Published:Updated:

ஹன்சிகா, ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடிக்கும் புதிய படம்!

'சூப்பர் டீலக்ஸ்' படத்துக்குப் பிறகு, நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழில் புதிய படமொன்றில் கமிட்டாகியுள்ளார்.

ரம்யா கிருஷ்ணன்
ரம்யா கிருஷ்ணன்

'குலேபகாவலி’ , 'காத்தாடி' ஆகிய படங்களை இயக்கியவர் கல்யாண். இந்தப் படங்களுக்குப் பிறகு ஜோதிகாவை வைத்து இயக்கிய 'ஜாக்பாட்' படம் சமீபத்தில்தான் வெளியானது. இப்படத்தை நடிகர் சூர்யா, அவரின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்தார். யோகி பாபு, ஆனந்த்ராஜ், தங்கத்துரை, 'நான் கடவுள்' ராஜேந்திரன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல காமெடி நட்சத்திரங்கள் இதில் நடித்திருந்தனர். மேலும், ஜோதிகாவின் அடாவடிக் கூட்டாளியாக ரேவதி நடித்திருந்தார். இதையடுத்து கல்யாண் இயக்கவிருக்கும் அடுத்த படமும் ஹீரோயின் சப்ஜெக்ட் கதையாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹன்சிகா, ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடிக்கும் புதிய படம்!

விரைவில் ஷூட்டிங் தொடங்கவிருக்கும் இந்தப் படத்தில் நடிகை ஹன்சிகா நடிக்க இருக்கிறார். இவரைத் தவிர முக்கியமான ரோலில் நடிக்க ரம்யாகிருஷ்ணன் கமிட்டாகியுள்ளார். இதுபற்றிய அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹன்சிகாவும் ரம்யா கிருஷ்ணனும் சுந்தர்.சி எடுத்த 'ஆம்பள' படத்தில் ஏற்கெனவே இணைந்து நடித்திருந்தார்கள். கல்யாணின் மற்ற படங்களைப் போல் இந்தப் படமும் காமெடி ஜானராக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த புராஜெக்ட்டுக்குப் பிறகு, கல்யாண் முன்னணி நடன இயக்குநரை வைத்து படம் ஒன்றை இயக்குவார் என எதிர்பார்ப்படுகிறது.