Published:Updated:

பொங்கலுக்கு `தர்பார்' ; தீபாவளிக்கு அடுத்த படம்! - ரஜினி படங்களின் அப்டேட்ஸ்

தார்மிக் லீ

`தர்பார்' படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் பணிகள் பரபரப்பாக நடந்துவருகிறது. இது முடிந்த பிறகு படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற இருக்கின்றன. 2020 பொங்கலுக்குப் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்கெனவே திட்டமிட்டிருந்தனர்.

Rajinikanth
Rajinikanth

நரேந்திர மோடி பிரதமர் பதவி ஏற்கும் சமயத்தில், `விஸ்வாசம்' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த ரஜினி, இயக்குநர் சிவாவை அழைத்துப் பாராட்டினார். அது மட்டுமின்றி ஒரு மணி நேரத்துக்கும் மேல் இருவரும் சேர்ந்து பேசினர். இதைத் தொடர்ந்து இருவரும் அடுத்த படத்தில் இணைவார்கள் என தகவல்கள் வெளியானது. இதற்கிடையே சூர்யாவை வைத்து சிவா படம் இயக்குவதாக அதிகாரபூர்வமான தகவல்கள் சமீபத்தில் வெளியானது. படக்குழுவினர் நேற்றுதான் அறிவித்திருந்தனர்.

Rajinikanth
Rajinikanth

ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் `தர்பார்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புப் பணிகள் பரபரப்பாக நடந்துவருகின்றன. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட இருக்கிறதாம். ஆரம்பத்திலேயே `தர்பார்' படத்தை 2020 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டனர். இதைத் தொடர்ந்து `சிறுத்தை' சிவா - ரஜினிகாந்த் காம்போவில் உருவாக இருக்கும் படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகிறது. அது மட்டுமின்றி 2020 தீபாவளிக்கு படத்தை வெளியிடவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. ஆக, 2020ம் ஆண்டு பொங்கலுக்கு`தர்பார்' படமும், தீபாவளிக்கு அடுத்த படமும் ரசிகர்களுக்கு வெயிட்டிங்!