ரகசியத் திருமணம்... ஊரறிய வளைகாப்பு... செம மகிழ்ச்சியில் ஆர்.கே.சுரேஷ்! #SpecialAlbum

தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே. சுரேஷின் மனைவி மாதவிக்கு இன்று வளைகாப்பு நடந்தது. இதில் ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
He or she..
We are waiting to see... என தான் அப்பா ஆகப் போகும் செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ்.
தயாரிப்பாளராக சினிமாவில் அறிமுகமாகி இயக்குநர் பாலாவால் வில்லன் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது ஹீரோ என வளர்ந்து வரும் ஆர்.கே. சுரேஷுக்கும் சென்னையைச் சேர்ந்த சினிமா ஃபைனான்சியர் மது என்கிற மாதவிக்கும் கடந்தாண்டு லாக்டௌன் சமயத்தில் திருமணம் நடந்தது. மிகவும் ரகசியமாக நடத்தப்பட்ட இந்த திருமணத்துக்கு சினிமா உலகில் இருந்து யாரும் அழைக்கப்படவில்லை.
இப்போது மகிழ்ச்சிகரமான திருமண வாழ்வின் அடையாளமாய் சில மாதங்களுக்கு முன் தாய்மையடைந்த மாதவிக்கு இன்று சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.








வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் வந்து வாழ்த்தினார்கள். இசைக்கச்சேரியுடன் தொடங்கிய வளைகாப்பு மதிய விருந்துடன் நிறைவைடைந்தது
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குநர்கள் பாக்யராஜ், பாலா, நடிகர்கள் சூரி, விமல், பிரேம், எம்.எஸ்.பாஸ்கர், ’சத்யஜோதி’ தியாகராஜன் உள்ளிட்ட இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் எனப்பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
படங்கள்: ந.கார்த்திக்