அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

ராஜாவின் பார்வையில் - இளையராஜா - 3

Rajavin Parvaiyil - ilaiyaraaja
பிரீமியம் ஸ்டோரி
News
Rajavin Parvaiyil - ilaiyaraaja

என்ன இருந்தாலும் அன்று வீசிய தென்றல் தான் - தென்றல்!

நீரில் எழும் அலைகள் மெள்ள மெள்ளப் படர்ந்து நீரிலேயே மறைவதைப் போல , காற்றால் எழும் இசை காற்றிலேயே கலந்து உறைந்து விடுகிறது .

நீரலைகளைப் பார்த்து . . . ரசித்து எத்தனைதான் மனதுக்குள் பதிய வைத்தாலும் நீண்ட காலம் நினைவிருக்க காமிராவினால் பதிய வேண்டும் . இசையையோ எத்தனை காலம் வேண்டுமானாலும் எப்போதும் நினைவு கொள்ளலாம் . மீண்டும் பாடிப் புதிய வடிவம் தரலாம் .

Rajavin Parvaiyil - ilaiyaraaja
Rajavin Parvaiyil - ilaiyaraaja

என்றோ நாம் கேட்ட பாடலை இப்போது பாடி அன்றைக்கு எழுந்த மன நிலையை அப்படியே இந்தக் கணத்தில் உருவாக்கிப் புதுப்பித்துக்கொள்ளலாம் .

' ஓடி விளையாடு பாப்பா . . ' - பள்ளியில் முதன் முதலாகக் கேட்ட போது அன்றைக்கு மரத்தில் ஏறித் துள்ளிக்குதித்து விளையாடியது நினைவுக்கு வருகிறது . என் வகுப்பறையில் இருந்து கோரஸாக இந்தப் பாடலை நாங்கள் பாடினால் , ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பாடத்தைக் கவனிக்காமல் எங்களையே பார்த்துக்கொண்டிருப்பார்கள் .

டேப் ரிக்கார்டர் , டி . வி . , சினிமா இல்லாத அந்தக் காலத்திலேயே இந்தப் பாரதியார் எவ்வளவு தூரம் பரவினார் . அடேயப்பா ! சினிமாக்காரர்களுக்கு அவர் போட்ட பிச்சைதான் எவ்வளவு ! இன்றைய கவிஞர்கள் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே அவர் பட்டினி கிடந்தாரோ என்று தோன்றுகிறது . அவர் எழுதிய பாடல்கள் யாரோ ஒருவர் ' சிச்சுவேஷன் ' சொல்லியதால் எழுதப்பட்டவை அல்ல . அந்தப் பாடல்கள் அனைத்தும் வெறும் நீரலைகள் அல்ல . உணர்வுபூர்வமாக வாழ்ந்தவனின் உயிரலைகள் !

வெறும் பாடல் வரிகள் மனிதனைப் பண்படுத்தினால் இசையோ அவன் மனதைப் புண்படுத்தும் - சொல்லின் அர்த்தத்தை இன்னும் ஆழப் படுத்தி உள்ளத்தில் கலந்து உயிரை ஊடுருவும் !

Rajavin Parvaiyil - ilaiyaraaja
Rajavin Parvaiyil - ilaiyaraaja

எத்தனையோ கண்ணம்மா பாடல்களை பாரதி எழுதியிருக்கிறார். இருந்தாலும் சின்னஞ்சிறு கிளியே . . ' பரவியது போல எந்தப் பாடலும் பரவவில்லை . காரணம் - வர்ணமெட்டு என்பார் கி . ராஜ நாராயணன் . ஐம்பது வருடங்களுக்கு முன்பு சி . ஆர் . சுப்புராமன் அவர்கள் தந்த அந்தப் பாடலின் வர்ணமெட்டை மிஞ்சுகிற ஒரு மெட்டு இன்றுவரை யாராலும் போடமுடியவில்லை! ஒரு சினிமா பாட்டு கர்னாடக சங்கீத மேடையில் இப்போதும் இடை விடாது ஒலிக்கிறது என்றால் அது சின்னஞ்சிறு கிளியேதான் .

என்ன இருந்தாலும் அன்று வீசிய தென்றல் தான் - தென்றல் !

இன்று . . . பெட்ரோல் புகையே மேகமாகிவிட்டது . அதில் தென்றலை எங்கே தேடுவது ?

- பொன்.சந்திரமோகன்/இளையராஜா

(02.05.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)