அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

ராஜாவின் பார்வையில் - இளையராஜா - 8

Rajavin Parvaiyil - Ilaiyaraja
பிரீமியம் ஸ்டோரி
News
Rajavin Parvaiyil - Ilaiyaraja ( Vikatan Achives )

உண்மையான உணர்வுப்பட்ட ஒரு ரசிகனின் கதை இது...

ளியைச் சொல்வது இருள் . இருளைச் சொல்வது ஒளி .

கம்ப்யூட்டர் சயின்ஸ் மனதால் நினைத்துப் பார்க்க முடியாத வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் இந்த நாளில் , பண்ணைபுரத்துக்கு கிராமபோன் ரெக்கார்டு வந்ததை நினைத்துப் பார்க்கச் சிரிப்பு வருகிறது .

அன்றைக்கு மாடர்ன் என்று நினைத்தது இன்றைக்குக் காமெடி யாக இருக்கிறது . ஆக , நாளைய காமெடி என்பது இன்று மாடர்ன் என்று நாம் சொல்பவைதானே ?

Rajavin Parvaiyil - Ilaiyaraja
Rajavin Parvaiyil - Ilaiyaraja
Vikatan Achives

பண்ணைபுரத்தில் ராயப்பன் என்பவருக்குச் சொந்தமான ' மேரி சவுண்ட் சர்வீஸ் ' என்ற ஒலிபெருக் கிக் கடையில் பாஸ்கர் வேலை பார்த்து வந்தார் . பக்கத்துக் கிராமங்களிலும் பண்ணைபுரத்திலும் வீட்டு விசேஷங்களுக்கு ஒலிபெருக்கியிலிருந்து வருகின்ற அந்தக் காலத்துப் பாடல்களை பாஸ்கர் மைக் மூலம் பேசி அறிமுகப்படுத்தும் விதமே தனி அமர்க்களமாக இருக்கும் . அப்போது இலங்கை வானொலியில் மயில்வாகனன் என்பவர் திரை இசைப் பாடல்களை ஒலிபரப்பும் முன் பேசுவதைக் கேட்பதற்கென்றே ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டம் நாடு முழுதும் இருந்தது . ஒன்றுமில்லாத பாடலைக்கூட அவருடைய பேச்சு மிகவும் சுவையுள்ளதாக மாற்றிவிடும் . அதைப் போல பாஸ்கரும் பலவித மான யுக்திகளைக் கொண்டு விசேஷ நாட்களைக் கலகலக்கச் செய்து விடுவார் . அதில் , பெரியவர் பாவல ரும் அவ்வப்போது கலந்து கொள்வார் .

கண்டசாலா பாடிய பாடலைப் போட்டுவிட்டு அதில் ( Intro Prelude ) Music முடிந்ததும் கண்டசாலா பாடும் போது Volume - ஐக் குறைத்து விட்டு மைக்கை ஆன் பண்ணி அவர் பாடுவார் . கேட்பவர்களுக்கு ஒரு வித்தியாசமும் தெரியாது . இதில் ஜிக்கி பாடிய பாடல்களையெல்லாம் அண்ணன் இல்லாத நேரத்தில் நான் பாடுவதற்கு பாஸ்கர் ஏற்பாடு செய்வார் .

பண்ணைபுரத்தில் ஒரு நாடக அரங்கம் கிராமத்துக்கென்று சொந்தமாக இருந்தது. டிஆர். மஹாலிங் கம், கலைவாணர் , எம் . ஆர் . ராதா , டி . எஸ் . பாலையா , எஸ் . எஸ் . ஆர் . என்று அதில் நாடகங்கள் நடத்தாதவர்களே கிடையாது .

Rajavin Parvaiyil - Ilaiyaraja
Rajavin Parvaiyil - Ilaiyaraja
Vikatan Achives

ஏதோ ஒரு விசேஷத்துக்காக நடந்த நாடகத்துக்குத் தலைமை தாங்க அண்ணன் சிவாஜி அவர்கள் வருவதாக இருந்தது . பாஸ்கருக்கு ஒரே குஷி . அவர் சிவாஜியின் தீவிர ரசிகர் . அத்துடன் மனதுக்குள் ஒரு திட்டம் . மைக் வைக்கிற சாக்கில் எப்படியாவது சிவாஜியாரைத் தொட்டுப் பார்த்துவிடவேண்டும் .

அந்த நாளும் வந்தது . பாஸ்கர் வானத்தில் பறந்தார் . கிராமமே தாங்கமுடியாத கூட்டம் . சிவாஜி மேடைக்கு வந்தார் . பின்னாலேயே பாஸ்கர் மைக் முன்னே வந்தபோது மைக்கை அட்ஜஸ்ட் செய்துவிட்டு சிவாஜியாரைத் தொட்டேவிட்டார் . அன்றிரவு - பாஸ்கருக்குப் பயங்கர ஜுரம் . மூன்று நாள் இறங்கவே இல்லை .

உண்மையான உணர்வுப்பட்ட ஒரு ரசிகனின் கதை இது . பாஸ்கர் நல்ல ரசிகர் .

(06.06.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)