Published:Updated:

Icon Of Golden Jubilee விருது விழாவில் ரஜினியுடன் விஜய்! ஆனந்த விகடன் விருது மேடையில் என்ன நடந்தது?

Vijay, Rajinikanth ( Ananda Vikatan Cinema Awards )

`கபாலி' படத்திற்காகச் சிறந்த நடிகர் விருதை ரஜினிகாந்த், அப்போது நடிகர் விஜய்யின் கையால் பெற்றுக்கொண்டார். இருபெரும் ஆளுமைகள் ஒன்றாக மேடை ஏறியபோது என்ன நடந்தது? ஒரு சுவாரஸ்ய பிளாஷ்பேக்...

Icon Of Golden Jubilee விருது விழாவில் ரஜினியுடன் விஜய்! ஆனந்த விகடன் விருது மேடையில் என்ன நடந்தது?

`கபாலி' படத்திற்காகச் சிறந்த நடிகர் விருதை ரஜினிகாந்த், அப்போது நடிகர் விஜய்யின் கையால் பெற்றுக்கொண்டார். இருபெரும் ஆளுமைகள் ஒன்றாக மேடை ஏறியபோது என்ன நடந்தது? ஒரு சுவாரஸ்ய பிளாஷ்பேக்...

Published:Updated:
Vijay, Rajinikanth ( Ananda Vikatan Cinema Awards )

இந்தியாவின் 50வது சர்வதேச திரைப்பட விழா (IFFI 2019 - Goa) கோவாவில் நேற்று (நவம்பர் 20) முதல் தொடங்கியது. இதன் தொடக்க விழாவின்போது நடிகர் ரஜினிகாந்த்திற்கு 'Icon of Golden Jubilee Award' என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு விருது வழங்கப்படுவது இதுவே முதன் முறை.

'Icon of Golden Jubilee Award' - IFFI 2019
'Icon of Golden Jubilee Award' - IFFI 2019
twitter.com/IFFIGoa

இந்தி திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரன் ஜோஹர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் மேடையை அலங்கரிக்க ரஜினிகாந்த்திற்கு இந்த விருது வழங்கப்பட்டது. விருது வழங்கப்படும் முன்னர், ரஜினிகாந்த்தின் திரையுலகப் பங்களிப்பு குறித்து ஒரு வீடியோ ஒளிப்பரப்பப்பட்டது. அதில் அவரின் சாதனைப் படங்கள், தனித்துவம் பெற்ற கதாபாத்திரங்கள், அவர் பெற்ற விருதுகள் போன்றவற்றைத் தொகுத்திருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
Rajinikanth receiving Vikatan Award
Rajinikanth receiving Vikatan Award

இதில் 2016-ம் ஆண்டு விகடன் விருதுடன் ரஜினிகாந்த் மேடையில் நிற்கும் தருணமும் இடம்பெற்றிருந்தது. விஜய் ரஜினிக்கு விகடன் விருதை வழங்கும் அந்த க்ளிப்பிங்கிற்கு பின்னிருக்கும் கதை என்ன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'கபாலி' படத்திற்காகச் சிறந்த நடிகர் விருதை ரஜினிகாந்த், அப்போது நடிகர் விஜய்யின் கையால் அந்த விருதைப் பெற்றுக்கொண்டார். இருவரும் ஒன்றாக மேடை ஏறியபோது என்ன நடந்தது? ஒரு சுவாரஸ்ய பிளாஷ்பேக்...

Rajinikanth
Rajinikanth
Ananda Vikatan Cinema Awards

ரஜினிகாந்த்துக்கு விருதைத் தர, அவருடைய ஆகச்சிறந்த ரசிகர்களில் ஒருவரைவிடவும் யார் பொருத்தமாக இருக்க முடியும்? சூப்பர் ஸ்டாருக்கு விருது வழங்க, ரசிகராக வந்து நின்றார் இளைய தளபதி விஜய். இந்த இருவரையும் மேடைக்கு அழைத்து வந்தவர் சிவகார்த்திகேயன். அவர்தான் ரஜினி விருது பெற்ற நிகழ்வைத் தொகுத்து வழங்கிய திடீர் தொகுப்பாளர். சூப்பர் ஸ்டார் ரஜினி நடுவில் நிற்க, அவருக்கு அருகில் நிற்கத் தயங்கி, கொஞ்சம் தள்ளியே நின்று சிலிர்த்துக்கொண்டிருந்தார் சிவா.

விழாவில், கறுப்புச்சட்டையும் கறுப்பு பேன்ட்டும் முறுக்கின மீசையுமாக இதுவரை கண்டிராத வித்தியாச விஜய். வந்தது முதலே எல்லோரிடமும் புன்னகையுடன் பேசி மிகவும் அமைதியாகவே அமர்ந்திருந்தார் விஜய். மேடை ஏறியவர் ரஜினியின் கால்களைத் தொட்டு வணங்கி, ஆசி பெற்றது அழகான சர்ப்ரைஸ்.

Vijay, Rajinikanth
Vijay, Rajinikanth
Ananda Vikatan Cinema Awards

``நான் ரஜினி சாருக்கு விருது கொடுக்கப் போறேன்கிற விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதே நேரம் என் கையால் அவர் விருது வாங்கினது அவரோட பெருந்தன்மையைக் காட்டுது'' என்றார் விஜய்.

``விகடன், அரசியலை விமர்சனம் பண்ணுவாங்க. ஆனால், விமர்சனத்துல அரசியல் பண்ண மாட்டாங்க'' என்று செம பன்ச் அடிக்க, அதை ஆமோதிக்கும் வகையில் அரங்கத்தில் அவ்வளவு கைத்தட்டல்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

விஜய் பேசும்போது `` `பில்லா'வில் பாஸ்... ``பாட்ஷா'வில் மாஸ்... `கபாலி'யில் க்ளாஸ் என கேங்ஸ்டரிலேயே மூன்றுவிதமான நடிப்பில் அசத்தியவர் ரஜினி. அவருக்கு இந்த விருதைக் கொடுப்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்'' என்றார்.

Rajinikanth, Sivakarthikeyan
Rajinikanth, Sivakarthikeyan
Ananda Vikatan Cinema Awards

``நான், ரஜினி ரசிகன் கிடையாது; வெறியன்'' என்று மேடையிலேயே சொன்னார் சிவா. சிவகார்த்திகேயனை, ரஜினி போலவே மிமிக்ரி பண்ணச் சொன்னார் ஆர்.ஜே பாலாஜி. ஏற்கெனவே படப்படப்பாக இருந்த சிவகார்த்திகேயன், கொஞ்சம் தயங்கியே ஒப்புக்கொண்டார். ஆனால், அச்சு அசலாக ரஜினியின் குரலில் அவரின் வெற்றிப்பயணத்தை அசத்தலாகப் பேசிக்காட்ட, ரஜினி முகத்தில் ஆச்சர்ய மகிழ்ச்சி.

``இங்கே நான் விருது எதையும் வாங்கவில்லை. ஆனால், அதைவிட இப்படி நான் மதிக்கும் இரண்டு நடிகர்களோடு என்னையும் மேடை ஏற்றினதே எனக்குக் கொடுத்த மிகப்பெரிய விருதா நான் கருதுறேன். அதுவும் ரஜினி சார் முன்னாடி அவர் வாய்ஸ்ல பேசினதை வாழ்நாளில் மறக்க முடியாது'' என்று பெருமிதப்பட்டு எமோஷனலானார் சிவகார்த்திகேயன்.

விஜய், ரஜினி, சிவகார்த்திகேயன்
விஜய், ரஜினி, சிவகார்த்திகேயன்
Ananda Vikatan Cinema Awards

விருது விழாவாக இருந்தாலும், விகடன் மேடையாச்சே... அங்கு மட்டும் மக்களின் குரல் ஒலிக்காமல் இருக்குமா? ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் வந்திருந்த கலைஞர்கள் பலரும், மேடையிலேயே தங்களுடைய ஆதரவைப் பதிவுசெய்தனர். கொம்பு உள்ள காளைகளின் படம் வரைந்த டி-ஷர்ட்கள் மற்றும் வாசகங்கள் அடங்கிய கறுப்புச்சட்டையில் வந்திருந்தனர் வெற்றி மாறனும் சமுத்திரக்கனியும்.

``விகடன் விழாவில்தான் பாரம்பர்யம், கலாசாரம் பற்றிப் பேச முடியும். கலாசாரம் என்பது, மிகவும் முக்கியம். அதிலும் ஜல்லிக்கட்டு என்பது, தமிழர்களின் கலாசாரம். அதை நாம் காப்பாற்ற வேண்டும்; விட்டுக்கொடுக்கக் கூடாது. ஜல்லிக்கட்டுக்கு என ஸ்டிரிக்ட் ரூல்ஸ் கொண்டுவாங்க. யாருக்கும் ரொம்பக் காயம் ஏற்படாத மாதிரி ரூல்ஸ் கொண்டுவாங்க. அதுக்குப் பதிலா, ஒரு கலாசாரத்தையே வேண்டாம் எனச் சொல்வது சரியா?'' என்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தன் முதல் கருத்தைப் பதிவுசெய்தார் ரஜினி.

கமல்ஹாசன், ரஜினி
கமல்ஹாசன், ரஜினி
Ananda Vikatan Cinema Awards

இது மட்டுமா அந்த விழாவின் ஹைலைட்ஸ்? கமல்ஹாசனுக்குப் பெருமைமிகு எஸ்.எஸ்.வாசன் விருதும் கொடுத்த மேடை அது. அதுவும் ரஜினியே கமலுக்கு அந்த விருதை வழங்கினார். அந்த நிகழ்வைக் கவிப்பேரரசு வைரமுத்து தொகுத்து வழங்கினார். இப்போது அரசியலில் ஒரே அணியாகக் கைகோக்கவும் தயார் என்று கமலும் ரஜினியும் வெளிப்படையாக அறிவித்திருக்கும் நிலையில் அப்போது அவர்கள் மேடையில் என்ன பேசினார்கள்?

வீடியோவாக காண...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism