Published:Updated:

'அண்ணாத்த' ஃபர்ஸ்ட் லுக் செப்டம்பர் 10 ரிலீஸ்... ரஜினியின் ரியாக்‌ஷன் என்ன?

இயக்குநர் சிவா, ரஜினி, ஒளிப்பதிவாளர் வெற்றி

கொல்கத்தா ஷெட்யூலுக்கு முன்னதாகவே படத்தின் 95 சதவிகித போர்ஷனும் படமாக்கப்பட்டிருந்ததால், இமானும் பின்னணி இசையை முடித்துக் கொடுத்துவிட்டார்.

'அண்ணாத்த' ஃபர்ஸ்ட் லுக் செப்டம்பர் 10 ரிலீஸ்... ரஜினியின் ரியாக்‌ஷன் என்ன?

கொல்கத்தா ஷெட்யூலுக்கு முன்னதாகவே படத்தின் 95 சதவிகித போர்ஷனும் படமாக்கப்பட்டிருந்ததால், இமானும் பின்னணி இசையை முடித்துக் கொடுத்துவிட்டார்.

Published:Updated:
இயக்குநர் சிவா, ரஜினி, ஒளிப்பதிவாளர் வெற்றி

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், பிரகாஷ் ராஜ், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் 'அண்ணாத்த' படத்தை சிவா இயக்கி வருகிறார்.

சமீபத்தில் படத்தின் ஃப்ளாஷ்பேக் போர்ஷன் படப்பிடிப்புக்காக ரஜினி, குஷ்புவை தவிர மீதமுள்ள குழுவினருடன் லக்னோ பறந்தார் சிவா. அங்கே எதிர்பாராத சில சூழல்களால், படப்பிடிப்பை தொடரமுடியாமல் போனது. இதனால் அவர்கள் அங்கிருந்து கொல்கத்தா ஷிஃப்ட் ஆனார்கள். கீர்த்தி சுரேஷ், சூரி உள்பட பலரும் கொல்கொத்தா சென்றிருந்தனர். அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை திரும்பினர்.

இதற்கிடையே கொல்கத்தா ஷெட்யூலுக்கு முன்னதாகவே படத்தின் 95 சதவிகித போர்ஷனும் படமாக்கப்பட்டிருந்ததால், இமானும் பின்னணி இசையை முடித்துக் கொடுத்துவிட்டார். ரஜினி உள்பட பலரும் டப்பிங் பேசி முடித்ததில், படமும் ரெடியாகிவிட்டது.

அண்ணாத்த அப்டேட்
அண்ணாத்த அப்டேட்

சிவா மற்றும் டெக்னீஷியன் டீமுடன் மொத்த படத்தையும் ரஜினியும் படத்தை பார்த்து ரசித்துவிட்டு மனம் திறந்து பாராட்டியுள்ளார். ''எல்லாரையும் எமோஷனலாக கனெக்ட் ஆக்கிவிடும். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் படம் நிச்சயம் பிடித்துப் போகும்'' என்று சொல்லியிருக்கிறார் ரஜினி.

திட்டமிட்டபடி தீபாவளியன்று 'அண்ணாத்த' ரிலீஸ் ஆகும் என்பதில் தயாரிப்பு நிறுவனம் உறுதியாக உள்ளதால் இப்போது ஷூட் செய்யப்பட்டு வந்துள்ள போர்ஷனுக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. வருகிற விநாயகர் சதூர்த்தி நாளான செப்டம்பர் 10-ம் தேதியன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட இருக்கிறார்களாம்!