Published:Updated:

`தொடரும் கொண்டாட்டம்!’- வைரலாகும் நடிகர் ராணா-மிஹீகா பஜாஜ் `ப்ரீவெட்டிங்’ போட்டோக்கள்

ராணா டகுபதியின் வருங்கால மனைவி மிஹீகா பஜாஜ்
ராணா டகுபதியின் வருங்கால மனைவி மிஹீகா பஜாஜ்

``நடிகர் ராணா டகுபதியின் வருங்கால மனைவி மிஹீகா பஜாஜ் பாரம்பர்ய உடைகள் அணிந்து எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்”

`பாகுபலி' படத்தின் மூலமாக இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர், ராணா டகுபதி. சில நாள்களுக்கு முன்பு மிஹீகா பஜாஜ் என்பவரைக் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர்களின் திருமண ஏற்பாடுகளும் நடந்து வந்தன. அவர்களின் திருமணத்துக்கான நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

இதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின. ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி இவர்களின் திருமணம் நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான பிரச்னைகளால் திருமணத்தை மிகவும் எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், அவர்களின் ப்ரீ வெட்டிங் செரிமனி ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

நடிகர் ராணா டகுபதியின் வருங்கால மனைவி மிஹீகா பஜாஜ் பாரம்பர்ய உடைகளை அணிந்து எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திருமணத்துக்கு முன்பு சடங்காக நடக்கும் சில நிகழ்வுகளை அவர்களின் குடும்பத்தினர் தற்போது நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

மிஹீகா, புதினா பச்சை லெஹெங்கா உடை மற்றும் ஆபரணங்கள் அணிந்தபடி எடுத்த தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அதன் கேப்ஷனில், ``கொண்டாட்டங்கள் தொடர்கின்றன. என்னுடைய நாள்களை மிகவும் சிறப்பாக மாற்றியதற்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

மிஹீகா, ஹைதராபாத்தில் இன்டீரியர் டிசைனராகப் பணியாற்றுகிறார். இவர் டிசைன் ஸ்டூடியோ ஒன்றைச் சொந்தமாக நடத்தி வருகிறார். ராணா டகுபதி மற்றும் மிஹீகாவின் திருமணம் ஹைதராபாத்தில் உள்ள மிகப்பெரிய அரண்மனையான ஃபலக்னுமாவில் நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது.

எனினும் இதுதொடர்பான தகவல்கள் எதுவும் உறுதிபடுத்தப்படவில்லை என்றே தெரிகிறது. அரசாங்கம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இவர்களுடைய திருமணம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். தற்போது, இவர்களுக்கு பிரபலங்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ராணா காதலிக்கும் மிஹீகா பஜாஜ்... காதல் மலர்ந்தது எங்கே, எப்படி?
அடுத்த கட்டுரைக்கு