Published:Updated:

Rambha:``எனக்காக பிரார்த்தனை செய்த உள்ளங்களுக்கு நன்றி!" - நடிகை ரம்பா நெகிழ்ச்சி

நடிகை ரம்பா

என் மகள் சாஷா இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார். மோசமான நாட்கள்; மோசமான நேரம் தயவுசெய்து எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

Rambha:``எனக்காக பிரார்த்தனை செய்த உள்ளங்களுக்கு நன்றி!" - நடிகை ரம்பா நெகிழ்ச்சி

என் மகள் சாஷா இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார். மோசமான நாட்கள்; மோசமான நேரம் தயவுசெய்து எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

Published:Updated:
நடிகை ரம்பா

ரஜினி, கமல், விஜய் என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடித்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைத் திரட்டியவர் நடிகை ரம்பா. கனடாவைச் சேர்ந்த தொழிலதிபரான இந்திரன் பத்மநாதனை 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர், கனடாவில் தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளான லாவன்யா மற்றும் சாஷா ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கனடாவில் குழந்தைகளுடன் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது சிறிய அளவிலான விபத்து ஏற்பட்டதாக நடிகை ரம்பா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

மேலும், 'சிறு காயங்களுடன் உயிர் தப்பி நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம், என் மகள் சாஷா இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார். மோசமான நாட்கள்; மோசமான நேரம் தயவுசெய்து எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

ரம்பாவின் இந்த இன்ஸ்டகிராம் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதைக் கண்ட அவரது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இந்த கார் விபத்துக் குறித்து வருத்தப்பட்டு ரம்பா மற்றும் அவரின் குடும்பத்தினர் நலமடைய தாங்கள் பிரார்த்தனை செய்வதாக தங்களின் சமூக வலைதளங்களிலும் ரம்பாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது நெகிழ்ச்சியுடன் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில். "நாங்கள் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்த அனைவருக்கும் உளப்பூர்வமாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எங்களுக்காக எப்போதும் பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் அனைவரது அன்பும் ஆதரவும் என்னை நெகிழ்ச்சியடைச் செய்துள்ளது. நானும் எனது குழந்தைகளும் இப்போது நலமாக இருக்கிறோம். குறிப்பாக, மகள் சாஷா நலமாக இருக்கிறார். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி விட்டோம்" என்று நெகிழ்ச்சியுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.