Published:Updated:

ஆபாசத்துக்கு நோ, பெண் கிண்டலுக்கும் நோ!

லுங்கி டான்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
லுங்கி டான்ஸ்

லுங்கி பாய்ஸ்களில் ஒருவரான ஹரிகரனும் தேவகோட்டைக்காரர்தான். கொடைக்கானல் கல்லூரியில் ராஜ்பிரியனுக்கு ஜூனியர்

ஆபாசத்துக்கு நோ, பெண் கிண்டலுக்கும் நோ!

லுங்கி பாய்ஸ்களில் ஒருவரான ஹரிகரனும் தேவகோட்டைக்காரர்தான். கொடைக்கானல் கல்லூரியில் ராஜ்பிரியனுக்கு ஜூனியர்

Published:Updated:
லுங்கி டான்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
லுங்கி டான்ஸ்

“பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மென்ட் வீக்குன்னு நம்ம தலைவர் சொல்வாருல்ல... அப்படித்தான் நானும்! கீழே நின்னு கலாய்க்கிறது, விசில் அடிக்கிறதெல்லாம் ஓகே. மேடையில ஏறுனா நம்மள அறியாம காலு உதறும். நம்ம பலவீனத்தைத் தெரிஞ்சுக்கிட்டு சீனியர்ஸ் ராகிங் பண்றேன்னு மேடையில ஏத்திவிட்டுட்டாங்க. அப்போ ஆரம்பிச்சது... 4,000 லுங்கி டான்ஸ் வீடியோ பண்ணினபிறகும் உதறல் குறையலே...’’ உற்சாகமாகச் சிரிக்கிறார் ராஜ்பிரியன்.

இன்ஸ்டா, யூடியூப், ஃபேஸ்புக்கில் ரீல்ஸ் பார்ப்பவர்களுக்கு ராஜ்பிரியன் அன் கோ-வை அறிமுகப்படுத்த அவசியமில்லை. அவர்கள் போடும் லுங்கி டான்ஸ் செம வைரல். ‘பாட்ஷா’ படத்தில் ரஜினி என்ட்ரியாகும் பிஜிஎம்முக்கு இந்த லுங்கி பாய்ஸ் போட்ட டான்ஸ் வேற லெவலில் ஹார்ட்டின்களை அள்ள, லுங்கியே அடையாளமாகிவிட்டது. விளையாட்டாக ஆரம்பித்தது சினிமா வரைக்கும் கூட்டிவந்துவிட்டது. ‘கணேசபுரம்’, ‘செல்ஃபி’ என வரிசையாகக் கையில் படங்கள்.

ஆபாசத்துக்கு நோ, பெண் கிண்டலுக்கும் நோ!

‘‘எனக்கு தேவகோட்டை. அப்பா ஊர்ல மளிகைக்கடை வச்சிருக்கார். இன்ஜினீயரிங் படிச்சா புள்ளை வாழ்க்கை மாறிடும்னு நம்பி கொடைக்கானல்ல இருக்கிற ஒரு காலேஜ்ல சேத்துவிட்டார். குளிர்ச்சியான ஊர்ல இருந்தா நம்ம நிறமாவது கொஞ்சம் மாறுமேன்னு நானும் போயிட்டேன். அந்த காலேஜே பார்க் மாதிரியிருக்கும். நாலு வருஷத்தையும் என்ஜாய் பண்ணியே போக்கிட்டோம். கடைசியாப் பாத்தா 42 பேப்பர்ல 30 அரியர். எல்லாத்தையும் ஒரு வழியா பாஸ் பண்ணி வேலை தேடுறதுக்குள்ள வயசு ஏறிப்போச்சு. எப்படியாவது புள்ளையை வெளியில கிளப்பிவிட்டுட்டாப் போதும்னு வீட்டுல நினைக்கிற அளவுக்கு நம்ம டார்ச்சர். ஒருவழியா சென்னை வந்து போராடி ஒரு கம்பெனியில வெப் ரிசர்ச் அனலிஸ்டா வேலைக்குச் சேந்துட்டேன். அம்பத்தூர் எஸ்டேட்ல ரூம் எடுத்துத் தங்கியிருந்தேன்.

அப்போதான் ‘மியூசிக்கலி’ ஃபேமஸாச்சு. தனிமையில கிடந்த நமக்கு அதுதான் பொழுதுபோக்கு. சூப்பர் ஸ்டாரும் வடிவேலுவும் நம்ம ஆதர்சம். அவங்களோட டயலாக்கை வச்சு நாமளும் ஏதாவது செய்யலாம்னு தோணுச்சு. ஆனா, அதுல ஏகப்பட்ட பேரு கலக்கிக்கிட்டிருந்தாங்க. இதுக்குள்ள நுழைஞ்சு நாம என்ன செய்யமுடியும்னு தயக்கமா இருந்துச்சு. எல்லாரும் பேன்ட் போட்டுக்கிட்டுப் போறப்போ நாம லுங்கி கட்டிக்கிட்டுப் போனா வித்தியாசமாப் பாப்பாங்க இல்ல, அப்படி யோசிச்சுதான் லுங்கி கட்டிக்கிட்டு வீடியோ பண்ண ஆரம்பிச்சேன். நிறைய பேர் ரசிச்சாங்க. ஃபாலோவும் அள்ள ஆரம்பிச்சிருச்சு. கார்த்திக், அரவிந்த், ஹரி, நிர்மல் எல்லாரும் வந்தபிறகு லுங்கி பாய்ஸ்ங்கிற பேரு வைரலாயிருச்சு...’’ என்கிறார் ராஜ்பிரியன்.

‘கணேசபுரம்’ படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்திருந்த ராஜ்பிரியன் ‘செல்ஃபி’ படத்தில் ஜி.விக்கு நண்பர். பெயரிடப்படாத வேறு இரண்டு படங்களிலும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

லுங்கி பாய்ஸ்களில் ஒருவரான ஹரிகரனும் தேவகோட்டைக்காரர்தான். கொடைக்கானல் கல்லூரியில் ராஜ்பிரியனுக்கு ஜூனியர். கேம்பஸில் செலக்டாகி சென்னைக்கு வந்தவர் ராஜ்பிரியன் ரூமில் தங்க, அப்படியே லுங்கி டீமிலும் ஐக்கியமாகிவிட்டார்.

‘‘லுங்கிடான்ஸ்ல துளிகூட ஆபாசம் இருக்கக்கூடாதுங்கிறதுல தெளிவா இருந்தோம். குறிப்பா பெண்களைக் கிண்டல் பண்றதுமாதிரி வந்துடக்கூடாதுங்கிறதுலயும் கவனமா இருந்தோம். டிக் டாக் ஆரம்பிச்சு இப்போவரைக்கும் நாங்க போடுற வீடியோவுல ஒரு நெகட்டிவ் கமெண்ட்கூட வராது. வீடியோவுக்கான கான்செப்ட் எல்லாமும் ராஜ்பிரியனோடதுதான். எல்லாரும் வேலைக்குப் போயிட்டு சாயங்காலம் ஆறுமணிக்கு வருவோம். அதிகாலை 3 மணி வரைக்கும் வீடியோ எடுப்போம். அதுக்கப்புறம் நாலுமணி நேரம் தூங்குவோம். ‘மங்காத்தா’, ‘கத்தி’ தீம் மியூசிக்குக்கெல்லாம் காமெடியா டான்ஸ் போடுவோம்... அஜித், விஜய் ஃபேன்ஸ்கூட ரசிப்பாங்க’’ என்கிற ஹரி நிறைய குறும்படங்களில் நடித்திருக்கிறார்.

காலில் ஷூ, தொடை தெரியும் டவுசர், டவுசர் தெரியும் லுங்கி, கூலிங்கிளாஸ் என காமெடி வில்லன் போலிருக்கும் நிர்மல், திருநெல்வேலிக்காரர். ரஜினி மக்கள் மன்றத்தில் பொறுப்பில் இருந்தவராம். ‘கணேசபுரம்’ படத்தில் நடிக்க வந்தவர் ராஜ்பிரியனோடு நட்பாகி லுங்கி பாய்ஸ்களில் ஒருவராகிவிட்டார்.

ஆபாசத்துக்கு நோ, பெண் கிண்டலுக்கும் நோ!

‘‘வாழ்க்கை வேறவேற மாதிரி போகப்பாத்துச்சு. எப்படியோ பேக்கப் ஆகி சென்னைவந்து ராஜ்பிரியனோட சேந்துட்டேன். ராஜ் எனக்கு இன்னொரு வாழ்க்கையைக் கொடுத்திருக்கான். எங்கே போனாலும் `லுங்கி பாய்ஸ் டீம்ல நீங்கதானே காமெடி பண்ணுவீங்க'ன்னு நிக்க வெச்சு செல்பி எடுக்குறாங்க. `கஞ்சிக்கலையம்'ங்கிற பேர்ல டிக்டாக்ல தனி அக்கவுண்டே வச்சிருக்கேன். இப்போ சில படங்கள்ல காமெடி ரோல் பண்ணியிருக்கேன். ஒரு படத்துலயாவது நம்ம ஒரிஜினல் கேரக்டர்ல வில்லனா நடிச்சிடணும்’’ என்று சிரிக்கிறார் நிர்மல்.

லுங்கி பாய்ஸின் கேமராமேன் கோபி. கேரக்டருக்கு ஆளில்லை என்றால் இந்தக் கோவில்பட்டிகாரருக்கும் லுங்கிகட்டி விட்டுவிடுவார்களாம்.

‘‘டிக்டாக் பத்தி நிறைய தப்பான எண்ணம் இருக்கு. எங்களைப் பொறுத்தவரை அதுல நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கு. எங்களுக்கு டிக்டாக்ல 2.6 மில்லியன் பாலோயர்ஸ் இருந்தாங்க. கஜா புயல் வந்தப்போ, அந்த மக்களுக்கு உதவுறதுக்காக டிக் டாக்ல போஸ்ட் போட்டோம். உலகெங்கும் இருக்கிற சொந்தங்கள் 4 லட்சரூபாய் அனுப்பினாங்க. அதைவச்சு நாகப்பட்டினம் மாவட்டத்துல நிறைய பேருக்கு உதவி செஞ்சோம். இப்போ, எந்தப் பின்புலமும் இல்லாத எங்களை சினிமா வரைக்கும் கூட்டிக்கிட்டு வந்திருக்கு. சோஷியல் மீடியாவை பாசிட்டிவா பாருங்க பாஸ்’’ என்கிறார் கோபி.

ஆபாசத்துக்கு நோ, பெண் கிண்டலுக்கும் நோ!

‘‘தொடக்கத்துல நாங்க வேலையத்துப்போய் இதையெல்லாம் செய்றோம்ன்னு எங்க குடும்பத்திலேயே திட்டிக்கிட்டிருந்தாங்க. இன்னைக்கு எங்கே போனாலும் நாலு பேரு சூழ்ந்துகிட்டுப் பேசுறதைப் பார்த்துட்டுப் பாராட்டுறாங்க. என் பேரு ராஜ்குமார். நான் ராஜ்பிரியன்னு மாத்தினது எங்க அப்பாவுக்குப் பிடிக்கலே. திட்டிக்கிட்டே இருப்பார். சமீபத்துல ஊருக்குப் போனப்போ அவர் ஓட்டுற வாகனத்துல `ராஜ்பிரியன்'னு எழுதியிருந்தார். அதைப் பார்த்தவுடனே கண்ணீர் வந்திருச்சு. லுங்கி பாய்ஸ் எங்க வாழ்க்கையை மாத்தியிருக்கு...’’ என்று நெகிழ்கிறார் ராஜ்பிரியன்.