Published:Updated:

என்னை சேர்க்காமல் தேர்தல் நடத்தமுடியாது - 'அதிமுக' ராதாரவி

அலாவுதின் ஹுசைன்

திமுகவிலிருந்து விலகிய நடிகர் ராதாரவி இன்று காலை அதிமுகவில் இணைந்தார்.

ராதாரவி
ராதாரவி

'கொலையுதிர்காலம்' பட விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் நயன்தாராவை விமர்சனம் செய்ததாகக் கூறி திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட நடிகர் ராதாரவி இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

அதிமுகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி!
அதிமுகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி!

அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர்" நடிகர் ஜே.கே ரித்திஷ் என்னை அதிமுகவில் இணைக்க பாடுபட்டார், அவர் இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார். ஒரு சினிமா நிகழ்ச்சியில் நான் பேசியதற்காக மட்டும் என்னை திமுகவிலிருந்து நீக்கவில்லை என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். சொல்லப்போனால் நான் அதிமுகவில் இணைவது குறித்து இரண்டு நாள்களுக்கு முன்னர்தான் முடிவெடுத்தேன்.

தென்னிந்திய நடிகர்கள் சங்கம் தேர்தலில் பாக்கியராஜ் தலைமையில் இருக்கும் அணிக்கு நான் ஆதரவாக பிரசாரம் செய்யப்போகிறேன். விஷால் அணியிலுள்ள பூச்சி முருகன், திமுகவை சேர்ந்த நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு போன் செய்து சங்கத் தேர்தலில் வேறு யாருக்கும் ஆதராவாக செயல்பட்டால் திமுகவில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் ராதாரவி அங்கு இருப்பதால் யாரும் அந்த அணிக்கு வேலை செய்யக்கூடாது எனவும் அச்சுறுத்தல் செய்துள்ளனர்."

vishal
vishal

" இந்த சின்ன தேர்தலுக்கு இவ்வளவு பெரிய கட்சியின் பெயரை உள்ளே கொண்டு வருவது தவறாக இருந்தது. இந்த நடிகர் சங்கத் தேர்தலில் திமுக தலையீடு நிறைய இருக்கிறது. நமக்கு இனிமே திமுகவில் இருந்தால் தாங்காது என முடிவு செய்துவிட்டேன். அதனால்தான் வெளியே வந்தேன்." என்றவர்

விஷால் தொடுத்த நில மோசடி வழக்கு குறித்து பேசுகையில், " நான் வழக்கை சந்திப்பேன். என்மேல் மட்டுமா மோசடி வழக்கு இருக்கு, விஷால் மீது நடிகர் சங்க நிகழ்ச்சி நடத்தியதில் ரூபாய் 4.5 கோடி அளவுக்கு மோசடி புகார் இருக்கு, இப்போது தயாரிப்பாளர் சங்கத்தின் ரூபாய் 7.5 கோடி மோசடி செய்ததாக வழக்கு இருக்கு. என்னை நடிகர் சங்கத்தை விட்டு நீக்கிய விவகாரத்துல, விஷால் நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளேன். நான் இல்லாம, என்னை சேரக்காம தேர்தல் நடத்த முடியாது." என்றார்.

அலாவுதின் ஹுசைன்