Published:Updated:

"கமல் சார், என்னை டக்குனு தூக்கிப்போட்டுட்டார்!"- ரமேஷ் கண்ணா #Panchathanthiram

பஞ்சதந்திரம்
News
பஞ்சதந்திரம்

கமல் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்த 'பஞ்சதந்திரம்' படம் ரிலீஸாகி 18 வருடங்கள் ஆனதையொட்டி, படத்தில் முக்கியமான காமெடி கேரக்டரில் நடித்திருந்த ரமேஷ் கண்ணாவிடம் பேசினேன்.

'' 'பஞ்சதந்திரம்' கதையைக் கேட்குறதுக்காக கமல் சாரின் ஆழ்வார்பேட்டை ஆபிஸூக்கு கே.எஸ்.ரவிக்குமார் சார் போயிருந்தார். என்னையும் வரச் சொல்லியிருந்தார். நான் போறதுக்குள்ள கதையைக் கேட்டு முடிச்சிட்டார் ரவிக்குமார் சார். அப்ப 'ரமேஷ் கண்ணாகிட்ட கதையைச் சொல்லாதீங்க. ஏதாவது சரியில்லைனு சொல்லி கெடுத்துடுவாரு'னு ஜோக் அடிச்சிட்டிருந்தார் ரவிக்குமார் சார். 'ஏன் சார் இப்படி சொல்றீங்க'னு கேட்டப்போ, 'கதையோட நாட் உனக்கு பிடிக்கமா போகலாம். அதனால தமாஷ் பண்ணேன்டா'னு சொன்னார்.

பஞ்சதந்திரம்
பஞ்சதந்திரம்

கடைசிவரைக்கும் இந்தப் படத்தோட கதையை என்கிட்ட சொல்லவே இல்ல. ஷூட்டிங் ஆரம்பிச்சி போயிட்டு இருந்த நேரத்துல, எல்லாரும், 'நீங்க இந்தப் படத்துல இல்லையா'னு விசாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. நேரா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போய், 'என்ன விளையாடிட்டு இருக்கீங்களா? படத்துல எனக்குனு எந்த கேரக்டரும் இல்லையா'னு கிரேஸி மோகன்கிட்ட கேட்டேன். உடனே, சர்தார்ஜி வேஷத்தை எனக்கு கொடுத்துட்டாங்க. தாடி, மீசையெல்லாம் ஒட்டி விட்டு சர்தார்ஜி தலைப்பாவும் போட்டுட்டாங்க. சிம்ரன், ரம்யாகிருஷ்ணன் டான்ஸ் ஆடுற பாட்டை ரெக்கார்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. நானும் சர்தார்ஜி வேஷம் போட்டுக்கிட்டு இங்கிட்டும் அங்கிட்டும் அலைஞ்சிட்டு இருந்தேன். 'இந்த வேஷம் போட்டுக்கிட்டா பக்கத்துல நிக்குறவனுக்குகூட என்னை அடையாளம் தெரிய மாட்டேங்குது'னு புலம்பிக்கிட்டே இருப்பேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதே மாதிரி இந்தப் படத்துல எனக்கு சண்டை காட்சியும் இருக்கும். காமெடி ஆக்டர் ஹீரோகூட சண்டை பண்ணது இந்தப் படத்துலதான். எனக்கு ஃபைட் வராதுனு தயங்கினேன். கமல் சார், 'நீங்க முதுகுல படுங்க. மத்த விஷயத்தை நான் பார்த்துக்குறேன்'னு சொன்னார். முட்டிக்கு Knee Cap-லாம் போட்டுட்டுப் போனேன். நானும் ஆக்‌ஷன்னு சொன்னவுடனே கமல் சார் முதுகுல படுத்தேன். டக்குனு என்னை தூக்கிப்போட்டு பல்ட்டி அடிச்சிட்டார். ஷாட் நல்லாவந்திருந்தது.

ரமேஷ் கண்ணா
ரமேஷ் கண்ணா

படம் ரிலீஸானவுடனே தியேட்டருக்கு படம் பார்க்கப் போயிருந்தேன். படத்துல சர்தார்ஜி வேஷத்துல இருந்ததனால என்னை யாருக்கும் அடையாளம் தெரியல. க்ளைமாக்ஸ் காட்சியில வேஷத்தைக் கலைச்சிட்டு, போலீஸ் வேஷத்துல வந்து நின்னவுடனே, 'டேய், ரமேஷ் கண்ணா டா'னு கத்துனாங்க. இந்தக் காட்சி வர வரைக்கும் யாருக்கும் என்னை அடையாளம்கூடத் தெரியல. இப்போ வரைக்கும் 'பஞ்சதந்திரம்' படத்தை எப்ப டிவில போட்டாலும் 10 பேராவது போன் பண்ணிடுவாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னையிலதான் ஷூட்டிங் நடந்தது. பெங்களூர்ல படம் நடக்குற மாதிரி திரையில காட்டியிருப்போம். ஆனா, பெங்களூர் வரைக்கும்லாம் போகல. சென்னையில முட்டுக்காடு ஏரியாவுல செட் போட்டிருந்தோம். கமலோட நண்பர்கள்னு ஃபிக்ஸ் பண்ணவுடனே மலையாளி ஜெயராமன், தெலுங்கு ஶ்ரீமன், கன்னடம் ரமேஷ் அரவிந்த், யூகி சேதுனு முடிவு பண்ணிட்டு ஷூட்டிங் போயிட்டாங்க. படமும் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டாச்சு. எப்போவும் கே.எஸ்.ரவிக்குமார் சார் அவரோட படத்துல எனக்குனு கேரக்டர் வெச்சிருப்பார். ஏன்னா, கிட்டத்தட்ட 30 வருஷதுக்கு மேல நாங்க பழகிட்டு இருக்கோம். அவரோட முதல்படம் 'புரியாத புதிர்' படம் ரிலீஸானவுடனே அடுத்ததா 'புதுக்காவியம்'னு ஒரு படத்தை எடுக்குறதா இருந்தது. விக்ரம் சார் ஹீரோவா கமிட்டாகி ரெண்டு நாள் ஷூட்டிங் போனோம். ஆனா, ஏதோ காரணத்துனால அந்தப் படம் டிராப் ஆகிருச்சு.

கே.எஸ்.ரவிக்குமார்
கே.எஸ்.ரவிக்குமார்

இதே மாதிரிதான் நான் டைரக்‌ஷன் பண்ண படமும் டிராப் ஆகிருச்சு. அடிக்கடி ரவிக்குமார் சார்கிட்ட சொல்லிட்டு ஃபீல் பண்ணுவேன்.'கவலைப்படாதீங்க தொடர்ந்து வேலை பார்ப்போம்'னு சார் பதில் சொன்னார். 'புதுக்காவியம்' படம் நின்னவுடனே 'சேரன் பாண்டியன்' வேலைகள்ல ரவிக்குமார் சார் இறங்கிட்டார். இந்தப் படத்தோட ஸ்க்ரிப்ட் டிஸ்கஷன்போது கடைசி நேரத்துல போனேன். அப்போதுல இருந்து இப்போ வரைக்கும் ரவிக்குமார் சாரின் பெரும்பாலான படங்கள்ல இருப்பேன். இத்தனை வருஷமா நெருங்கிய நண்பர்களாவும் இருக்கோம்" என்றார் ரமேஷ் கண்ணா.