Published:Updated:

11 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் களமிறங்கும் 'ஏகன்' இயக்குநர்

உ. சுதர்சன் காந்தி.

2008 ஆம் ஆண்டு வெளியான 'ஏகன்' படத்திற்கு பிறகு, ராஜு சுந்தரம் இயக்கும் அடுத்தப் படம்!

ராஜு சுந்தரம்
ராஜு சுந்தரம்

'செம்பருத்தி' படத்தின் மூலம் நடன இயக்குநராக அறிமுகமான ராஜு சுந்தரம், 200 படங்களுக்கு மேல் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். தவிர, 'ஜீன்ஸ்', '123', 'எங்கேயும் காதல்' உள்ளிட்ட பல படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவருடைய அண்ணன் பிரபுதேவா படங்கள் இயக்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து, இவரும் கதை எழுதி 'ஏகன்' என்ற படத்தை இயக்கினார். அதில் அஜித், நயன்தாரா, ஜெயராம் உள்ளிட்டோர் நடித்திருந்தினர். அதற்கு பிறகு, படம் இயக்காமல் நடனத்தில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார், ராஜு சுந்தரம்.

ஷர்வானந்த்
ஷர்வானந்த்

இந்நிலையில், பதினொரு ஆண்டுகள் கழித்து, மீண்டும் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். தெலுங்கில் உருவாகும் இப்படத்தில் ஷர்வானந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இப்போது அவர் '96' படத்தின் தெலுங்கு வெர்ஷனில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதனை முடித்துவிட்டு இந்தப் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வருட இறுதியில் துவங்க இருக்கும் இதன் ஆரம்பக்கட்ட பணிகள் விரைவில் தொடங்கவிருக்கிறது. தவிர, ஷர்வானந்த் - காஜல் அகர்வால் நடிக்கும் 'ரணரங்கம்' படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

உ. சுதர்சன் காந்தி.

Journalist @ Cinema Vikatan