அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

ராஜாவின் பார்வையில் - இளையராஜா - 6

Rajavin Parvaiyil - Ilaiyaraaja
பிரீமியம் ஸ்டோரி
News
Rajavin Parvaiyil - Ilaiyaraaja ( Vikatan Achives )

போர்வெறியும் சாதிவெறியும் உன் பின்னால் எரியும் நெருப்பு!

ளம்பிறை வளர் குயிலே !

உன் பின்னே எரியும் நெருப்பு உன் மனதின் நிலையோ...? இல்லை - நீ தினமும் காயும் துன்ப நெருப்போ...?

உன் கைகள் அணைத்திருப்பது எதிர்காலத்தையா இல்லை - 1 கடந்த காலத்தின் பலனையா...?

முப்பிறப்பில் இட்ட தீ இப்பிறப்பில் எரிகிறதோ...? இப்பிறப்பில் எரியும் தீ வரும் பிறப்பை எரிக்கிறதோ...?

உனக்கு இருக்கும் துயரம் வேறு - உன்னைக் கண்டதால் எனக்குள் எழும் துயரம் வேறு

Rajavin Parvaiyil - Ilaiyaraaja
Rajavin Parvaiyil - Ilaiyaraaja
Vikatan Archives

விளையாடும் பருவத்தில் துயரம் உன்முன் விளையாடுகிறதோ..? நெஞ்சைத் துளை போடுகிறதோ..?

இந்த உலகம் உன்னையும் என்னையும் கண்டுகொள்ளவில்லை! வா, நாம் கண்டு சொல்வோம்!

"பட்டினி வறுமையல்ல துன்பமுமல்ல - அது அறிவுச்சோற்றை அள்ளி வழங்கும் அக்ஷய பாத்திரம்! - இதை அறியாது பிக்ஷைப் பாத்திரத்தைத் தூக்கிவிட வேண்டாம்! "

போர்வெறியும் சாதிவெறியும் உன் பின்னால் எரியும் நெருப்பு! உன் கையில் குழந்தை இசையின் கையில் குழந்தையாய் நான்! குழந்தையோ மெதுவாகப் பற்றியிருக்கிறது நானோ இறுக்கிப் பிடித்திருக்கிறேன்!

- பொன்.சந்திரமோகன்/ இளையராஜா

(23.05.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)