அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

ராஜாவின் பார்வையில் - இளையராஜா - 5

Rajavin Parvaiyil - Ilaiyaraaja
பிரீமியம் ஸ்டோரி
News
Rajavin Parvaiyil - Ilaiyaraaja ( Vikatan Archives )

என் வாழ்நாளில் முதன் முதலாக ஸ்தம்பிக்கவைத்த கண்களைக் கண்டேன்...

ழுத்து பிறர்க்கென

தொழுதது பிறர்க்கென

ஊனுடம்பெடுத்து

விழுந்தது பிறர்க்கென

Rajavin Parvaiyil - Ilaiyaraaja
Rajavin Parvaiyil - Ilaiyaraaja
Vikatan Archives

சிறு வயதில் ஓவியர் சில்பி வரைந்த படங்களை நேரம் போவது தெரியாமல் பார்த்துக்கொண்டே இருப்பேன் . அவரிடம் மூகாம்பிகையின் படம் வரைந்து பூஜைக்கு வைத்துக் கொள்ளவேண்டும் எனத் தோன்றியது . அவரும் ஒப்புக் கொண்டார் .

படம் வரைவதற்கு முன் காஞ்சிப் பெரியவரைப் பார்த்துவரலாமா?' என்று கேட்டார். ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்துக்காக என் பெயரை காஞ்சிப் பெரியவர் சிபாரிசு செய்ததும் நானும் பெரியவரைப் பார்க்காமலேயே அதற்கு ஒப்புக் கொண்டதும் - நடந்து சில நாட்களே ஆகியிருந்தன .

நாங்கள் பெரியவரைப் பார்க்கப் போனபோது - அவர் சதாரா என்ற இடத்தில் முகாமிட்டு இருந்தார் . வடநாட்டவர் யார் யாரோ வந்திருந்தார்கள்.

உள்ளே சென்றோம் . என் கண்கள் - அதன் வாழ்நாளில் முதன் முதலாக ஸ்தம்பிக்கவைக்கும் கண்களைக் கண்டன . அந்த ஒளிபொங்கும் கண்களை விட்டு என் கண்கள் அகலவில்லை . அன்று மாலை தரிசனம் முடிந்து வெட்ட வெளியில் உட்கார்ந்தார் பெரியவர் . அவரைச் சுற்றி மடத்து உதவியாளர்களும் நானும் சில்பியும் மட்டுமே .

மேலே வானம். கீழே பெரியவர். வானத்தை நோக்கி - ஒவ்வொரு நட்சத்திரமாக அடையாளம் காட்டி அருந்ததி முதற்கொண்டு அத்தனை நட்சத்திரங்களையும் விளக்கினார்.

பின்பு , சிறிய ருத்திராட்ச மாலை ஒன்றும் பெரிய ருத்திராட்ச மாலை ஒன்றும் ( அவர் அணிந்திருந்தது ) எனக்கு வழங்கினார் .

ஒரு முறை மஹாகாவ் என்ற இடத்தில் பெரியவரை தரிசிக்கச் சென்றிருந்தோம் . மௌன விரதத்தில் இருந்த பெரியவர் , உதவியாளர் என் பெயரைச் சொன்னதும் ' என்னவாம் ' -என்று சைகை செய்தார். 'இளையராஜாவுக்கு இன்னும் வீடே அமையலியாம் . பெரியவர் ஆசீர்வாதம் வேணுமாம் என்று நான் சொல்லாத ஒன்றை உதவியாளர் சொன்ன போது , எனக்குத் தூக்கிவாரிப் போட்டது . 'ஐயோ! எனக்கு அதெல்லாம் வேண்டாம். மனசு சுத்தமானா போதும் ' என்று கத்திவிட்டேன் .உள்ளே சென்றோம் . என் கண்கள் - அதன் வாழ்நாளில் முதன் முதலாக ஸ்தம்பிக்கவைக்கும் கண்களைக் கண்டன . அந்த ஒளிபொங்கும் கண்களை விட்டு என் கண்கள் அகலவில்லை . அன்று மாலை தரிசனம் முடிந்து வெட்ட வெளியில் உட்கார்ந்தார் பெரியவர் . அவரைச் சுற்றி மடத்து உதவியாளர்களும் நானும் சில்பியும் மட்டுமே .

மேலே வானம். கீழே பெரியவர். வானத்தை நோக்கி - ஒவ்வொரு நட்சத்திரமாக அடையாளம் காட்டி அருந்ததி முதற்கொண்டு அத்தனை நட்சத்திரங்களையும் விளக்கினார்.

பின்பு , சிறிய ருத்திராட்ச மாலை ஒன்றும் பெரிய ருத்திராட்ச மாலை ஒன்றும் ( அவர் அணிந்திருந்தது ) எனக்கு வழங்கினார் .

ஒரு முறை மஹாகாவ் என்ற இடத்தில் பெரியவரை தரிசிக்கச் சென்றிருந்தோம் . மௌன விரதத்தில் இருந்த பெரியவர் , உதவியாளர் என் பெயரைச் சொன்னதும் ' என்னவாம் ' -என்று சைகை செய்தார். 'இளையராஜாவுக்கு இன்னும் வீடே அமையலியாம் . பெரியவர் ஆசீர்வாதம் வேணுமாம் என்று நான் சொல்லாத ஒன்றை உதவியாளர் சொன்ன போது , எனக்குத் தூக்கிவாரிப் போட்டது . 'ஐயோ! எனக்கு அதெல்லாம் வேண்டாம். மனசு சுத்தமானா போதும் ' என்று கத்திவிட்டேன் .

Rajavin Parvaiyil - Ilaiyaraaja
Rajavin Parvaiyil - Ilaiyaraaja
Vikatan Archives

புன்னகைத்தவாறு கையைத் தூக்கி என்னை ஆசீர்வாதம் செய்தார் பெரியவர் . ஐந்து நிமிடங்கள் கை இறங்கவில்லை . அந்த ஐந்து நிமிடங்களில் தாமாகவே என் கண்கள் மூடிவிட்டன . உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை ஏதோ ஒரு திரவப் பொருள் என் உடம்பின் உள்ளே வழிந்து இறங்கியது தெரிந்தது . இன்னவென்று விவரிக்க இயலாத இன்ப உணர்வு என்னை ஆட்கொண்டது .

சூரியன் தன் ஒளிக்கிரண சக்தியை - பூமிக்கும் மற்ற கிரகங்களுக்கும் வழங்குவது போல் - தன் சக்தியையெல்லாம் திரட்டிச் செய்து வந்த பூஜைகளும் மந்திரங்களும் யாகங்களும் யோகங்களும் மண்ணில் வீணாகவா போய்விடும் ?

- பொன்.சந்திரசேகர்/ இளையராஜா

(16.05.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)