அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

ராஜாவின் பார்வையில் - இளையராஜா -2

Rajavin Parvaiyil - Ilaiyaraaja - 2
பிரீமியம் ஸ்டோரி
News
Rajavin Parvaiyil - Ilaiyaraaja - 2 ( Vikatan Archives )

மஹான்களுடன் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பது என் பாக்கியமே....

மணரின் அணுக்கத் தொண்டர்களில் அண்ணாமலை ஸ்வாமியும் ஒருவர் . " கஞ்சா , அபின் சாப்பிடுவது தியானத்துக்கு நல்லதாமே ! சாப்பிட் டால் எப்படி இருக்கும் . . . " என்று அவர் ரமணரிடம் கேட்டார் .

ஸ்நானம் முடியும் வரை எந்தப் பதிலும் சொல்லாமலிருந்த ரமணர் , " கஞ்சா சாப்பிட்டால் தியானம் இப்படித்தான் இருக்கும் . . . " என்று கூறித் தள்ளாடிக்கொண்டே அங்குமிங்கும் அலைந்து விழப்போவது போல் ஆடி . . . கடைசியாக அண்ணா மலை ஸ்வாமியைக் கட்டிப்பிடித்துக் கொண்டார் .

Rajavin Parvaiyil - Ilaiyaraaja - 2
Rajavin Parvaiyil - Ilaiyaraaja - 2
Vikatan Archives

விவேகானந்தரை ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கட்டிப்பிடித்ததுபோல . . . ரமணரால் கட்டப்பட்ட பிடியில் உலகமே புரண்டு எழுந்தது போன்று தனக்குள் ஒரு தெய்வீகப் பிரளய அனுபவம் ஏற்பட்டதை அண்ணாமலை ஸ்வாமி உணர்ந்தார் .

ரமணரிடம் , " பகவானே . . . . . தனியாகச் சென்று தவம் செய்ய வேண்டும் போலத் தோன்றுகிறது ! " என்றார் . உடனே ரமணர் , “ இதை கேட்டுச் செய்யவேண்டியது இல்லை . இப்போதே தவம் செய்யப் புறப்படு ! " என்று அண்ணாமலை ஸ்வாமியை ஆசீர்வதித்து அனுப்பிவைத்தார் .

இது 1938 - ல் நடந்தது . குருநாதர் ஆணைப்படியே ரமணாஸ்ரமத்துக்கு அருகில் தனக்கென ஓர் இடத்தை அமைத்துக்கொண்டார் .

திருவண்ணாமலைக்கு நான் செல்லும் போதெல்லாம் அண்ணா மலை ஸ்வாமியைச் சந்திப்பது வழக்கம் . மாலை நேரத்தில் மலைப் பாதையில் நடந்து செல்லும் போது ஆன்மீக விஷயங்கள் நிறையப் பேசுவோம் . மனதுக்கு இதமாக இருக்கும் . அப்படி நடந்து சென்ற ஒருநாளில் , அவரைப் பாறைமேல் உட்காரச்சொல்லி நான் எடுத்த படம்தான் நீங்கள் பார்ப்பது .

எத்தனையோ மஹான்களுடன் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத் திருப்பது என் பாக்கியமே . அவர்களில் கோடி ஸ்வாமி , மாயம்மா போன்றவர்கள் மறைந்து , திருமூலர் சொல்லிய முறையில் அவர்களைச் சமாதி வைத்த நேரங்களில் அருகில் இருந்திருக்கிறேன் .

Rajavin Parvaiyil - Ilaiyaraaja - 2
Rajavin Parvaiyil - Ilaiyaraaja - 2
Vikatan Archives

அண்ணாமலை ஸ்வாமி மறைந்த போது என்னையறியாமல் எனக்கு அழுகை வந்தது . அப்போதுதான் அவர் எதிர்பார்ப்பில்லாமல் என்மேல் காட்டிய அன்பின் ஆழம் புரிந்தது.

ரமணர் அவருக்குக் கொடுத்த ஒரு ஆன்மீகப் புத்தகத்தை எனக்குக் கொடுத்தார் . அதுமட்டுமில்லாமல் , வில்வமரத்திலிருந்து கிளையை ஒடித்து அவர் வைத்திருப்பது போல ஒரு கைத்தடி செய்து நன்றாக வழ வழப்பாக்கி எனக்குக் கொடுத்திருக்கிறார் . பத்திரமாக வைத்திருக்கிறேன் .

- பொன்.சந்திரமோகன்/இளையராஜா

(24.04.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)