
இந்த உலகம் எத்தனை முறை அழிந்து எத்தனை முறை உருவானதோ..?
இது போன்ற அரண்மனைகளையும் கோட்டைகளையும் பார்ப்பவர்கள் யாராயிருந்தாலும் அது உருவான காலகட்டத்தைக் கற்பனை செய்து பார்க்கவே விரும்புவார்கள்.
இந்தியாவில் இயற்கையில் அழிந்த அரண்மனைகளையும் கோயில்களையும் விட படையெடுப்பால் அழிக்கப்பட்ட அரண்மனைகளும் கோயில்களும் அதிகம்!
காலம் எதையும் விட்டுவைக்கப்போவதில்லை.
இந்த உலகம் எத்தனை முறை அழிந்து எத்தனை முறை உருவானதோ..?
இந்த மனித குலம் எத்தனை முறை அழிந்து தோன்றி - அழிந்து எத்தனாவது தடவை இப்போது நடந்துகொண்டிருக்கிறதோ...?
எந்த ஒரு கலை உருவாக்கமும் - காலம் கடந்து - எவ்வளவு காலம் முன்னோக்கிப் படைக்கப்பட்டிருக்கிறது உயர்ந்த படைப்பு என்று கணக்கிடப்படுகிறது.
பாரதியாரின் கவிதைகள் நூறு ஆண்டுகள் தாண்டி நிற்கின்றன என்னும்போது, நூற வருடம் (Advance ஆக) முன்னோக்கிச் சென்றிருக்கிறார் என்றும், கம்பன் ஏறத்தாழ ஆயிரம் வருடங்கள் முன்னோக்கிச் சென்றிருக்கிறார் என்றும், இளங்கோ, வள்ளுவர், இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னோக்கிச் சென்றிருக்கிறார்கள் என்றும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பழைய கட்டடங்களையும் பாழடைந்த கோட்டைகளையும் கோயில்களையும் நாகரிகத்தை நோக்கி முன்னேறி ச் சென்றிருக்கிறார்கள் என்றும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பழைய கட்டடங்களையும் பாழடைந்த கோட்டைகளையும் கோயில்களையும் நாகரித்தை நோக்கி முன்னேறிய மனிதனின் வளர்ச்சி என்றும் காலத்தின் அடையாளங்கள் என்றும் சொல்லுகிறோம்.

இவையெல்லாம் மனிதன் வாழ்ந்ததற்கு அடையாளங்களே தவிர, காலத்தின் அடையாளங்கள் இல்லை! இந்த அடையாளங்கள் மனிதனுக்கு மட்டுமே!
காலத்துக்கு எந்த அடையாளமும் இல்லை!
கி.மு., கி.பி. என்பது காலத்தைக் குறிப்பதல்ல. இன்னாருக்கு முன், இன்னாருக்குப் பின் என்று மனிதன், மனிதனுக்கு வைத்த அடையாளம்!
அழிவைப் பற்றி எண்ணும்போது ஏதோ ஒரு சூன்யம் மனதை வெறுமையாக்குகிறது. ஆனால், அதற்குப் பின் புதியதோர் தோற்றம் காத்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க மறந்துவிடுகிறது!
- பார்வை தொடரும்
- பொன்.சந்திரமோகன்/இளையராஜா
(29.08.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)