Published:Updated:

`கிரிக்கெட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை கபடிக்கும் கொடுங்கள்!' - பி.டி.செல்வகுமார்

'வெண்ணிலா கபடிகுழு 2' படத்தின் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசியது...

பி.டி. செல்வகுமார்
பி.டி. செல்வகுமார்

2009-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம், 'வெண்ணிலா கபடிகுழு'. இந்தத் திரைப்படம் இயக்குநர் சுசீந்திரன், ஹீரோ விஷ்ணு விஷால், சூரி ஆகியோருக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தது என்றே சொல்லலாம். இதைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான 'வெண்ணிலா கபடிகுழு 2' படத்தை இயக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், இயக்குநர் சுசீந்திரன் கதையில் அவரது சித்தப்பா செல்வசேகரன் இயக்க ஆரம்பமானது இத்திரைப்படம். இதில் விக்ராந்த், அர்த்தனா பினு முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க மற்ற நடிகர்கள் அனைவரும் முதல் பாகத்தில் இருந்தவர்களே.

வெண்ணிலா கபடிகுழு 2
வெண்ணிலா கபடிகுழு 2

இந்தத் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், ``ஒரு வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகத்தை தனது அறிமுக படமாக இயக்க துணிச்சல் வேண்டும். கிரிக்கெட்டுக்கு கொடுக்கிற மரியாதையை நாம் கபடிக்கும் கொடுக்க வேண்டும். பூமாதேவியுடன் விளையாடும் விளையாட்டு கபடிதான். ஆனால், இந்த விளையாட்டு விளையாடுவது மிகவும் குறைந்துவிட்டது.

அரசாங்கம் கபடி விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ரஜினிகாந்த் உட்பட உச்ச நட்சத்திரங்கள் மேடையில் மட்டும் பேசுவதை நிறுத்திவிட்டு, நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு மாவட்ட, மாநில கபடி அணிகளை ஸ்பான்சர் செய்யுங்கள்.

பி.டி. செல்வகுமார்
பி.டி. செல்வகுமார்

என்னால் முடிந்தளவுக்குப் போன வாரம் திருநெல்வேலியில் ஒரு கபடி அணியை ஸ்பான்சர் செய்துள்ளேன். விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களால் எவ்வளவோ செய்ய முடியும். ஆனால், யாரும் நல்ல விஷயங்களுக்குக் குரல் கொடுக்கிறது கிடையாது. கபடியை மென்மேலும் வளர வேண்டும்" என்றார்.