Published:Updated:

பிரபுவின் அட்வைஸ்... அனிருத் தந்த சர்ப்ரைஸ்!

மாளவிகா - சாய் ஹரி
பிரீமியம் ஸ்டோரி
மாளவிகா - சாய் ஹரி

ஆரம்பத்தில் மாளவிகாவிற்கு என் மேல இருக்கிறது வெறும் ஈர்ப்புதான்னு நினைச்சேன். இவங்க இந்த அளவுக்கு சீரியஸா இருப்பாங்கன்னு நான் நினைக்கலை

பிரபுவின் அட்வைஸ்... அனிருத் தந்த சர்ப்ரைஸ்!

ஆரம்பத்தில் மாளவிகாவிற்கு என் மேல இருக்கிறது வெறும் ஈர்ப்புதான்னு நினைச்சேன். இவங்க இந்த அளவுக்கு சீரியஸா இருப்பாங்கன்னு நான் நினைக்கலை

Published:Updated:
மாளவிகா - சாய் ஹரி
பிரீமியம் ஸ்டோரி
மாளவிகா - சாய் ஹரி

``எல்லாப் பொண்ணுங்களை மாதிரி நானும் என் அப்பா செல்லம். கல்யாணம் முடிஞ்சு வீட்டுக்குப் போகும்போது என் அம்மாவைவிட மூன்று மடங்கு அதிகமா என் அப்பா அழுதார். அந்த நொடி அப்பாவை ரொம்ப மிஸ் பண்ணப் போறோம்னு நானும் அழுதேன். கல்யாணம் முடிஞ்சு இவருடன் போனதில் இருந்து இந்த நொடி வரைக்கும் நான் அப்பாவை ஒரு தருணத்தில்கூட மிஸ் பண்ணினதா உணர வேயில்லை. அந்த அளவுக்கு என் கணவர் என்னைப் பார்த்துக்கிறார்!'’ என நெகிழ்வுடன் பேசத் தொடங்கினார், மாளவிகா ராஜேஷ். `ஜெய்பீம்' படத்தில் வருகிற `செண்டுமல்லி' பாடலைக் கன்னட வெர்ஷனில் பாடி, பலரையும் கவர்ந்தவர். பிரபல இசைக்கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் ஒரே மகள். இவருக்கும், கடம் இசைக்கலைஞர் சாய் ஹரிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

பிரபுவின் அட்வைஸ்... அனிருத் தந்த சர்ப்ரைஸ்!

‘‘நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே இவர் எனக்கு அறிமுகம் ஆகிட்டார். அவரைப் பார்த்த நொடியே இவர் என்னுடையவர் என்கிற ஃபீல் வந்துட்டு. ஒன்பது வருடக் காதல் இப்ப கைகூடியிருக்கு” என்றதும் சாய் ஹரி பேசத் தொடங்கினார்.

“ஆரம்பத்தில் மாளவிகாவிற்கு என் மேல இருக்கிறது வெறும் ஈர்ப்புதான்னு நினைச்சேன். இவங்க இந்த அளவுக்கு சீரியஸா இருப்பாங்கன்னு நான் நினைக்கலை. அந்தச் சமயம் இவங்க சின்னப் பொண்ணுங்கிறதனால நான் பெருசா எடுத்துக்கல. எனக்கு படங்கள் பார்க்கிறது ரொம்பப் பிடிக்கும். `மின்சார கனவு’ படத்தை மாளவிகாவைப் பார்க்கச் சொன்னேன். இவங்களும் பார்த்துட்டு ஃபீல் பண்ணி எனக்கு ஏதோ மெசேஜ் அனுப்பியிருக்காங்க. அந்தச் சமயம் போன் தலகிட்ட இருந்தது. சாரிங்க, என் மாமனாரை நான் தலன்னுதான் கூப்பிடுவேன்! அவர் மெசேஜைப் படிச்சிட்டு பயங்கர டென்ஷன் ஆகிட்டார். எங்க ரெண்டு பேரையும் பயங்கரமா திட்டினார். அதுக்கப்புறம் நாங்க பர்சனலா எதுவும் பேசிக்கவே இல்ல. அவங்க அப்பா என் குரு. குருவுடைய பொண்ணை நாம எப்படி காதலிக்கிறதுங்கிற தயக்கம் எனக்குள் இருந்துச்சு. பிறகு, இந்த லவ் எல்லாம் பெருசா எடுத்துக்காம ரெண்டு பேரும் எங்க கரியரில் பிஸியாகிட்டோம்” என்றவரைத் தொடர்ந்து மாளவிகா பேச ஆரம்பித்தார்.

பிரபுவின் அட்வைஸ்... அனிருத் தந்த சர்ப்ரைஸ்!

“ஒரு கச்சேரிக்காக எங்க அப்பாவுடைய சொந்த ஊர் கிருஷ்ணாபுரத்திற்குப் போயிருந்தோம். கரன்ட் வசதிகூட இல்லாத சின்ன கிராமம் அது! அங்கே மீண்டும் ரெண்டு பேரும் மனம் விட்டுப் பேச சந்தர்ப்பம் கிடைச்சது. கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து பழைய நினைவுகள் குறித்துப் பேசும்போது எங்களை அறியாமலே இருவருக்குள்ளும் காதல் மலர்ந்திருச்சு. அடுத்த நொடி நாங்க ரெண்டு பேரும், ‘இனிமே தாமதிக்காம கல்யாணம் பண்ணிக்கலாம்’னு முடிவு பண்ணினோம். நாங்க வீட்ல சொல்றதுக்கு முன்னாடியே அவங்களுக்குள்ளேயும் இந்த எண்ணம் இருந்திருக்கு. நாங்க சொன்னதும் ரெண்டு பேர் வீட்டிலேயும் பயங்கர ஹேப்பி!

பிரபு சார் எங்க ஃபேமிலியில் ஒருத்தர் மாதிரி எங்க திருமணத்திற்கு வந்தவர், ‘நீங்க ரெண்டு பேரும் முதலில் ஃப்ரெண்ட்ஸ். பிறகுதான் கணவன், மனைவி. அதை எப்பவும் மறந்திடாதீங்க’ன்னு அட்வைஸ் பண்ணினார். விஜய் சாருடைய அம்மா, அப்பா இருவரும் வந்திருந்தாங்க. அதே மாதிரி, சிங்கர் ஸ்வேதா அக்கா எனக்கு நல்ல பழக்கம். அவங்க இளையராஜா சாருடன் ஒரு கச்சேரிக்காக துபாய் போயிருந்தாங்க. என் ரிசப்ஷனில் கண்டிப்பா கலந்துக்கணும்னு மெனக்கெட்டு வந்து எங்களை வாழ்த்திட்டுப் போனாங்க. எனக்கு அனிருத் ரொம்ப ரொம்ப ஃபேவரைட். திருமணத்திற்கு வர முடியலைன்னு சொல்லி லெட்டர் நோட்டுடன் பொக்கே அனுப்பி வச்சிருந்தார். அதெல்லாம் செம சர்ப்ரைஸ் மொமன்ட்!

பிரபுவின் அட்வைஸ்... அனிருத் தந்த சர்ப்ரைஸ்!

உன்னைவிட அதிகமா எனக்கு உன் புருஷனைப் பற்றித் தெரியும்னு அப்பா அடிக்கடி சொல்லுவார். அந்த அளவுக்கு இவங்க ரெண்டு பேரும் க்ளோஸ். என் பிறந்தநாளுக்கு இவர் சர்ப்ரைஸா ஃப்ரெண்ட்ஸ், ஃபேமிலிகிட்ட இருந்து வாழ்த்து வாங்கி வீடியோ ஒன்றை ரெடி பண்ணியிருந்தார். தவிர, எனக்குப் பிடிச்ச மாதிரி கம்மல் ஒன்றையும் பரிசாகக் கொடுத்தார். அதெல்லாம் பார்த்துட்டு என் அப்பா அம்மாகிட்ட, `சாய் நம்ம பொண்ணை ரொம்ப நல்லா பார்த்துக்கிறான்' எனச் சொல்லியிருக்கிறார். இதைவிட ஒரு மனைவிக்கு என்ன பெருமை வேணும்” என்றவரைத் தொடர்ந்து சாய் பேசினார்.

‘‘ரெண்டு பேரும் ஒருத்தருடைய வேலையில் இன்னொருத்தர் தலையிட மாட்டோம். குடும்பமா சேர்ந்து பண்ற நிகழ்ச்சிகளைத் தவிர்த்து நானும் சரி, மாளுவும் சரி, சேர்ந்து நிகழ்ச்சிகள் பண்ண வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஏன்னா, அது தேவையில்லாத சங்கடத்தை ஏற்படுத்தும்” என்று சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism