Published:Updated:

“சென்னை தாண்டிச் சேர்வதுதான் முக்கியம்!”

சை.கெளதம்ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
சை.கெளதம்ராஜ்

பள்ளியில் கேள்வி கேட்பார்கள். ஆனால் பள்ளிக்கூடங்களைக் கேள்வி கேட்டு, படம் வெற்றிபெற்ற களிப்பில் இருக்கிறார் ‘ராட்சசி’ இயக்குநர் சை.கெளதம்ராஜ்.

“சென்னை தாண்டிச் சேர்வதுதான் முக்கியம்!”

பள்ளியில் கேள்வி கேட்பார்கள். ஆனால் பள்ளிக்கூடங்களைக் கேள்வி கேட்டு, படம் வெற்றிபெற்ற களிப்பில் இருக்கிறார் ‘ராட்சசி’ இயக்குநர் சை.கெளதம்ராஜ்.

Published:Updated:
சை.கெளதம்ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
சை.கெளதம்ராஜ்

“எல்லாப் பசங்களுக்கும் முதல் ஹீரோயின் கண்டிப்பா ஒரு டீச்சராதான் இருப்பாங்க. எனக்கு, என்னோட ஒண்ணாம் கிளாஸ் நிர்மலா டீச்சர். அப்படிப்பட்ட ஒரு ஹீரோயினுக்கு சமூகக்கோபம் வந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சேன். அதுதான் ‘ராட்சசி’ படம்” - மூன்று கேள்விகள் அல்ல, முதல் கேள்வி கேட்காமலே பதில் சொல்லி, பேச ஆரம்பித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
 “சென்னை தாண்டிச் சேர்வதுதான் முக்கியம்!”

“இந்தப் படத்தின் முதன்மைப் பாத்திரம் ஒரு பெண்தான் என்று கதை எழுதும்போதே முடிவு பண்ணிட்டிங்களா. இல்ல, ஜோதிகா, நயன்தாரா மாதிரி மாஸ்ஹீரோயினை வெச்சுப் படமா எடுக்கலாம்னு பின்னாடிதான் முடிவு பண்ணுனீங்களா?”

“இல்லை, இந்தக் கதையோட முதன்மைப் பாத்திரம் ஒரு பெண்ணாதான் இருக்க முடியும். ஒரு ஆண் ஆசிரியரை எலிமென்டரி கிளாஸ் பொண்ணு லவ் பண்ற மாதிரி சீன் வைக்க முடியுமா. வெச்சாலும் அது உண்மையா இருக்க முடியுமா? அதுவே ஒரு சின்னப்பையன் தன் டீச்சரை லவ் பண்றான்னு சொன்னா அதுல ஒரு இயல்பு இருக்கும். ஒரு தைரியமான பெண் சுடுகாட்டுக்குப் போறது, மிலிட்டரில இருக்கிற சர்வீஸ் லிமிட், இப்படிப்பட்ட பல நுணுக்கங்கள் எல்லாம் படத்தோட முதன்மைக் கதாபாத்திரம் ஒரு பெண்ணா இருக்கிறதுனாலதான் சாத்தியமாச்சு. ஜோதிகா மேடம் மாதிரி ஒரு சிறந்த நடிகை திரையில வந்து நடிக்கும்போது பாத்திரம் இன்னமும் வலுவா இருந்தது.”

“படத்துக்கு வசனங்கள் பெரிய பலம். ரொம்ப கருத்து சொல்லாம, ரசிக்கும்படி இருந்ததற்கான காரணம்?”

“நானும் சரி, பாரதிதம்பியும் சரி, தொடக்கத்திலேயே கண்டிப்பா இந்த வாட்ஸ்-அப் ஃபார்வேர்டு மெசேஜ், சமூக வலைதளத்துல வரும் நம்பகத்தன்மையில்லாத செய்திகளை எல்லாம் வெச்சு எந்த வசனத்தையும் எழுதக்கூடாதுன்னு முடிவு பண்ணினோம். சில காட்சிகளில் ஓவர் டிராமாவா போனப்போ, 25க்கும் மேற்பட்ட இடங்களில் வசனங்களைத் தூக்கிட்டேன். அதெல்லாம்தான் வசனங்கள் இவ்வளவு வீரியத்தோட இருக்கக் காரணம்.”

ஜோதிகா
ஜோதிகா

“இதுமாதிரி ஏற்கெனவே சில படங்கள் வந்திருக்கே?”

“`சாட்டை’ படத்தைத்தானே கேட்கிறீங்க? சமுத்திரக்கனி அண்ணன் இந்தப் படத்தப் பார்த்துட்டு, ‘ரொம்ப நல்லா படம் எடுத்திருக்க. எவனாவது சாட்டை மாதிரி இந்தப் படம் இருக்குன்னு சொன்னா, அப்படித்தான் படம் எடுப்போம். இன்னும் 10 படம் இது மாதிரியே எடுப்போம்னு சொல்லு’ன்னு சொன்னார். சாட்டை படத்துக்கும் இந்தப் படத்துக்கும் பல வேற்றுமைகள் இருக்கு. அது ஒரு ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் நடுவுல இருக்கிற டிராமா. இது அதிகாரத்துல இருக்கிறவங்க மாற்றத்தை நோக்கி எடுக்கவேண்டிய முடிவுகளைக் குறித்த படம். இருந்தும் ‘சாட்டை’கூட இந்தப் படத்த கம்பேர் பண்ணுனா அதையும் நான் பெருமையாதான் பார்க்கிறேன்.”

“ராட்சசி படம் என்ன நோக்கத்தோடு எடுக்கப்பட்டதோ, அது நிறைவேறிடுச்சா?”

“இந்தப் படம் விவாதத்தைக் கிளப்பணும்னு நினைச்சேன், நிறைய விவாதம் தொடங்கிடுச்சு. சமூக வலைதளங்கள்ல நிறைய ஆசிரியர்கள் படத்துக்கு ஆதரவாகவும், எதிர்த்தும் எழுதிக்கிட்டிருக்காங்க. இது நடக்கணும்னுதான் ஆசைப்பட்டேன். சென்னை மாதிரி நகரப் பகுதிகளில் இந்தப் படம் போய்ச் சேருவதைவிட, சென்னை தாண்டி ஒரு தமிழ்நாடு இருக்கே, கிராமங்கள் நிறைந்த தமிழகம். அங்கேயெல்லாம் படத்துக்குப் பெரிய வரவேற்பு இருக்கு. மக்கள் தங்கள் ஊர்ப்பள்ளிகளுடன் படத்தைத் தொடர்புபடுத்திப் பார்க்கிறாங்க. அதைத்தான் நான் படத்தோட வெற்றியா பார்க்கிறேன்.”