சினிமா
Published:Updated:

“சூர்யா, ஜோதிகா வரை போய்தான் செலக்ட் ஆனேன்!”

ரம்யா பாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
News
ரம்யா பாண்டியன்

பெரிய வட்டம் எல்லாம் இல்லை. கொஞ்சமே தான் பிரெண்ட்ஸ். ஐஸ்வர்யா ராஜேஷ் ரொம்ப பிடிக்கும்

புன்சிரிப்பையே பூங்கொத்தாகக் கொடுத்து வரவேற்கும் ரம்யா பாண்டியன் ‘ஜோக்கர்’ படத்தைத் தொடர்ந்து மொட்டைமாடி போட்டோஷூட், பிக்பாஸ் எனப் பரபரப்பு கிளப்பியவர் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படத்துக்குப் பிறகு அடுத்த ரவுண்டுக்காகக் காத்திருக்கிறார்.

“சினிமாவுக்கு வருவேன்னு நினைச்சதே இல்லை. ஒரு குறும்படத்தில் நடிச்ச பிறகுதான் சினிமாவுக்கு வரும் ஆசை ஏற்பட்டது. அப்புறம் நடிப்பு வகுப்பில் கலந்துகிட்டேன். என் போட்டோஷூட் வைரலானது ஊருக்கே தெரியும். ‘ஜோக்க’ரில் நடிச்சதும் ‘ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்க’ன்னு எல்லோரும் புகழ்ந்தது சந்தோஷமா இருந்தது. ஆனால் நினைச்சபடி அடுத்தடுத்து படம் வரலை. என்ன காரணம்னு தெரியலை. வீட்லதான் உட்கார்ந்திருந்தேன். ரம்யா பாண்டியன்னு பெயர் சொன்னா பலருக்குத் தெரியலை. அப்பதான் ‘பிக்பாஸ்’, ‘குக் வித் கோமாளி’ன்னு இறங்கினேன். இப்ப எல்லோருக்கும் பெயர் தெரியும்கிற நிலை வந்திடுச்சு.”

“சூர்யா, ஜோதிகா வரை போய்தான் செலக்ட் ஆனேன்!”
“சூர்யா, ஜோதிகா வரை போய்தான் செலக்ட் ஆனேன்!”
“சூர்யா, ஜோதிகா வரை போய்தான் செலக்ட் ஆனேன்!”
“சூர்யா, ஜோதிகா வரை போய்தான் செலக்ட் ஆனேன்!”

“இன்னும் நீங்க எதிர்பார்த்த இடம் கிடைக்கலைன்னு தோணுதா?”

“‘இராமே ஆண்டாலும், இராவணே ஆண்டாலும்’ எனக்கு கௌரவமான புராஜெக்ட். படம் பார்த்திட்டு சிவகுமார் சார் மனைவி ‘அவ்வளவு நல்லாருக்கு... அந்த கிராமத்து ஜனங்களோடு ஒரு ஆர்ட்டிஸ்ட் மாதிரி தெரியாமல் அப்படியே இருக்கீங்க... பிரமாதமா இருக்கு’ன்னு பாராட்டினார். `தமிழ் பேசுகிற மண் சார்ந்த பெண் தேவை’ என 2D விளம்பரம் வந்திருந்தது. நான் ராஜசேகர் சாருக்கு போன் செய்தால் `நீங்க ‘ஜோக்க’ரில் வந்துட்டிங்களே’ன்னு தயங்கினார். ‘அதுக்கென்ன சார், நான் வந்துட்டு உங்கள் டீமால் செலக்ட் ஆகலைன்னா வந்துடப் போறேன். இதில் ஒரு பிரச்னையும் கிடையாது’ன்னு சொன்னேன். ஒரு பெரிய டயலாக் பேசி, அந்த வீடியோ ஜோதிகா மேடம், சூர்யா சார் வரைக்கும் போய் செலக்ட் ஆகிட்டேன். இப்படிப்பட்ட படங்களில் நடிக்கணும்னு ஆசையா இருக்கு. இந்தப் பொண்ணு நடிச்சா, நம்பி வரலாம்னு மக்கள் சொல்லணும். இப்படி ஒரு இடத்துக்குத்தான் இவ்வளவு எதிர்பார்ப்பு. வருவேன்னு நினைக்கிறேன்.”

“சூர்யா, ஜோதிகா வரை போய்தான் செலக்ட் ஆனேன்!”
“சூர்யா, ஜோதிகா வரை போய்தான் செலக்ட் ஆனேன்!”
“சூர்யா, ஜோதிகா வரை போய்தான் செலக்ட் ஆனேன்!”
“சூர்யா, ஜோதிகா வரை போய்தான் செலக்ட் ஆனேன்!”

“படங்களைவிட மொட்டைமாடி போட்டோஷூட் உங்களைப் பிரபலமாக்கிடுச்சே?”

“ஆமா. யார்கூட பேசினாலும் நிச்சயம் அதைப்பத்திப் பேசுவாங்க. இப்படி வைரல் ஆகும்னு எதிர்பார்க்கவே இல்ல. என்னுடைய லுக் எப்படி இருக்குன்னு பார்க்க எடுத்த போட்டோஷூட் அது.”

“மத்த ஹீரோயின்களிடம் சகஜமாகப் பழகுவீர்களா?”

“பெரிய வட்டம் எல்லாம் இல்லை. கொஞ்சமே தான் பிரெண்ட்ஸ். ஐஸ்வர்யா ராஜேஷ் ரொம்ப பிடிக்கும். அவங்க கலர், லுக், நடிப்பு எல்லாத்துக்கும் நான் ரசிகை. நல்லாப் பேசுவாங்க. வாணி போஜனும் ஆல் டைம் ஃபேவரைட். லிஸ்ட் ஓவர்.”