Published:Updated:

``யாரையும் இமிடேட் செய்யவில்லை!" - `குயின்' ரம்யா கிருஷ்ணன் ஷேரிங்ஸ்

ரம்யா கிருஷ்ணன்
ரம்யா கிருஷ்ணன்

எனக்கு ஓவரா வேலை செய்ய பிடிக்காது. என்னுடைய பர்சனல் நேரம், நிச்சயம் எனக்கானது. அதைக் கணக்குப் பண்ணிதான் மத்த வேலைகளை அமைச்சுக்குவேன்.

ரம்யா கிருஷ்ணன்... 'பாகுபலி'யில் அரசியாக மகிழ்மதியை ஆண்டவர், இப்போது 'குயின்' வெப் சீரிஸில் மாநிலத்தை ஆள்பவராக வலம் வருகிறார். சினிமாவில் 35 ஆண்டுகள் கோலோச்சிவிட்டு, அடுத்த கட்டமாக வெப் சீரிஸில் காலடி வைத்திருக்கிறார். அந்த அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

'குயின்' பத்தி கெளதம் மேனன் சொல்லும்போது எப்படி ஃபீல் இருந்துச்சு?

எனக்கு குயின் கதை ரொம்ப பிடிச்சிருந்தது. இந்த மாதிரி அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்கிறதுன்னா எனக்கு இஷ்டம். நீலாம்பரி, சிவகாமிதேவி வரிசையில் 'ஷக்தி சேஷாத்ரி' கதாபாத்திரமும் நிச்சயம் பேர் வாங்கும். வாழ்க்கையில் தனக்கு வர்ற ஒவ்வொரு தடையையும் தாண்டி சாதிக்கிற ஷக்தி சேஷாத்ரியை எல்லா பெண்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். எனக்கு இந்த வாய்ப்பு கிடைச்சதில் பெருமையாவும் மகிழ்ச்சியாவும் இருக்கு!

'குயின்' வெப் சீரிஸுக்கு ஹோம் வொர்க் தேவைப்பட்டுச்சா?

இல்லை. என்கிட்ட 'யாரையும் இமிடேட் பண்ண வேண்டாம். யாரை மாதிரியும் இருக்க முயற்சி செய்ய வேண்டாம். கதையை உள்வாங்கிட்டு நீங்க எப்படி பண்ணுவீங்களோ அப்படி பண்ணுங்க, போதும்'னு சொல்லிட்டாங்க. அதைத்தான் நானும் செய்திருக்கேன். விரிவான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2siSl85

ஃபார்முலா எல்லாம் கிடையாது. ஒரு கதையைக் கேட்கும்போது என் மனசுல ஏதாவது ஃபீல் ஆச்சுன்னா, உடனே 'ஓகே' சொல்லிடுவேன்.

உங்களுடைய 35 ஆண்டு சினிமா பயணத்துல, 'இப்படிப்பட்ட கேரக்டரை நாம இன்னும் பண்ணலியே'ன்னு தோணினது உண்டா?

அப்படி நான் நினைச்சதே இல்லை. அம்மன், 'பஞ்சதந்திரம்' மேகி, 'படையப்பா' நீலாம்பரி, 'பாகுபலி' சிவகாமிதேவி, 'சூப்பர் டீலக்ஸ்' லீலான்னு நான் பண்ணினது எல்லாமே ரொம்ப சவாலான கேரக்டர்கள். இனி வரப்போற கதாபாத்திரங்களும் இப்படியே இருக்கணும்னு ஆசைப்படறேன்.

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எப்படி தேர்ந்தெடுக்கறீங்க?

ஃபார்முலா எல்லாம் கிடையாது. ஒரு கதையைக் கேட்கும்போது என் மனசுல ஏதாவது ஃபீல் ஆச்சுன்னா, உடனே 'ஓகே' சொல்லிடுவேன். சில நேரங்கள்ல அப்படி மனசு ஃபீல் ஆகும். சில நேரங்கள்ல பணத்துக்காக மனசு 'ஓகே'ன்னு சொல்லும். இந்த மாதிரி வெவ்வேறு காரணங்களை வெச்சுதான் தேர்ந்தெடுக்கிறேன்.

``யாரையும் இமிடேட் செய்யவில்லை!" - `குயின்' ரம்யா கிருஷ்ணன் ஷேரிங்ஸ்

நிறைய மொழிகள்ல நடிக்கறீங்க, இடையில கொஞ்ச காலம் சீரியல், ரியாலிட்டி ஷோ, இப்போ வெப் சீரிஸ்... நேரத்தை எப்படி மேனேஜ் பண்றீங்க?

எனக்கு ஓவரா வேலை செய்ய பிடிக்காது. என்னுடைய பர்சனல் நேரம், நிச்சயம் எனக்கானது. அதைக் கணக்குப் பண்ணிதான் மத்த வேலைகளை அமைச்சுக்குவேன். நம்மை வருத்திக்கிட்டு வேலை பார்த்தால் மனசார வேலை செய்ய முடியாது. எனக்கான நேரத்தை எடுத்துக்கிட்டால்தான் அமைதியான மனநிலை கிடைக்கும்; நிம்மதியா நடிக்க முடியும். குடும்பத்துடன் தேவையான நேரம் செலவு பண்றேன். ஒரேடியா குடும்பம்னோ, வேலைன்னோ இல்லாம 50-50ன்னு சரியா பேலன்ஸ் பண்ணிட்டு இருக்கேன்.

உங்க மகன் இப்போ என்ன பண்றார்?

ஒன்பதாவது படிச்சுக்கிட்டு இருக்கார். மியூசிக் பற்றி அவ்ளோ அப்டேட்டா இருக்கார். மியூசிக்ல இப்போ என்ன டிரெண்டுன்னு அவரை கேட்டா தெரிஞ்சுக்கலாம். ஆச்சர்யமா இருக்கு!

- இன்னும் நிறையவே பகிர்ந்திருக்கிறார், ரம்யா கிருஷ்ணன். அவரது பேட்டியை அவள் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > அவரை சந்திக்கவில்லையேன்னு ரொம்ப வருத்தப்படுறேன்! - ரம்யா கிருஷ்ணன் https://cinema.vikatan.com/tamil-cinema/exclusive-interview-with-actress-ramya-krishnan

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், ப்ரைம் கன்டென்ட்டுகளின் அப்டேட்களையும் தவறாமல் பெறுவதற்கு, விகடன் டிஜிட்டல் சந்தா செலுத்துங்கள். உங்களுக்காகவே இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு