Published:Updated:

தனது வெற்றிப்படத் தயாரிப்பாளர் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட ரஜினி

எம்.குணா

பெங்களூருவில் திருமண விழா, நாளை பிரதமர் பதவியேற்பு விழா

ரஜினி
ரஜினி

'தர்பார்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் இன்று முதல் கலந்துகொண்டு நடிக்கிறார் ரஜினி. இதற்கிடையில், விமானம் மூலம் பெங்களூரு சென்ற ரஜினியை அவரது உயிர் நண்பர் ராஜ்பகதூர் விமான நிலையத்திலிருந்து வரவேற்றார். பெங்களூரு அசோகா ஹோட்டலுக்கு அருகில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்தார்.

ரஜினி
ரஜினி

ரஜினி நடித்த 'படிக்காதவன்' படத்தைத் தயாரித்த வீராசாமியின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்ள பெங்களூர் சென்றதாகச் சொல்லப்பட்டது. தமிழில் வெளிவந்த 'பருவராகம்' படத்தில் கதாநாயகனாக நடித்த ரவிச்சந்திரன் மகளுக்கு நேற்று திருமண வரவேற்பு நடந்தது.

ரஜினி
ரஜினி
'சிறுத்தை' சிவாவைப் பாராட்டிய ரஜினி, அடுத்தப் படத்துக்கான சந்திப்பா? 

அதில் ரஜினி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதன்பிறகு பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்றார். முன்னதாக, நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழாவுக்கு ரஜினிக்கு அழைப்பு விடுத்திருந்ததால் நாளை டெல்லி புறப்படவுள்ளார். 

எம்.குணா