
பாலுமகேந்திரா மிகவும் ரசித்த படம் இது...
தூண்டில் - தேவையின் அடையாளம்
வலை - ஆசையின் அடையாளம்
ஐம்பது வருடங்கள் இருக்கும் . . . நான் முதன் முதலாகக் கடல் பார்த்து ! அண்ணனின் கச்சேரிகளில் அப்போது தான் நானும் மேடை ஏறிப் பெண் குரலில் பா . . . . ஆரம்பித்திருந் தேன் . பள்ளி மாணவன் நான் ஏழாவதோ எட்டாவதோ படித்துக் கொண்டிருந்தேன் .
தேர்தல் காலம் . . . தென் மாவட்ட டங்களில் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரசா ரத்துக்காக அண்ணன் கச்சேரிகள் செய்து கொண்டிருந்தார் . கீழக்கரை , ராமநாதபுரம் என்று ஒரு பயணம் . கச்சேரிகளை முடித்துக் கொண்டு கிளம்பியபோது என்னைக் கடற் கரைக்கு அழைத்துப்போனார்கள் .
அதுவரை எனக்குக் கடல் என்பது நீல நிறம் . . . . நிறைய தண்ணீ ர் என்று புத்தகம் சொல்லித்தந்ததும் கறுப்பு - வெள்ளை சினிமாக்களில் கண்டு ஏமாந்ததும் மட்டும்தான் .
முதன் முதலாகக் கடல் பார்த்த போது அசந்து போனேன் . கடல் பற்றி எனக்குள்ளிருந்த படிமம் அடிபட்டு போய் அதன் பிரமாண்டம் எனக்குப் பிடித்துப்போக , மனசு துள்ளாட்டம் போட்டது .
கட்டுக்கடங்காமல் கண்ணுக்கெட் டிய தூரம் வரை ததும்பி நிற்கிறது நீர் . முட்டுப்பாறைகளோடு விளை யாடுகிற கடல் . . . . அதன் குளிர்ச்சி . . . உப்புச்சுவை . . . ஈர மணல் . . . ஆசை தீர விளையாடி விட்டு வீட்டுக்கு வந்த பின்னாலும் டவுசர்பையில் மிச்ச மிருந்தது குறுமணல்.
' நான் கடல் பார்த்தேனே ' என்று என் கிராமத்திலிருந்த எல்லா
பையன்களிடமும் நான் பெருமையடித்துக்கொண்டதும் , பொறாமை கொண்ட சில சிறுவர்கள் - " வயசானவங்கதாண்டா காசி , ராமேஸ்வரமனு போவாங்க " என்று என்னைக் கிண்டலடித்ததும் நினைவுக்கு வர , சிரிப்பு வருகிறது .

சென்னை வந்த புதிதில் கடற்கரைக்கு நான் , பாரதிராஜா , அண்ணன் பாஸ்கர் எல்லோரும் பொழுது போக்கப் போவதுண்டு . நான் குரலெடுத்துப் பாடுவேன் . யார்றா அது " என்பது மாதிரி ஓரக்கண்ணால் பார்த்துவிட்டுப் போவார்கள் சிலர் . எதைப் பற்றியும் கவலையில்லாது உற்சாகமாகப் பாடுவோம் .
கல்கி ஒருமுறை எழுதியிருந்தார் . . . ' ஆகாய விமானத்திலிருந்து பூமியைப் பார்க்கும் போது எல்லாமே சின்னஞ்சிறு வடிவங்களாகத் தெரிய . மனசு சுருங்கிப் போய்விடுகிறது . மண்ணில் ஒரு மாட்டுவண்டியில் அமர்ந்து கொண்டு ஆகாசத்தைப் பார்க்கும் போது மனசு விரிகிறது ' என்று ! கடலும் அப்படித்தான் .
பாலுமகேந்திரா மிகவும் ரசித்த படம் இது . கேரளத்தின் கடற்கரையோரமாகத் தங்கியிருந்த நேரத்தில் இந்தக் காட்சி கண்ணில் பட , காமிராவை எடுத்துக்கொண்டு ஓடிப்போய் படம் பிடித்தேன் .
" டேய் . . . தூண்டில் போடுறவன் அதுல புழுவை மாட்டிப் போடறது எதுக்கு மீன் பசியாற இல்லை . . . . அந்த மீனைப் பிடிச்சு தான் பசியாறத்தான் ' - என்பார் பாவலர் அண்ணன் . தேர்தல் அறிவிப்புதான் நினைவுக்கு வருகிறது !
(30.05.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)