Published:Updated:

“பாலா சொல்லித்தான் ஹீரோவா நடிக்கிறேன்!”

விசித்திரன் படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
விசித்திரன் படத்தில்...

படம் முடிவானதும் பாலா சாரே மத்த ஆர்ட்டிஸ்ட்டுகள், ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் பத்மகுமார்னு எல்லோரிடமும் பேசிட்டார்.

“பாலா சொல்லித்தான் ஹீரோவா நடிக்கிறேன்!”

படம் முடிவானதும் பாலா சாரே மத்த ஆர்ட்டிஸ்ட்டுகள், ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் பத்மகுமார்னு எல்லோரிடமும் பேசிட்டார்.

Published:Updated:
விசித்திரன் படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
விசித்திரன் படத்தில்...

சமீபமாக மலையாளத்தில் வெளியான சிறந்த படங்களில் ‘ஜோசப்’ மிக முக்கியமான படம். அழுத்தமான கதைக்களமும் யதார்த்த நடிப்பும் அடித்தளங்களாக அமைந்த ‘ஜோசப்’ படம் தமிழில் ‘விசித்திரன்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இயக்குநர் பாலா தயாரிக்க, ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். மலையாளத்தில் இயக்கிய பத்மகுமாரே விசித்திரனை இயக்கியிருக்கிறார். இப்படத்தைப் பற்றி ஆர்வத்துடன் பேசத் தொடங்குகிறார் ஆர்.கே.சுரேஷ்.

“பாலா சொல்லித்தான் ஹீரோவா நடிக்கிறேன்!”

`` `ஜோசப்' படத்தைத் தமிழில் ரீமேக் பண்ணலாம்னு எப்படித் தோணுச்சு? பாலா எப்படி இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆனார்?’’

``எனக்கு மலையாளப் படங்கள் பிடிக்கும். சில மலையாளப் படங்களிலும் நடிச்சிருக்கேன். ரொம்ப அற்புதமான படம் ‘ஜோசப்.’ குறிப்பா ஜோஜு ஜார்ஜ் நடிப்பு பிரமாதமா இருந்தது. எனக்கும் அந்தப் படம் பிடிச்சிருந்ததே தவிர அதைத் தமிழ்ல ரீமேக் பண்ணணும்னு நினைக்கலை. அந்தச் சமயத்துல ‘அமீரா’ படம் பண்ணிக்கிட்டிருந்தேன். அப்போ சீமான் அண்ணன்கிட்ட ‘இந்த மாதிரி ஒரு படத்தைப் பார்த்தேன். அதிலிருந்து வெளியே வரமுடியலை’ன்னு சொன்னேன். ‘ஆமாடா நானும் கேள்விப்பட்டேன். நீ அந்த மாதிரி ஒரு படம் பண்ணு’ன்னு சொன்னார். அன்னைக்கு என்ன நினைச்சேன்னு தெரியலை, உடனே கேரளா கிளம்பிப் போய் அவங்களைச் சந்திச்சு, படத்துடைய தமிழ் ரீமேக் உரிமையை வாங்கிட்டு வந்துட்டேன். அப்புறம், ரெண்டு நாள் கழிச்சு, வேறொரு விஷயத்துக்காக பாலா சாரைப் பார்க்கப்போனேன். அப்போ இந்தப் படத்தைப் பத்திச் சொல்லி, ‘இதன் உரிமையை வாங்கிட்டு வந்துட்டேன். உங்களுடைய பி ஸ்டூடியோஸ் பேனர்ல இதைப் பண்ணலாமா?’ன்னு கேட்டேன். நான் அந்தப் படம் பார்க்கிறேன்னு சொன்னவர் மறுநாளே என்னைக் கூப்பிட்டார். நான் போய்ப் பார்த்தா, அங்க ஒரு டீமே அந்தப் படத்தைப் பார்த்துட்டு இருந்தாங்க. அவங்ககிட்ட, ‘சுரேஷை மனசுல வெச்சுக்கிட்டு இந்தப் படத்தைப் பாருங்க’ன்னு சொல்லியிருக்கார். அது எனக்குத் தெரியாது. என்னைப் பார்த்ததும், ‘படம் நல்லாருக்குடா. நம்ம பேனர்லயே பண்ணலாம்’னு சொன்னார். ‘யார் ஹீரோ? விஜய் சேதுபதியை வெச்சுப் பண்ணலாமா?’ன்னு கேட்டேன். ‘நீயே பண்ணுடா’ன்னார். அப்போ வரைக்கும் நான் அதுல நடிக்கணும்னு நினைக்கலை.''

“பாலா சொல்லித்தான் ஹீரோவா நடிக்கிறேன்!”
“பாலா சொல்லித்தான் ஹீரோவா நடிக்கிறேன்!”

``இந்தப் படத்துக்காக ஸ்பெஷலா என்ன முயற்சிகள் மேற்கொண்டீங்க?’’

``படம் முடிவானதும் பாலா சாரே மத்த ஆர்ட்டிஸ்ட்டுகள், ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் பத்மகுமார்னு எல்லோரிடமும் பேசிட்டார். நான் நல்லா சாப்பிட்டு வெயிட் போட்டு 113 கிலோ இருந்தேன். தொப்பை மட்டுமே ஏழெட்டு கிலோ இருக்கும். ஷூட்டிங் கொடைக்கானல்ல ஆரம்பிச்சிடுச்சு. ஒருநாள் பாலா சார் ஸ்பாட்டுக்கு வந்தார். என்னைப் பார்த்துட்டு, ‘அடையாளமே தெரியலைடா. அப்படியே ஜோஜு ஜார்ஜ் மாதிரியே இருக்கேடா’ன்னு சொன்னார். வெயிட்டா இருந்த போர்ஷன் எல்லாம் எடுத்து முடிச்சோம். லாக்டெளன் வந்திடுச்சு. இதுதான் டைம்னு, உடம்பை பயங்கரமா குறைச்சு, ப்ளாஷ்பேக் போர்ஷனுக்கு ரெடியானேன். மொத்தம் இதுல எனக்கு மூணு லுக். அதுக்கேத்த மாதிரி உடலமைப்பையும் குரலையும் மாத்தி நடிச்சிருக்கேன். இந்தப் படத்துக்கு உழைச்ச மாதிரி, இதுக்கு முன்னாடி நான் உழைச்சதில்லை. படம் பார்த்துட்டு, என்கிட்ட பாலா சார் எதுவும் சொல்லலை. என் மனைவியிடம், ‘உன் புருஷன் இதுக்குப் பிறகு, வேற லெவலுக்குப் போகப்போறான்’னு சொல்லியிருக்கார்.''

“பாலா சொல்லித்தான் ஹீரோவா நடிக்கிறேன்!”
“பாலா சொல்லித்தான் ஹீரோவா நடிக்கிறேன்!”
“பாலா சொல்லித்தான் ஹீரோவா நடிக்கிறேன்!”

`` `விசித்திரன்' டைட்டில் வித்தியாசமா இருக்கே!’’

“என்னுடைய கேரக்டர் பெயர் மாயன். ஆனா, பாலா சார்தான் `விசித்திரன்'னு இருக்கட்டும்னு சொன்னார். பூர்ணா என் மனைவியா நடிச்சிருக்காங்க. மது ஷாலினி ப்ளாஷ்பேக்ல வருவாங்க. ஒரிஜினல் வெர்ஷன்ல திலீஷ் போத்தன் நடிச்ச கேரக்டர்ல பக்ஸ் நடிச்சிருக்கார். ஜி.வி.பிரகாஷ் இசை பத்திச் சொல்லவே தேவையில்லை. மம்மூட்டி சார், மோகன்லால் சார் படங்களை இயக்கின பத்மகுமார் சார் என்னையும் இயக்கியிருக்கார்னு நினைக்கும்போது பெருமையா இருக்கு.”