Published:Updated:

`தலைவர் 168' படத்துக்கு முன் ரிலாக்ஸ்! - நீண்ட இடைவெளிக்குப் பின் பாபா குகை செல்லும் ரஜினி

'தர்பார்' ஷூட்டிங் முடிந்துள்ளதால், ரிலாக்ஸ் பண்ணுவதற்காக ரஜினிகாந்த் இமயமலை பயணமாகியுள்ளார்.

ரஜினி
ரஜினி

நடிகர் ரஜினிகாந்த்துக்கு, ஃபேமிலி என்டர்டெயினரான ஒரு படம் பண்ண வேண்டுமென்பது ஆசையாக இருந்திருக்கிறது. இதையடுத்து, அதை நிரூபிக்கும் வகையில் ஒரு பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது, சன் பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். சன் பிக்சர்ஸ் பகிர்ந்திருந்த ட்விட்டர் பதிவில், `` `எந்திரன்', 'பேட்ட' படத்தைத் தொடர்ந்து, `தலைவர் 168' படத்தைத் தயாரிப்பதில் பெருமைகொள்கிறோம். இப்படத்தை சிவா இயக்குவார்'' என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி
ரஜினி

'தர்பார்' படத்தின் ஷூட்டிங் முடிந்து பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், ரஜினியின் 168-வது படத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது, ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஃபேமிலி என்டர்டெயினராக உருவாக்கவுள்ளதாகக் கூறப்படும் இந்தப் படத்தில் பணிபுரியவுள்ள படக்குழுவினரின் பட்டியல், விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி சொல்லி 17 வருஷம் ஆச்சு...
நதிகள் இணைப்பு 1 கோடி என்னாச்சு? - பாகம் 1

இந்நிலையில், தர்பார் ஷூட்டிங் முடிந்துள்ளதால், ரிலாக்ஸ் பண்ணுவதற்காக ரஜினிகாந்த் இமயமலை பயணமாகியுள்ளார். இன்று காலை சென்னையிலிருந்து விமானம்மூலம் மும்பை சென்றவர், அங்கு சில மணிநேரம் ஓய்வு எடுத்துவிட்டு, பின்னர் ரிஷிகேஷ் செல்ல உள்ளார். பின்னர், சாலை மார்க்கமாக சுமார் 275 கி.மீ தொலைவில் உள்ள துவாராஹாட் மற்றும் கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய தலங்களுக்கும் பாபா குகைக்கும் செல்ல உள்ளார் எனக் கூறப்படுகிறது. மொத்தம் 10 நாள் பயணம் என்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொண்டார் ரஜினி.

ரஜினி
ரஜினி

அப்போது, மருத்துவர்களின் அறிவுரைப்படி, இமயமலைப் பயணங்களை மேற்கொள்ளாமல் இருந்தார். ஆனால், `பேட்ட' படத்தின் படப்பிடிப்பின்போது டார்ஜிலிங் பகுதிகளில் ஷூட்டிங்கில் பங்கேற்றபோது, ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டுவந்தார். ஆனால், பாபா குகை உள்ளிட்ட இடங்களுக்குப் பயணம் செய்வதைத் தவிர்த்துவந்தார். தற்போது, சிவா படத்தின் ஷூட்டிங் தொடங்க இன்னும் நாள்கள் இருப்பதை அடுத்து, நீண்ட வருடங்களுக்குப் பிறகு தற்போது இமயமலை பயணம் மேற்கொண்டுள்ளார்.

ரஜினி சொல்லி 17 வருஷம் ஆச்சு... நதிகள் இணைப்பு 1 கோடி என்னாச்சு? - பாகம் 2