Published:Updated:

`டிசம்பர் 12 முதல் படப்பிடிப்பு!' - ரஜினியின் `தலைவர் 168' அப்டேட்ஸ்!

Thalaivar168
Thalaivar168

டிசம்பர் 12-ம் தேதி ரஜினி பிறந்தநாள் அன்று `தலைவர் 168' படத்தின் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டு வருகின்றனர்.

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது கே.எஸ்.ரவிகுமார், கெளதம் மேனன் என்று நாளுக்கொரு செய்தி, ஆளுக்கொரு கருத்தை வெளியிட்டு வந்தனர். ஒரு வழியாக இப்போது ரஜினி படத்தை இயக்கப்போவது 'சிறுத்தை' சிவா என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதியாக அறிவித்துவிட்டது. இயக்குநர் சிவா இரண்டு மணிநேரம் கதையையும் காட்சியையும் விவரித்து சொல்லச் சொல்ல ரஜினி முகத்தில் ஆயிரம் வோல்ட் சந்தோஷம். சிவா சொன்ன கதையில் ஆங்காங்கே வைத்துள்ள டுவிஸ்டுகளைக் கூர்ந்து கவனித்து, 'சூப்பர்... சூப்பர்...' என்று பாராட்டியிருக்கிறார் ரஜினி. 'முத்து', 'படையப்பா' பட பாணியில் முழுக்க முழுக்க குடும்பம், சென்டிமென்ட் என்று படம் முழுக்க பாசமழை பொழிவதாக, திரைக்கதை அமைத்திருக்கிறார் சிவா.

Rajini
Rajini

'விஸ்வாசம்' படத்தில் இயக்குநரோடு கரம்கோத்த டெக்னீஷியன்கள் கூட்டணியே 'தலைவர் 168' படத்திலும் இணைகிறது. முதன்முதலாக டி.இமான் ரஜினி படத்துக்கு இசையமைக்கவிருப்பதால், ரொம்ப குஷியாக இருக்கிறார் இமான். ஓய்வுக்காக சில நாள்கள் ரஜினி வெளி மாநிலம் செல்கிறார். நவம்பர் மாத இறுதியில் சென்னைக்குத் திரும்புகிறார். டிசம்பர் 12-ம் தேதி ரஜினி பிறந்தநாள் அன்று 'தலைவர் 168' படத்தின் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டு வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு