Published:Updated:

`பத்ரிநாத், பாபாஜி குகை, துவாராஹாட் குருசரண் ஆசிரமம்!' - மீண்டும் ரிஷிகேஷில் ரஜினி

செவ்வாய்க்கிழமையான நாளை (15.10.2019) ஃபட்டாவிலிருந்து புறப்பட்டு கேதார்நாத் செல்ல ரஜினிகாந்த் திட்டமிட்டிருக்கிறார். இதையொட்டி நாளை கேதார்நாத் கோயிலில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Rajinikanth
Rajinikanth

இமயமலையின்மீது தீராத ஈர்ப்பு கொண்டவர், நடிகர் ரஜினிகாந்த். அவ்வப்போது படம் முடிந்ததும் இமயமலை செல்வது வழக்கம். கிரியா யோகா பாபாஜியின் தீவிர பக்தரான ரஜினி, பாபாஜி வாழ்வதாகக் கருதப்படும் இமயமலைக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார்.

Rajinikanth
Rajinikanth
Twitter

அங்கிருக்கும் பாபாஜி குகைக்குச் சென்று தியானத்தில் ஈடுபடுவார். சில வருடங்களாக உடல்நலக் குறைவால் இமயமலை பயணத்தைத் தள்ளிவைத்திருந்தார் ரஜினி. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த வருடம் மார்ச் மாதம் இமயமலைக்குச் சென்றுவந்தார். இந்நிலையில், 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், நேற்று ரிஷிகேஷ் சென்றுள்ளார்.

இந்த ஆண்டு இமயமலை செல்வதற்குத் திட்டமிட்டிருந்த ரஜினிகாந்த், நேற்று காலை சுமார் 6.40 மணிக்கு சென்னையிலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள டேராடூனுக்கு விமானத்தில் புறப்பட்டுச்சென்றார்.

Rajinikanth
Rajinikanth
ANI

அங்குள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமம் சென்று தங்கினார். அப்போது அவரைச் சூழ்ந்துகொண்ட பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அன்றிரவு ரிஷிகேஷிலேயே தங்கிய ரஜினி, இன்று கேதார்நாத் அருகேயுள்ள ஃபட்டா எனும் இடத்துக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார்.

செவ்வாய்க் கிழமையான நாளை (15.10.2019) ஃபட்டாவிலிருந்து புறப்பட்டு கேதார்நாத் செல்ல ரஜினிகாந்த் திட்டமிட்டிருக்கிறார். இதையொட்டி, நாளை கேதார்நாத் கோயிலில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Rajinikanth
Rajinikanth
ANI

இதற்கான பணிகளை ருத்ரபிரயாக் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து பத்ரிநாத், பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்கிறார். அதேபோன்று துவாராஹாட் குருசரண் ஆசிரமத்தில் மூன்று நாள்களுக்குத் தங்கவும் திட்டமிட்டிருக்கிறார்.