்கும். அண்ணன் யாரை நடிக்க வெச்சாலும் சரியாதான் இருக்கும். ஏன்னா, அண்ணன் மைண்ட்ல ஒரு ஆர்டிஸ்ட் வந்துட்டா, அவங்களுக்குள்ள இருக்குற மொத்தத்தையும் வெளியே கொண்டு வராமல் விடமாட்டார். 'தாரை தப்பட்டை' படத்துல என்னோட பெஸ்ட்டை வெளியே கொண்டு வந்தார். இதுக்குப் பிறகு 25 படங்கள் வரைக்கும் பண்ணிட்டேன். நானும் வெயிட்டிங். ஆனா, பயங்கரமான ஸ்க்ரிப்ட்டை அவர் கையிலே வெச்சிருக்கார். எல்லாரும் மிரண்டு போயிடுவாங்க.''

பாலா எடுத்த 'வர்மா' படத்தை நீங்க பார்த்திருப்பீங்களே?

வர்மா
வர்மா

''வெளிப்படையா சொல்லணும்னா, அண்ணன் எடுத்த 'வர்மா' சூப்பரா இருக்கும். அது வேற லெவல் படம். ரிலீஸானப் படத்தைப் பார்த்தவுடனே, 'பாலா அண்ணன் படம் வந்திருக்கலாமே தமிழுக்கு ஏத்த மாதிரி இருந்திருக்கும்'னு தோணுச்சு. அவர் எடுத்ததுல அப்பா, மகனுக்கு இடையே இருக்குற சென்ட்டிமென்ட் ரொம்ப நல்லா வந்திருந்தது. இந்தப் படத்தை ரிலீஸ் செஞ்சிருந்தா மிகப்பெரிய ஹிட் ஆகியிருக்கும். '

அர்ஜூன் ரெட்டி' ஆந்திரா சம்பந்தப்பட்ட படம். தமிழ்ல இது ரீமேக் ஆகுறப்போ நம்ம ஆடியன்ஸூக்கு ஏத்த மாதிரிதானே இருக்க முடியும். அதுதானே சரி..? ஏன்னா, தெலுங்கு மற்றும் தமிழ் ஆடியன்ஸூக்கு இடையேயான கதை மற்றும் களம் வேற. 'பிதாமகன்' படத்தை தெலுங்குல எடுத்தாக்கூட ஏத்துக்க மாட்டாங்க. அதனால, அண்ணன் கெட்ட வார்த்தைகள் இல்லாம தமிழ் ஆடியன்ஸூக்கு ஏத்த மாதிரி எடுத்திருந்தார். கண்டிப்பா ஓடிடி பிளாட்ஃபார்ம்ல 'வர்மா' வர்றப்போ நான் சொன்னது எவ்வளவு சரினு உங்களுக்கே புரியும். 'வர்மா' வந்திருந்தா துருவ்க்கு இன்னும் நல்லாயிருந்திருக்கும். பாலா அண்ணன் ஸ்டைல் வித்தியாசமானது. ஆர்டிஸ்ட்டுக்குள்ள இருக்குற முழுத்திறமையை வெளியே கொண்டுவந்துடுவார். துருவ் ரொம்ப திறமைசாலி. அவரை நல்லா பயன்படுத்தியிருப்பார். ஆனா, துருவ் மிஸ் பண்ணிட்டார்.''