சினிமா
Published:Updated:

கவிதாலயா வளர்த்த கலைஞன்!

புஷ்பா கந்தசாமியிடம் கே.பாலசந்தரின் பேனா வாங்கிய விவேக்
பிரீமியம் ஸ்டோரி
News
புஷ்பா கந்தசாமியிடம் கே.பாலசந்தரின் பேனா வாங்கிய விவேக்

விவேக் 1961-2021

இயக்குநர் கே.பாலசந்தரின் மகளும் தயாரிப்பாளருமான புஷ்பா கந்தசாமி பாலசந்தருக்கும் விவேக்கிற்குமான உறவு குறித்துப் பகிர்ந்துகொள்கிறார்.

“விவேக் அப்பாவை ஒரு நடிகனா இம்ப்ரஸ் பண்றதுக்கு முன்னாடியே ஒரு ரைட்டரா இம்ப்ரஸ் பண்ணிட்டார். அப்பா முதல்முறை விவேக்கிட்ட ‘உன்னை ஒரு படத்துல அறிமுகப்படுத்தலாம்னு இருக்கேன். ஆனா, அந்த ரோலுக்கு நீயே எழுதிட்டு வா. ஆனா, ஒரு நாள்தான் டைம்’னு சொல்லியிருக்கார். அதை ஒரு சவாலா எடுத்துக்கிட்டு எழுதியிருக்கார். அவருக்கு விசாலமான அறிவு இருந்தது. ஏற்கெனவே ஹியூமர் கிளப்ல விவேக் பர்ஃபாம் பண்றதைப் பார்த்துட்டுதான், நடிக்க வெச்சிருக்கார்.

`புதுப் புது அர்த்தங்கள்’ படத்தில்...
`புதுப் புது அர்த்தங்கள்’ படத்தில்...

என் அப்பாவைப் புரிஞ்ச மகளா என்னால இதைச் சொல்றேன். அப்பா ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்துறார்னா, அவங்களை ஒரே படத்துல அனுப்பிடமாட்டார். அடுத்த படத்துல அவங்களுக்கு வேறொரு பரிமாணத்தைக் கொடுத்து நடிக்க வைப்பார். அப்படித்தான், ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்துக்குப் பிறகு, ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்துல விட்டல் கேரக்டர்ல நடிக்க வெச்சார். அதுல காமெடி சூப்பரா வொர்க் அவுட் ஆகியிருக்கும். விவேக்கிற்கு நல்ல காமெடி வரும்னு காட்டிய படம். ‘ஒரு வீடு இரு வாசல்’ சீரியஸான படம். ஆனா, பார்க்கிறவங்க கொஞ்சம் ரிலாக்ஸா உணரணும்னு விவேக்கைப் பயன்படுத்தியிருப்பார். அப்பாவுக்கு கமல் சார் எப்படின்னு எல்லோருக்கும் தெரியும். அப்பா என்ன எதிர்பார்க்குறார்னு அவர் சொல்லாமலே புரிஞ்சுக்கிட்டு நடிப்பார், கமல் சார். அவங்களுக்குள்ள நல்ல கெமிஸ்ட்ரி இருக்கும். அப்படித்தான் விவேக்கும் அப்பாவும். விவேக் பயங்கர பாப்புலராகி வெளியே போய் நிறைய படங்கள் பண்ண ஆரம்பிச்சுட்டார்.

கவிதாலயா வளர்த்த கலைஞன்!

வெளியே போய் விவேக் என்னெல்லாம் பண்ணிட்டு இருக்கார், அவருடைய வெற்றிகள்னு தொடர்ந்து, விவேக்குடைய வளர்ச்சியை கவனிச்சுக்கிட்டே இருந்தார். அவருக்கு ஒரு டீம் வெச்சு தனி காமெடி டிராக் எழுத ஆரம்பிச்சிட்டார். அதையெல்லாம் வெளியே இருந்து ரசிச்சார், அப்பா. விவேக்குடைய வளர்ச்சியில கவிதாலயாவுக்கு எப்படிப் பங்கிருக்கோ, அதே மாதிரி கவிதாலயாவுடைய வளர்ச்சியிலயும் விவேக்கிற்குப் பெரிய பங்கு இருக்கு.. நாங்க தயாரிச்ச ‘சாமி’ படத்துல விவேக் தனியே டிராக் எழுதினார். அதுல அவ்ளோ புரட்சிகரமான கருத்துகள் இருக்கும். படம் வெளியாகி இவ்வளவு வருஷங்களாகியும் இன்னும் அந்தப் பட காமெடிகள் எவர்கிரீனா இருக்க விவேக்தான் காரணம். ‘சாமி’ முதல் நாள் ஷோ பார்த்துட்டு அவர் என்கிட்ட, ‘மேடம் ஜாக்பாட் அடிச்சுட்டீங்க’ன்னு அவ்ளோ சந்தோஷமா சொன்னது இன்னும் நினைவுல இருக்கு.

கவிதாலயா வளர்த்த கலைஞன்!

வெளியே அவர் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சார். எங்களுடைய பேனர்ல நல்ல சப்ஜெக்ட் வந்தா அவரை ஹீரோவா நடிக்க வைக்கலாம்னு அட்வான்ஸ் கொடுத்து வெச்சிருந்தோம். ஆனா, அது சரியா அமையலை. இப்போ ஓடிடியில கவிதாலயா சில புராஜெக்ட்ஸ் பண்றது அவருக்கு ரொம்ப சந்தோஷம். ‘வெள்ளித்திரை, சின்னத்திரைன்னு என்னை அறிமுகப்படுத்தினது கவிதாலயாதான். அதனால, ஓடிடி தளத்திலும் கவிதாலயா மூலமா அறிமுகமாகணும்னு ஆசைப்படுறேன்’னு சொல்லியிருந்தார்.

கவிதாலயா வளர்த்த கலைஞன்!

விவேக், எனக்குத் தம்பி மாதிரி. அப்பா இறந்த பிறகும் எங்க குடும்பத்தோட ரொம்ப நட்பா இருந்தார். அவங்க மனைவி, குழந்தைகளும் எங்களுக்கு நல்ல பழக்கம். அவருடைய மகன் இறந்தபோது ரொம்ப கஷ்டப்பட்டோம். 2019-ல திடீர்னு வந்து, ‘எனக்கு கே.பி சார் பயன்படுத்தின ஏதாவது ஒரு பொருளை நீங்க தரணும்’னு சொன்னார். அப்புறம், அப்பா பயன்படுத்தின இங்க் பேனாவைக் கொடுத்தோம். அதைக் கையில வாங்கினதும் முகத்துல அப்படியொரு சந்தோஷம். அவர் ஆசைப்பட்டுக் கேட்டதை நிறைவேத்திட்டோம்னு மனசுக்கு ஆறுதலா இருக்கு.

அப்பா ‘எனக்கு அப்புறம், பத்ம வாங்கிட்டான்’னு எல்லோர்கிட்டயும் பெருமையா சொல்லிட்டிருந்தார். அவங்க ரெண்டு பேருக்குள்ள அப்படி ஒரு அழகான உறவு இருந்தது. மேலோகத்துல ரெண்டு பேரும் இந்நேரம் பேசிக்கிட்டிருப்பாங்க” என்றார்.