Published:Updated:

மீண்டும் `அண்ணாத்த' ஷூட்டிங்கில் ரஜினிகாந்த்... அடுத்த பட இயக்குநர், தயாரிப்பாளர் யார்?

இயக்குநர் சிவா - ரஜினிகாந்த் - ஒளிப்பதிவாளர் வெற்றி
இயக்குநர் சிவா - ரஜினிகாந்த் - ஒளிப்பதிவாளர் வெற்றி

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள ரஜினிகாந்த், நாளை சென்னை திரும்புகிறார்.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'அண்ணாத்த' திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் என முன்னணி நடிகர்கள் பலர் உள்ளதால் இதுவொரு மல்ட்டி ஸ்டாரர் படம் என்றே சொல்லலாம். ஆனால், ரஜினிகாந்த் இருக்கும்போது அது ரஜினி படம்தான்.

ஆரவாரமாக 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஆரம்பித்து நடந்துகொண்டிருந்தது. இடையில், லாக்டெளன் அனைத்தையும் திருப்பி போட்டது. முதல் அலை ஓய்ந்து கிடைத்த இடைவெளியில் மீண்டும் பலத்த பாதுகாப்போடு பயோ பபுள் திட்டத்துடன் ஆரம்பித்த இதன் அடுத்த ஷெட்யூலில் படக்குழுவினர் சிலருக்கு கொரோனா பாசிட்டிவ் வர சென்னை திரும்பினர்.

அண்ணாத்த
அண்ணாத்த

பிறகு, கடைசி ஷெட்யூல் படப்பிடிப்பிற்கு தனி விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டார் ரஜின்காந்த். இந்த முறை படத்தை திட்டமிட்டபடி முடித்துவிட்டனர். அதன்பிறகு அமெரிக்காவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக ரஜினிகாந்த் சென்றது அனைவருக்கும் தெரியும். அங்கு அவர் சிகிச்சை பெறும் 'மாயோ கிளினிக்' முன்பு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

`தொடர் தோல்விகள், ஷூட்டிங்கில் பதறிய ரஜினி, `நோ அட்வைஸ்' பாலிசி!’ - நடிகை ஐஸ்வர்யா ஷேரிங்ஸ்

இந்நிலையில் சிகிச்சை முடிந்து நாளை சென்னை திரும்ப இருக்கிறார் ரஜினி. சென்னை வந்ததும் இரண்டு நாள்கள் 'அண்ணாத்த' படத்தின் பேட்ச் வேலைகள் நடக்கின்றன. ஆர்ஏ புரத்தில் உள்ள பெலிசியா டவர்ஸில் இதற்கான செட் போடப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாள் ஷூட்டிங் முடிந்ததும் ரஜினியைப் பொருத்தவரை 'அண்ணாத்த' படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துவிடும்.

தேசிங் பெரியசாமி
தேசிங் பெரியசாமி

நவம்பர் மாதம் 4-ம் தேதி 'அண்ணாத்த' திரைப்படம் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது ரஜினியின் அடுத்தப்படம் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க, 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. இது ரஜினியின் 169வது படமாக இருக்கும்.

இந்தப் படத்துக்கு அடுத்து தனது கரியரில் 170-வது படமாக தனது கடைசி படத்தை திட்டமிட்டிருக்கிறார் ரஜினி. அந்தப் படத்திலும் ஓர் இளம் இயக்குநருடனே அவர் பணியாற்ற இருக்கிறாராம்!
அடுத்த கட்டுரைக்கு