
( LIECA ) காமிரா வழியாக அவர் தரிசித்த உலகத்தை இனி நாமும் காண ஒரு வாய்ப்பு... இதோ தொடரில் காணலாம்...
இளையராஜா எங்கே இருந்தாலும் அவருடனே இருப்பது இரண்டு பொருட்கள் .
ஒன்று - ஆர்மோனியப்பெட்டி . மற்றொன்று - காமிரா . ராஜாவின் இசை உலகமறிந்த விஷயம் . அவர் ஒரு ரசனையான புகைப்படக்கலைஞரும்கூட என்பது பலர் அறியாத மறுபக்கம்.
தான் எடுத்த புகைப்படங்களைத் தொகுத்து ' Through my eyes only ' என்று ஒரு புத்தகம் கொண்டுவரும் திட்டமும் அதில் கிடைக்கும் தொகையைப் பார்வையற்றவர்கள் நலனுக்காக அளிக்கும் யோசனையும் ராஜாவுக்கு இருக்கிறது .
இவர் எடுத்தப் புகைப்படங்களுடன் ஒரு விஷுவல் ஊர்வலம் இங்கே தொடங்குகிறது . தனக்குப் பிரியமான லைக்கா ( LIECA ) காமிரா வழியாக அவர் தரிசித்த உலகத்தை இனி நாமும் காண ஒரு வாய்ப்பு.
வானில் நிகழும் வெளிச்சத் திருவிழா , வர்ணங்களின் உற்சவம் அனைத்துக்கும் அவனே ஊற்றுக்கண் . தாவரங்களுக்குப் பச்சையையும் , கடலுக்கும் ஆகாசத்துக்கும் நீலத்தையும் தந்தவன் . அதைக் காணும் நம் கண்களுக்கு ஒளியாக வந்தவன்.
சூரியனின் ஒளி சந்திரனை விளக்காக மாற்றுகிறது . ஆற்று நீரிலும் குளம்குட்டை ஏரிகளிலும் கடலிலும் ஏன் . . . பனித்துளியிலும் கூட விழுந்து பிரகாசிக்க வைக்கிறது . ஆனால் , மனிதன் பிரகாசிப்பது எந்தச் சூரியனின் ஒளியால் என்பது யாருக்கும் தெரியாது .
கிராமத்திலிருந்தபோது நான் ஐந்தாம் வகுப்புப் படிக்கிற நேரத்தில் ஓடையைக் கடந்துதான் பள்ளிக்குச் செல்லவேண்டும் . கோடையின் வெயில் ஓடையின் மணலைத் தீயாக ஆக்கிவிடும் . சிறு வயதல்லவா . . . பாதங்கள் சுடுவது தெரியாது . அதில் எத்தனை முறை நடந்திருப்பேன் . . . . . !
சூரியனின் ஒளி சந்திரனை விளக்காக மாற்றுகிறது . ஆற்று நீரிலும் குளம்குட்டை ஏரிகளிலும் கடலிலும் ஏன் . . . பனித்துளியிலும் கூட விழுந்து பிரகாசிக்க வைக்கிறது . ஆனால் , மனிதன் பிரகாசிப்பது எந்தச் சூரியனின் ஒளியால் என்பது யாருக்கும் தெரியாது .
கிராமத்திலிருந்தபோது நான் ஐந்தாம் வகுப்புப் படிக்கிற நேரத்தில் ஓடையைக் கடந்துதான் பள்ளிக்குச் செல்லவேண்டும் . கோடையின் வெயில் ஓடையின் மணலைத் தீயாக ஆக்கிவிடும் . சிறு வயதல்லவா . . . பாதங்கள் சுடுவது தெரியாது . அதில் எத்தனை முறை நடந்திருப்பேன் . . . . . !
சமீபத்தில் திருவண்ணாமலையில் கிரிவலம் புறப்பட்டபோதும் அதே வெயில் நேரம் . எனது காலணியை எங்கேயோ விட்டுவிட்டேன் , பரவாயில்லையென்று வெறும் காலுடன் நடக்க ஆரம்பித்தேன்.
ஆத்தாடியோ . . . . . ! உலகத்தின் மொத்த வெயிலும் புதுசு ! எனக்காக அன்று திருவண்ணாமலையில்தான் அடித்தது . மலைப் பாதையின் கால்வாசி தூரத்தைக்கூட கடக்கவில்லை . . . என்னுடைய கால்களில் தீப்புண்களாக கொப்புளங்கள் ! சின்ன வயதின் பிஞ்சுத் தோலில் பொசுக்காத உஷ்ணம் , முதிர்ந்த பின் காலைப் பொசுக்குவது என்ன விந்தை ?
பிள்ளை வயது இயற்கையோடு என்னைப் பிணைத்திருக்கிறது . வளர்ந்துவிட்ட மனது என்னை இயற்கையிலிருந்து விலக்க எத்தனிக்கிறது .
வெயில் என்றாலே மரங்களைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியாது . ஈரம் சொட்டச் சொட்டப் பசுமை காட்டிச் சிரிக்கும் மரங்களைப் பார்க்கும் போதெல்லாம் என் மனதில் மழை கொட்டும் . அந்த மரங்களைப் பார்த்து , “ அட . . . என்ன இன்னிக்கு இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க ? " என்று குசலம் விசாரிக்கத் தோன்றும் .

அன்று திருவண்ணாமலையிலிருந்து திண்டிவனம் வழியாக திரும்பி வந்தபோது நெடுஞ்சாலைகளிலிருந்த மரங்களையெல்லாம் வெட்டி வீழ்த்தியிருந்தார்கள் . அதைக் கண்டபோது என் மனம் அடைந்த வேதனை அளவிடமுடியாது .
யாரோ புண்ணியவான்கள் எப்போதோ நட்டுவைத்த மரங்கள் சாலையின் இரு பக்கங்களிலும் அழகாக நிழல் தந்து கொண்டிருந்தனவே . . . அந்த மரங்களை வெட்டிய ' மகராசர்கள் ' பதிலுக்கு இன்னொரு செடியையாவது நட்டுவைக்கக்கூடாதா ?
உழைப்பாளிகள் இனி எந்த நிழலில் இளைப்பாறுவார்கள் ? சீக்கிரம் மரங்களை நடுங்கள் .
மரங்களை நடுங்கள் என்றதும் எனக்கு ஒரு ஆட்டோவில் எழுதியிருந்த வாசகம் நினைவுக்கு வருகிறது . ' வீட்டுக்கு ஒரு மனிதனை வளர்ப்போம் ! ' எத்தனை அர்த்தமுள்ள குமுறல் !
- பொன்.சந்திரமோகன்/ இளையராஜா
(18.04.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)