Published:Updated:

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் ரஜினி! - படத்தின் இயக்குநர் `சிறுத்தை' சிவா

`பேட்ட' படத்தைத் தொடர்ந்து முருகதாஸ் இயக்கும் `தர்பார்' படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். மும்பையில் நடந்து வந்த இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து ரஜினி நடிக்க இருக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு அமைத்திருக்கிறார். 1991-ம் ஆண்டு வெளியான `தளபதி' படத்துக்குப் பிறகு ரஜினியுடன் `தர்பார்' படத்தில் பணியாற்றுகிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். அடுத்த வருடம் பொங்கலுக்கு படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

ரஜினி - `சிறுத்தை' சிவா
ரஜினி - `சிறுத்தை' சிவா

`தர்பார்' படத்தின் ஷூட்டிங்குக்கு நடுவில் சென்னை வந்தபோது `சிறுத்தை' சிவாவை அழைத்து ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேசியுள்ளார் ரஜினி. `விஸ்வாசம்' படத்தைப் பார்த்து சிலாகித்த இவர், சிவாவை அழைத்துப் பேசியுள்ளார் என்பதுதான் அப்போது வெளிவந்த செய்தி. ஆனால், ரஜினிகாந்த்தின் பிளான்படி, ஃபேமிலி என்டர்டெயினரான ஒரு படம் பண்ண வேண்டுமென்பது ஆசையாக இருந்திருக்கிறது. இதையடுத்து அதை நிரூபிக்கும் வகையில் ஒரு பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது சன் பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். சன் பிக்சர்ஸ் பகிர்ந்திருந்த அந்த ட்விட்டர் பதிவில், `` `எந்திரன்', 'பேட்ட' படத்தைத் தொடர்ந்து `தலைவர் 168' படத்தைத் தயாரிப்பதில் பெருமை கொள்கிறோம். இப்படத்தை சிவா இயக்குவார்'' என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படக்குழுவினரின் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.