Published:Updated:

'சிறுத்தை' சிவாவைப் பாராட்டிய ரஜினி, அடுத்தப் படத்துக்கான சந்திப்பா? 

அலாவுதின் ஹுசைன்

இயக்குநர்  'சிறுத்தை' சிவாவைப் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கு மேலாகப் பேசியிருக்கிறார் ரஜினி, இது குறித்து விசாரிக்கும்போது விஸ்வாசம் படம்

Rajini
Rajini

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி நாளை மறுநாள் டெல்லியில் பதவியேற்கவுள்ளார். இதில் தான் பங்கேற்கவுள்ளதாக ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்துச் சொல்லியிருக்கிறார்.

ரஜினி
ரஜினி

அதற்கு முன்னர் இயக்குநர் 'சிறுத்தை' சிவாவைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கு மேலாகப் பேசியிருக்கிறார்கள். இதுகுறித்து விசாரிக்கையில் ரஜினி அண்மையில் 'விஸ்வாசம்' படம் பார்த்ததாகவும், படம் பிடித்திருந்ததால் இயக்குநர் சிவாவை அழைத்துப் பேசியிருக்கிறார். தந்தை மகள் உறவைப் பற்றி பேசியுள்ள அந்தப் படம் மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் சிவாவைப் பாராட்டியுள்ளார்.

'தர்பார்' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நாளைத் துவங்கவுள்ள நிலையில் இன்றே சிவாவை சந்தித்துவிட வேண்டும் என எண்ணியிருக்கிறார் ரஜினி எனக் கூறப்படுகிறது.

சிறுத்தை சிவா
சிறுத்தை சிவா

தற்போது, ஸ்டுடியோ கிரீன் நிறுவனத் தயாரிப்பில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்தின் வேலைகளை கவனித்து வருகிறார் சிவா. ரஜினி, சிவா இருவரும் இணையும் படம் குறித்து இருவரும் பேசியதாகவும் தெரிகிறது.

முன்னதாக, 'தர்பார்' படத்தின் ஷுட்டிங் செல்வதற்குமுன் ரஜினி இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அலாவுதின் ஹுசைன்