Published:Updated:

`மாநாடு' படத்திலிருந்து சிம்பு நீக்கம் ஏன்?- காரணம் சொல்லும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

சிம்பு நடிக்க இருந்த `மாநாடு', தற்போது கைவிடப்பட்டுள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் பேசினோம்.

சிம்பு - வெங்கட் பிரபு
சிம்பு - வெங்கட் பிரபு ( மாநாடு )

வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிக்க இருந்த படம், `மாநாடு'. இப்படத்தைப் பற்றிய அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது. அரசியல் சார்ந்த கதை எனக் கூறிவந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் நடைபெறும் எனவும் சில தகவல்கள் வந்தன. இந்நிலையில் 'மாநாடு' படம் கைவிடப்பட்டதாக இன்று தகவல்கள் வந்தன. இதுகுறித்து சுரேஷ் காமாட்சியிடம் பேசினோம்.

சிம்பு
சிம்பு

``சிம்புவை வைத்து தயாரிப்பதாக இருந்த 'மாநாடு' படம் தற்போது கைவிடப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் காலதாமதம் தவிர வேறு எதுவும் இல்லை. சிம்புடன் தனிப்பட்ட பிரச்னை எதுவும் கிடையாது. அவருடன் பேசி ஒருமனதாகத்தான் இந்த முடிவை எடுத்தோம். இதனால் யாருக்கும் மனக்கசப்பு கிடையாது. 'மாநாடு' படத்தின் ஷூட்டிங் வேறொரு ஹீரோவை வைத்து விரைவில் ஆரம்பிக்கப்படும். சில நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதையும் வெங்கட் பிரபுதான் டைரக்‌ட் பண்ணுவார்'' எனச் சொல்லி முடித்தார், தயாரிப்பாளார் சுரேஷ் காமாட்சி. தற்போது சிம்பு கன்னடம் `மஃப்டி' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.