2019-ல் ரஜினி அரசியலுக்கு எப்போ எண்ட்ரி என ’போராளி’ முதல் ’கோமாளி’ வரை எதிர்பார்ப்பு எகிறியடிக்கிறது. ஆனால், 1993-லேயே, அதாவது 27 வருடங்களுக்கு முன்னரே தான் எப்போது அரசியலுக்கு வருவேன் எனத் தெளிவாக விகடனுக்கு பேட்டி அளித்திருக்கிறார் ரஜினி.
தற்போதைய அரசியல் சூழ்நிலை ரஜினியின் 1993 மனநிலையுடன் பொருந்திப் போகிறதா? கண்டுபிடியுங்களேன்...!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS’’அரசியல் மாற்றம் எந்தெந்த விதத்துல நடக்கணும்னு எதிர்பார்க்குறீங்க?!’’
’’இங்கே சோடா பாட்டிலும் சைக்கிள் செயினும்தான் அரசியல். அரசியல்வாதியை மாத்திரமில்லே. இங்குள்ள அரசு அதிகாரிகள் போக்கை, Bureaucracy-யை வேற மாத்த வேண்டியிருக்கு. உலகத்தோட அறுபது சதவிகித இடத்தை நான் சுத்திப் பார்த்திருக்கேன்... அங்கேயெல்லாம் இல்லாத மன அமைதி இந்த மண்ணில்தான் இருக்கு. நம்ம நாட்டின் ஒரே குறை, பணம் இல்லாதது. அது மட்டும் இருந்தால் போதும். ஆனால், அது ஜனங்களுக்குக் கிடைக்க முடியாமல் இங்கே அரசியல்வாதிங்க நாசப்படுத்தி வெச்சிருக்காங்க. என்ன அநியாயம் இது. அதனாலதான் மறுபடி சொல்றேன். புரட்சி வெடிக்கணும் எமர்ஜென்ஸி வரணும்!"
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
''நேரடி அரசியலுக்கு எப்போ வருவீங்க?’’

"எனக்கு அரசியலுக்கு வர விருப்பமில்லே. காரணம், யார் இங்கே முதல்வரா வந்து உட்கார்ந்தாலும் எதுவும் பண்ண முடியாது. இந்த நிலைமையில, புரட்சி வர்றதுதான் ஒரே வழி! இப்போ அரசியல் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கு. இதுக்கு மருந்து மாத்திரையெல்லாம் பத்தாது. அறுவை சிகிச்சைதான் ஒரே வழி! இப்போ இருக்கற அமைப்புப்படி யார் வேணாலும் எம்.எல்.ஏ. ஆகலாம். எம்.பி. ஆகலாம். நம்மை ஆளலாம். இது சரியில்லே!’’
’’அரசியல் மாற்றம் நிகழ்ந்தால், நீங்க உடனடியாக பரிந்துரைக்கும் திட்டம் என்ன?’’
"எல்லோரும் ஏற்கிற தலைவருக்கு நீங்கள் வைத்திருக்கும் அளவுகோள் என்ன?’’
மேற்கண்ட கேள்விகளுக்கு பதிலளித்த ரஜினி, ’டிக்டேட்டர்’ என ஒருவரைக் குறிப்பிடுகிறார். அந்த ‘டிக்டேட்டர்’ வந்தால், ‘யாரும் கூப்பிடாமலே, தாராளமா அரசியலுக்கு வர நான் தயார்’ என அழுத்திச் சொல்லியிருக்கிறார் ரஜினி. யார் அந்த ‘டிக்டேட்டர்’? இப்போது ரஜினி மக்கள் மன்றம் துவக்கியதற்கும் அந்த டிக்டேட்டருக்கும் என்ன சம்மந்தம்? ஆனந்த விகடன் க்ளாஸிக் பேட்டியை ’அப்பப்போவில் படிக்கலாம் வாங்க..!
விகடன் வாசகர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ஆஃபர்!