Published:Updated:

ரஜினிக்குத் தனி விமானம்... அக்டோபர் 8 முதல் `அண்ணாத்த' ஷூட்டிங்?! #VikatanExclusive

அண்ணாத்த
அண்ணாத்த

இந்நிலையில்தான் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' ஷூட்டிங்கில் கலந்துகொள்ள ஓகே சொல்லிவிட்டார், அக்டோபர் 8 முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது என்கிற செய்தி கோலிவுட்டில் தீயாய் பரவிவருகிறது. உண்மை என்ன என விசாரித்தோம்.

சினிமா படப்பிடிப்புகள் நடத்தலாம் என அரசு அறிவிப்பு வெளியிட்டு ஒரு மாதத்துக்கும் மேலாகிவிட்டது. ஆனால், இன்னும் பெரியளவில் தமிழ் திரைப்படங்களுக்கான ஷூட்டிங்குகள் தொடங்கவில்லை. சின்ன பட்ஜெட், வெப்சீரிஸ் மற்றும் ஓடிடி ஆந்தலாஜி படங்களுக்கான ஷூட்டிங்கே தற்போது பெருமளவில் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில்தான் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' ஷூட்டிங்கில் கலந்துகொள்ள ஓகே சொல்லிவிட்டார், அக்டோபர் 8 முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது என்கிற செய்தி கோலிவுட்டில் தீயாய் பரவிவருகிறது. உண்மை என்ன என விசாரித்தோம்.
அண்ணாத்த
அண்ணாத்த

விஜய், அஜித், சூர்யா என இளம் நடிகர்களே இன்னும் ஷூட்டிங் கிளம்பத் தயாராக இல்லாத நிலையில் ரஜினி எப்படி ஓகே சொன்னார் என 'அண்ணாத்த' குழுவுக்கு நெருக்கமான சிலரிடம் பேசினேன். "ஆமாம், ரஜினி அக்டோபர் 8 முதல் ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள டேட்ஸ் கொடுத்துவிட்டார். செட் பணிகள், காஸ்ட்யூம் தயாரிப்பு பணிகள் என எல்லா வேலைகளும் தொடங்கி நடந்துகொண்டிருந்தன. ஹைதரபாத்தில் சூப்பர் ஸ்டார் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள கலாநிதி மாறன் அவர்கள் தனி விமானம் ஏற்பாடு செய்திருந்தார். அதில் நான்கு பேர் மட்டுமே ரஜினியுடன் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில்தான் ரஜினி திடீரென தன் முடிவை மாற்றிக்கொண்டார்" என்றார்கள்.

"ஷூட்டிங்கில் ரஜினி கலந்துகொள்ள ஓகே சொல்லிவிட்டார் என்கிற தகவல் பரவியதும், ரஜினிக்கு நெருக்கமான நண்பர்கள் பலரும் அவரிடம் பேசியிருக்கிறார்கள். இந்தியில் ஷாருக்கான் எந்த படப்பிடிப்பிலும் கலந்துகொள்ளவில்லை. மே மாதத்தில் இருந்தே படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ளலாம் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அனுமதி கொடுத்துவிட்டார். ஆனால், சிரஞ்சீவி எந்த ஷூட்டிங்கிலும் கலந்துகொள்ளவில்லை. தமிழிலும் இளம் நடிகர்கள் யாரும் இன்னும் ஷுட்டிங் கிளம்பவில்லை. கமல்ஹாசன் மட்டுமே பிக்பாஸ் மற்றும் தன்னுடைய அடுத்தப்படத்துக்கான வேலைகளைத் தொடங்கியிருக்கிறார். நீங்கள் ஏன் அவசரப்படுகிறீர்கள். டிசம்பர் முதல் வாரத்துக்குள் கொரோனாவின் தீவிரம் குறைந்துவிடும் என்பதோடு, தடுப்பு ஊசிகளும் புழக்கத்துக்கு வந்துவிடும். அதனால், டிசம்பர் வரை ஷூட்டிங் வேண்டாம்" என அவருக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார்கள்.

ரஜினி, குஷ்பு, மீனா
ரஜினி, குஷ்பு, மீனா

அதேபோல் ஹைதரபாத்தில் டிவி நிகழ்ச்சி ஷூட்டிங்கில் கலந்துகொண்ட பிறகுதான் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு கொரோனா தொற்று பரவியது. அதனால், நீங்களாக எந்தப் பிரச்னையையும் வரவழைத்துக்கொள்ளாதீர்கள் என்று களநிலவரத்தை ரஜினிக்கு எடுத்துசொல்லியிருக்கிறார்கள். இதை மிகவும் கவனமாகப் பரிசீலித்த ரஜினி, நேற்று ஷூட்டிங்கில் கலந்துகொள்வதில்லை என்கிற முடிவை தயாரிப்பு நிறுவனத்திடம் சொல்லியிருக்கிறார். அவர்களும் ரஜினியைக் கட்டாயப்படுத்தாமல் 'உங்கள் முடிவே இறுதியானது' எனச் சொல்லியிருக்கிறார்கள்.

அனுஷ்கா, மாதவன், அஞ்சலியின் `நிசப்தம்'... அமேஸானுக்கு ஒரு ரெக்வஸ்ட்! #SilenceTamilMovie

ரஜினி ஷூட்டிங்கிற்கு ஓகே சொல்லியிருந்ததால் 'அண்ணாத்த' படத்தில் நடிக்கும் பிரகாஷ்ராஜ், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் எனப்பலருக்கும் போக்குவரத்து மற்றும் தங்கும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இப்போது ரஜினி ஷூட்டிங் வேண்டாம் என சொல்லிவிட்டதால் அனைத்துப் பணிகளும் அப்படியே நிறுத்தப்பட்டிருக்கின்றன.

ரஜினி, கீர்த்தி சுரேஷ், சூரி
ரஜினி, கீர்த்தி சுரேஷ், சூரி

'அண்ணாத்த' படத்துக்கான செட்களை ஹைதராபாத்தில் போட்டதுபோலவே சென்னை ஈசிஆர்-லும் போடுவதற்கான பணிகள் முதலில் தொடங்கின. ஆனால், சென்னையில் செட்டை எதிர்பார்த்ததுபோல அமைக்கமுடியாது என சொல்லப்பட, ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியிலேயே மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் நடந்தன. ரஜினி இல்லாத காட்சிகளை இப்போது படமாக்கலாம் என்கிற யோசனையும் இருக்கிறதாம். ஆனால், இயக்குநர் சிறுத்தை சிவாவுக்குமே இந்தச் சூழலில் படப்பிடிப்புக்குப் போகலாமா என்று குழப்பம் நிலவுவதால் அக்டோபரில் 'அண்ணாத்த' ஷூட்டிங் தொடங்குவது கஷ்டம்தான் என்கிறார்கள்.

காத்திருப்போம்!

அடுத்த கட்டுரைக்கு