Published:Updated:

`வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்!' - திரைப்படவிழாவில் நெகிழ்ந்த ரஜினி

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனிடமிருந்து விருதை ரஜினி பெற்றுக்கொண்டார்.

ரஜினி
ரஜினி

50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இன்று தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து நடத்தும் இந்த விழாவில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில் பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடக்கி வைத்தனர். இந்த ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவுக்கு பொன்விழா என்பதால் இந்திய சினிமாவில் முக்கிய பங்கு வகித்த திரைப்பட கலைஞர்களைக் கௌரவிக்க முடிவுசெய்த மத்திய அரசு, நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஏற்கெனவே விருதுகள் அறிவித்திருந்தது.

ரஜினி
ரஜினி

அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்துக்கு `ஐகான் ஆஃப் கோல்டன் ஜுப்ளி' என்ற விருது இன்று வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனிடமிருந்து விருதை ரஜினி பெற்றுக்கொண்டார். அப்போது ரஜினி பேசுகையில்,`` `ஐகான் ஆஃப் கோல்டன் ஜுப்ளி' விருது பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு விருது வழங்கி கௌரவித்த இந்திய அரசுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்கள் மற்றும் என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்” எனத் தமிழில் கூறினார்.

ரஜினி - கமல் அரசியல் ரூட்...  முன்பே கணித்த ஜூனியர் விகடன்!